Sunday, December 17, 2023

மாதங்களில்மார்கழி #ஆண்டாள் #பாவைநோன்பு #திருப்பாவை

#மாதங்களில்மார்கழி  
#ஆண்டாள் #பாவைநோன்பு #திருப்பாவை
———————————————————

இன்று மார்கழி துவக்கம் : 

மாதங்களில் நான் மார்கழி 

மாதங்களில் நான் மார்கழி என்கிறான் கண்ணன் கீதையில் ! 

ஏன் இத்தனை விசேஷம் இந்த தமிழ் மாதம் மார்கழிக்கு ? 

பூலோகத்தில் நம் மார்கழி மாதம் என்பது தேவர்களது காலக்கணக்கில் அதிகாலைப் பொழுது. அப்போது தான் அவர்களும் அர்ச்சாவதாரத்தில், 

திருக்கோயில்களில்  எழுந்தருளியுள்ள இறைவனைக்காணவும் , பூஜை செய்யவும் பூலோகம் வந்து செல்வதாக புராணங்கள் உரைக்கின்றன.

விஷ்ணு சித்தராக பூக்களைத்தொடுத்து ,திரு வில்லிப்பூத்தூரில்  வடபத்ரசாயியாக பள்ளிக்கொண்டுள்ள 

பெருங்கோயிலுடையானுக்கு திருத்தொண்டு புரிந்து வந்த பெரியாழ்வாருக்கு துளசி வனத்தில் கிடைத்தப்பெண் கோதை என்று அவரால் திரு நாமம் சூட்டப்பட்ட ஆண்டாள்.

சிறுவயது முதலே , கண்ணனின் மேல் தனக்குள்ள காதலை தன் வளர்ப்புப்பெண்ணிற்கும் சொல்லித்தந்தார் பெரியாழ்வார் . 

அதுவே
 கண்ணனையே தன் கணவனாக வரிக்கும் அளவிற்கு ஆண்டாளின் பக்தியும் மானிடரை மணம் புரியேன் ! மணந்தால் மாதவனையே மணப்பேன் என்னும் உறுதியையும் காதலையும் விதைத்தது. (இறைவனின் லீலை அல்லவா அது :)) 

சிறுமியாக ஆண்டாள் இருந்தபோது காசியிலிருந்து ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வருகிறார். குழந்தையான ஆண்டாள் கண்ணனின் கதை கேட்க ஆவலாகிறாள்.

 அவர் அதில் கோபியர்கள் கண்ணனையே தம் கணவனாக அடைய யமுனா நதிக் கரையில் காத்யாயனி விரதம் மேற்கொண்ட கதையை சொல்கிறார். 

கேட்ட பெண் மனதில் நாமும் ஏன் அதே போல் விரதம் மேற்கொண்டு கண்ணனை அடையக்கூடாது என்ற கேள்வி எழ தன்னையே அந்த இடைச்சிப் பெண்களில் ஒருவளாக எண்ணிக்கொண்டு , திருப்பாவை இயற்றி நோன்பு நோற்கிறாள் ! 

தன் மேனி முழுவதும் தயிர் , பால் வாடையே வீசும்படி நினைவிலும் ஆய்ச்சிமார்களில் ஒருத்தியாக மாறி தானே கண்ணனின் திருமாளிகைக்கு சென்று ,

பறை வேண்டுமெனக் கேட்கிறாள் , அனைத்தும் அவளது நினைவுகளாக , பாடல்களாக.. அது இந்த மார்கழி மாதத்தில். 

பூமியை மீட்க திருமால் பன்றியாக அவதாரம் எடுத்து வரும் போது பூதேவி மானிடர் துன்பம் நீங்கி , தன் கர்ம வினைகள் அறுபட்டு உம்மை வந்தடைய என்ன செய்ய வேண்டும் என கேட்க

 அப்போது அவர் உபதேசித்ததையே , ஆண்டாள் பூமி பிராட்டியின் அவதாரமாக வந்து திருப்பாவையாக தந்ததாக ஆன்மீக சான்றோர் கூறுவர்.

வேதங்களின் எளிய சாரமாக..எளிய தமிழில் பாடியுள்ளதே திருப்பாவை என்கின்றனர் ஆன்றோர்கள்.

 மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி இறைவனை தொழுதிட இன்னல்கள் தீர்ந்து , இவ்வுலக வாழ்வும் சிறந்து அவ்வுலகமும் கிட்டும் என்கிறது புராணங்கள்..

இன்று முதல் இம்மாதம் முழுக்க  இம்மையை போக்கும் நாராயணன் நாமம் சொல்லிட நலம் விளைந்திடுமே !!

#ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  7ஆம் நூற்றாண்டில்  தென்புலத்து தமிழகத்தில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. ஆண்டாளின் அழகிய மார்கழி மாதம் குறித்த 14ஆம் ஆம் நூற்றாண்டு நினைவாக இங்கே அவரை நாம் ஞாபகம் கொள்கிறோம்.




மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

இடைக்கால இந்தியாவின் பக்தி 'இயக்கம்' ஆரம்பத்தில் 19 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ மிஷனரிகள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் ஐரோப்பாவில் புராட்டஸ்டன்ட் இயக்கத்திற்கு ஒத்ததாக கருதப்பட்டது  . இந்த கட்டமைப்பின் மூலம் பக்தி மற்றவற்றுடன் நெறிமுறை, சமத்துவம் மற்றும் சித்தாந்த ஏகத்துவமாக கொண்டாடப்பட்டது. இந்தக் கட்டமைப்பு பலமுறை விமர்சிக்கப்பட்டாலும், சமய அறிஞர்கள் பக்தியை குறைந்தபட்சம்  பாலின சமத்துவமாகப் பார்க்கும் வரையில் இது தொடர்ந்து நீடித்து வருகிறது. அப்படியென்றால் இடைக்கால பக்தியின் கீழைத் தேயம் அல்லாத மதிப்பீட்டின் நிலை என்னவாக இருந்திருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை ஆராய்வதற்காக, ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் பற்றிய ஆய்வு மற்றும் அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளை இந்த கட்டுரை ஆராய முயல்கிறது.
பக்திக்கான சமத்துவம் என்ற ஆணாதிக்க ஆய்வறிக்கையானது, பெண்கள் மற்றும் 'கீழ் சாதியினர்' தங்களை வெளிப்படுத்த அதிக இடம் கொடுத்துவிட்டதாக அதன் இறுதியில் கூறுகிறது.,  இதற்கு எதிர்மறையாக ப் பெண் துறவிகள் உள்ளிட்ட முன்னோடிப் பெண்ணியவாதிகள் பலரும், ஆணாதிக்கத் துறவிகள் தங்களது சடங்கு நடைமுறைகளை விமர்சிக்கிறார்கள் என்று சொல்லி  நிறுவனமயமாக்கப்பட்ட மத வடிவங்களை நிராகரித்தார்கள்!, பாலியல் நெறிமுறைகளை மறு பரிசீலனைக்கும் சவாலுக்குமான முறைகளாக அவர்கள் முன் வைத்தார்கள். அவர்கள் காலத்திய  பெண்ணின் அறமானது, கடவுளை  நேரடியாகத்தாங்கள் அணுக அனுமதித்ததோடு , சமூக சீர்திருத்தவாதத்தில் தங்களின் கலகத்தன்மையை இப்படியாக பாலுறவு தன்மையோடு முன்மொழிய இடம் இருப்பதாக உரிமை கோரியது.  ஆண் பெண் சமத்துவம் பற்றிய ஆய்வறிக்கையில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும், பக்தியில் நீண்ட காலமாகப் பார்க்கப்பட்டு வந்த புராட்டஸ்டன்ட் கட்டமைப்பின் காரணமாக, வசனங்களில் உள்ள முரண்பாடான சான்றுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும்  . பக்தி பெண்கள்-துறவிகள் பலரும் வாதிட்டார்கள். 
பெண்ணிய அறத்தை நிலைநிறுத்த இது போன்ற ஒரு சான்றுகள் பலவும் உள்ளன என்று தொடர்ந்து பேசும் அவர்கள்  பெரும்பாலான வரலாற்று மற்றும் பெண்ணிய ஆய்வுகள் இது தொடர்பான கேள்விகளை உணர்வுப்பூர்வமாக எழுப்பி உள்ளன என்று கூறுகிறார்கள்.பக்தியின் போது பெண்கள் சுதந்திரமானவர்கள் என்று கூறுவதில் சமத்துவ ஆய்வறிக்கையில் எழும் முரண்பாடுகளை அதே பெண்ணிய அறம்  தங்கள் வாதங்களால் பலவாறாக நிலைநிறுத்தினாலும் கூட உறுதியான மறுக்க இயலாத விளக்கமாக அது இருக்க வேண்டும்!  அந்த வகையில் அதற்கு ஒரு மாற்றுக் கோட்பாடு பெண்களுக்கு அவசியமானதும் சாத்தியமானதுமாக இருக்க வேண்டிய அவசியத்தை பெண் துறவிகள் வலியுறுத்திக் கொண்டே வந்தார்கள். பக்தி இலக்கியத்தின் இடைக்கால பக்தர்களால் பெண்ணுரிமைகள் சவாலுக்கு உட்பட்டன என்றும்,  மேற் சொன்ன அவர்களுக்கான வாய்ப்பை நாம் அனுமதித்தால்  அன்றி அவற்றை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள இயலாது என்றும் பெண் நல வாதிகள் வாதிட்டதன் மூலம் அதற்கான மாற்றீடுகள் பற்றிய விடைகள் ஆண்டாள் பாசுரங்களில் ஒரு மாற்று கோணமாக நிலவி வருவது  இந்த மார்கழி திங்களில் மதிநிறைந்த நன்னாளில்  அதாவது 2023 வரை  அதுவே மீண்டும் பெண் ஆண் நிலைப்பாட்டின் பேசு பொருளாகி இருப்பதையே நாம் மேலும் இங்கு தொடர்கிறோம்.
இதை விரிவாக பேசுவதற்கு முன்பு நான் சிறுவயதில் குறிப்பாக சிறு வயதில் இருக்கும் பொழுது நாங்கள் வாழ்ந்த கிராமத்தில்  எனது அம்மா இதே மார்கழி பனிக்காலத்தில் எங்களை அதிகாலையில் எழுப்பி குளிக்கச் சொல்லி வேட்டி ஒன்றை அணிந்துகொண்டு கோயிலுக்கு போய் வருமாறு ஒரு மாதம் முழுக்க வற்புறுத்துவார்.
அதிகாலை பனியில் முணுமுணுத்துக் கொண்டே சற்றே சலிப்புடன் அந்த பாசுரங்களை பாடியபடி கோயிலுக்கு நான் சென்று வந்தது ஞாபகம் இருக்கிறது அந்த  முன்பனிக்காலத்தில் இளம் பெண்கள் ஈரக்கூந்தலுடன்  வாசல்களைப் பெருக்கி வண்ண வண்ணமாய் க் கோலங்கள் இட்டு அதன் நடுவே  கோசாணக் குவியலை வைத்து அதன் மேல் ஒரு பூசணி பூவைச்செருகி நாள் தவறாமல்  அந்த முழு மாதத்தையும் கண்ணனுடைய வருகைக்காக கொண்டாடுவார்கள்! எங்கும் திருப்பாவையும் பள்ளிஎழுச்சியும் ஒலிக்கும் அக்காலம் அவ்வளவு அழகாகவும் ஒரு செவ்வியமாகவும் பக்தியுடன் சேர்ந்து ஒரு மன மகிழ்ச்சியை அளித்த நாட்கள் என்று இந்நாள் வரை நினைவில் வைத்திருக்கிறேன். அதுபோக அக்காலத்தில் திருநெல்வேலி ஆல் இந்தியா ரேடியோ ஒலிபரப்பில் மார்கழி மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாளும்  அதி காலையில் தூத்துக்குடி வ உ சி கல்லூரி முதல்வர் 1960களில்  தமிழ்அறிஞர், ஆங்கில பேராசிரியர் அ. திரு சீனிவாசன் ராகவன் அவர்கள் ஆண்டாள் திருப்பாவைப்பதிகங்களை  அவ்வளவு அழகியலுடன் ஒவ்வொரு சொல்லையும் வெவ்வேறு வகையில் எடுத்துரைத்து பின்னணியில் நிலைய வாத்யங்கள் பூபாளம் இசைக்க தாலாலோ எம்பாவாய் என்று  அவர் வர்ணித்து முடிக்கும் போதெல்லாம் தெருவெங்கும் பக்தி மணம் கமழும். ..  
ஆண்டாளின் அந்த  மலர்ச்சரம் சூடிய வட்டுக் கொண்டையும் மேனி முழுக்க வெண்பட்டு உடுத்திய அலங்காரமும் கால் கொலுசும் தண்டையும் கைக்கிளியும் அந்த அடவுமாய் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் எனும் தமிழ்  அன்னை  ஸ்ரீவில்லிபுத்தூரில் இம்மாத முழுக்க எழுந்தருளியிருப்பாள் என அம்மா அழகாக அந்த பாசுரங்களோடு கண் மயங்கிச் சொல்லுவாள். ஒருவேளை அவளது உளவியல் பூர்வமாக இத்தகைய பெண்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மருமகளாக வரவேண்டும் என்று கூட நினைத்திருப்பார்கள் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன்! அந்த வகையில் ஆண் பெண் உறவில் இந்த மார்கழி பாவியம்  பக்தியும் பாலியலும் சேர்ந்த ஒரு சிறப்பான  காவிய அழகியல்த்தன்மைகளைக் கொண்டிருந்தது என்று உறுதியாக சொல்லலாம். மேலும் விரிவாக்கம் செய்யும்போது அது குறிப்பிட்ட மேல் ஜாதி கீழ் ஜாதி என்று இல்லாமல் எல்லா ஆண்கள் பெண்களுக்குமான  காதலின் நாடகக் காவிய விழுமியங்கள் என்றாலும் பொருந்தும். அழகியலை இழந்து யார் தான் வாழ முடியும் .. இப்படியான பக்தி இலக்கிய காலம் தொடர்ந்து இன்றளவும் தமிழ் மக்களால் பூஜிக்கப்பட்டு வரும்  பன்னிரண்டாம் ஆழ்வார் ஆகிய ஆண்டாள் குறித்த பன்முக பார்வைகள் சிலவற்றை  விரிவான பார்வையில் இங்கு காண இருக்கிறோம்.

இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட  ஒரு முறையியலை  நிரூபிக்க, ஆண்டாள் பற்றிய ஒரு ஆய்வு இரண்டு கோணங்களில் எடுக்கப்படுகிறது. முதலில் சின்னஞ்சிறு  ஆண்டாளை ஒரு பெண்ணாக எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இரண்டாவதாக, ஆண்டாள் அன்றைய சமூகம் சார்ந்த சடங்கு மற்றும் பாலியல் நெறிமுறைகளை மீறினாரா?
இடைக்கால பக்தியின் வரலாற்று மற்றும் பெண்ணியப் புரிதல்கள் பல நிலைகளில் சிக்கலாக உள்ளது, ஏனெனில் அது  பல வகையான எதிர்ப்புகளோடு தங்களது பால் தன்மையை பெண்கள் வெளிப்பட பேசுவது தவறானது  சமய ஆகமங்களுக்கு எதிரானது என ஒலிக்கும் எதிர்ப்பாளர்களின் குரல்  மற்றும் அதனுடன் இணைந்த வேறு பல  சமத்துவ  சமூக ஆய்வறிக்கைகளுடன் பிணைக்கப்பட்டிருந்தது.

 இந்த சிக்கலில்   வெறும் யூகம் சார்ந்த விசுவாசம் சார்ந்த  அதாவது இம்மை மறுமை என்கிற வேண்டுகோளுக்கு அப்பால் சரணாகதியான பக்திக்கு அதன் பரிகாரத்திற்கு  நடைமுறை ஆதாரங்கள்  ஏதும் இல்லாததால் முரண்பாடான வாதங்களின் வடிவத்தில் அவை திகைப்பூட்டும்  கூச்சலாய் எழுந்ததை உணர்ந்த இக்கால நவீனத்துவ பின்வீனத்துவ ஆய்வாளர்கள் அதற்கான  ஒரு எதிர்வினையை உருவாக்கி தங்களது ஆய்வை நெறிமுறைப்படுத்தும் பொருட்டு  வடக்கே மீராபாய்  தெற்கே ஆண்டாள் இருவரையும் பெண்நிலைவாத வரலாற்றுக்காக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.!  தங்களின் அணுகல்களில் பெண்ணிய பால் தன்மைகளின் இயங்கியலை அதன் மறை பொருள் தன்மைகளைப் பேசி இறுதியாகப்  பல உண்மைகளை  எதார்த்தத்தின் உடலியல் தன்மைகளாக நம்முன்  வைக்கிறார்கள் . தொடர்ந்து சமத்துவ ஆய்வறிக்கைக்கான அர்ப்பணிப்பு, அதன் வரலாற்றாசிரியர்கள் மற்றும் பக்தர்களின் அசல் படைப்புகள் மற்றும் ஹாஜியோகிராஃபிகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது பாலின சமத்துவத்தின் எதிர்ப்பாளர்கள்   எங்கே தடுமாற்றம் கண்டு மேற்கண்ட முரண்பாட்டை இல்லாமல் ஆக்குகிறார்கள் ! மற்றபடி அதன் தேவை எங்கே முக்கியத்துவப்படாமல் பொதுமைப் படுத்தப்படுகிறது  என்ற அடிப்படையில் அதனை மேலும் விளக்கத்திற்கு இன்றைய ஆய்வாளர்கள் கொண்டு செல்கிறார்கள். அந்த வகையில் விதிக்கு விதிவிலக்காக ஒன்று அல்லது மற்றொரு அல்லது வேறு வேறு பன்மைத் துவமான உதாரணங்களை மேற்சொன்ன ஆய்வாளர்கள்  ஆண்டாளின் அக்கால இருத்தலியல் நிலைமைகளில் கலகமாகவும் பக்தியாகவும் பாடிய  அவரின் திருவாய்மொழிகளில் பேரளவு கிடைப்பதாக ப் பெரிதும் பரிந்துரைக்கிறார்கள்.

 இச்சூழலில், பக்தர்களின் நிலைப்பாடு குறித்து பல்வேறு அறிஞர்கள் தங்களுக்கான வேதனை, ஆச்சரியம், ஏமாற்றம் போன்ற பலவிதமான பதில்களை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில்
 பக்தி பெரும் ஆற்றலைக் கொண்டிருந்தாலும் அதன் வாக்குறுதியை அது நிறைவேற்றவில்லை;  ஒரு முழுமையான புரட்சி ஏதும் அதில் இல்லாததற்கு அதற்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது எந்த ஒரு முடிவை அறிவித்தார்கள். 

 அவ்வாறு கருதாத மற்றவர்களுக்கு, மேற்சொன்ன அறிஞர்களின் கூற்று "பாரம்பரியத்தின் போதிய கேள்விக்குறியீடு" ஆகவும் ஆணாதிக்கம் உட்பட அதன் அடிப்படைக் கருத்துகளை அதனளவில் உள்வாங்கி பிரதிபலிக்கிறது அன்றி பக்தியின் வேறு சாயல்களை காண மறுக்கிறது என்று
 ஆய்வாளர்கள் திட்டவட்டமாக அறிவிக்கிறார் கள்.

  அதாவது ஆண் ஒரு பெண் தன்மையை எடுத்துக் கொண்டாலும், பெண்ணாக இருக்கும் பக்தனுக்கும் பொதுவாக ஆணாக இருக்கும் தெய்வத்துக்கும் உள்ள உறவைப் பற்றி நாம் கேள்வி கேட்க விரும்பினால்,  அது ஏற்கனவே ஒருவித படிநிலை உறவை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
இன்னும் சிலருக்கு, அக்காமா தேவி, எனும் பெண் வீரசைவ துறவி, "குடும்பத்தின் நிறுவனங்களுக்கு சவால் விட்டவர்" (சுமித்ராபாய், 1997, 71) மற்றும் பக்தி நிச்சயமாக பெண்கள் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு சாதகமானது  என்பதை இங்கு மனம் கொள்ள வேண்டும்.
இடைக்கால பக்தியின் 'எதிர்பார்ப்புகள்', பக்தர்களின் உண்மையான ஆர்வங்களைக் காட்டிலும் அந்தக் காலகட்டத்தின் அதாவது நமது காலமற்ற வாசிப்புகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம். (நாம் அப்போது உண்மையில் இல்லை) .என்கிற முக்கியமான விஷயம் கிட்டத்தட்ட கவனிக்கப்படாமல் போகிறது. இன்றைய பெண்களுக்கு ஊக்கமளிக்கும் மூலோபாய, அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த காலத்திலிருந்து பெண்களை மீட்டெடுக்கும் பக்திசார்ந்த துறவிகளின் பெண்ணிய மறுசீரமைப்புகளில் இது குறிப்பான உண்மையென கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . பெண்ணிய அறிஞர்கள் பெரும்பாலும் அனைத்து மதங்களும் கலாச்சாரங்களும் பெண் பாலுணர்வை பயமுறுத்துகின்றன.அது போக அவசியமானது என்று சொல்லி பழம் நீதிகளைக்காட்டி பெண்களை அடிபணியச் செய்தன என்கிற அடிப்படையிலிருந்து பெண்ணியவாதிகள் அவற்றை முற்றிலுமாக மறுத்து வெளியேறுகிறார்கள் செயல்படுகிறார்கள். (மது கிஷ்வர் இந்தப் பிரச்சனையை நன்கு பிரதிபலிக்கிறார்:)
பெண்ணியவாதி என முத்திரையிடுதல் நிகழ்காலத்தை மட்டுமல்ல, கடந்த காலத்தையும் கூட சிதைக்கிறது. அக்கமாதேவி மீராபாய் போன்ற பெண்களின் வாழ்க்கையையும் கவிதையையும் நேர்மறையாக முன்வைத்ததற்காக டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பெண்ணியவாதிகள் குழு நடத்திய கருத்தரங்கில் வெளியில் இருந்து வந்த பொது சக்திகளால் தாக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. இந்தப் பெண்கள் பெண்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றி பேசவில்லை, அவர்கள் ஒரு கடவுளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு கணவனுக்கு  தங்களது அடிமைத்தனத்தை மாற்றுவதை ஏன் அதிகாரமாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது அவர்களின் வாதம். சுருக்கமாக, அவர்கள் பெண்ணியவாதிகள் என்று அழைக்கப்பட முடியாததால், பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வரலாற்று ஆதாரங்களுக்கு அவை போதுமானதாக இல்லை. மீராபாய் ஒரு பெண்ணியவாதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கவுதம புத்தரை காந்தியவாதி என்றும் அல்லது இயேசு கிறிஸ்துவை சிவில் லிபர்டேரியன் என்றும் அழைப்பது போல் பொருத்தமற்றது. ( மதுகிஷ்வர்)

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1
உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8

நீரோடைகள் எல்லா பக்கங்களிலும் ஓடுவது போல்" படைப்பை வழிநடத்தவும் பாதுகாக்கவும். விஷ்ணு ஹரி, துக்கம் மற்றும் மாயைகளை நீக்குபவர் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார், இது ஆண்டாளின் விஷயத்தில் குறிப்பாக கடுமையானது, ஏனெனில் அவள் தன்னை ஏற்றுக்கொள்ளவும் காப்பாற்றவும் மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறாள். அவள் அவனைப் பலவிதமாகப் பேசுகிறாள்: நாராயணா (சேஷநாகப் பாம்பின் மீது காரணமான நீரில் நடமாடுபவர்), நாராயண நம்பி (உலகளாவிய உறைவிடம்), திருமால் அல்லது மால் (தமிழ் இறையியலின் இருண்டவர்) மற்றும் அவருடைய பத்து முக்கிய அவதாரங்களில் ஏழு. ஆனால் பெரும்பாலும் அவள் அவனை கிருஷ்ணன், தெய்வீக குழந்தை மற்றும் காதலன் என்று அழைக்கிறாள். 

ஆண்டாளின் ஒவ்வொரு பாசுரங்களும் (பாடல்கள்) எப்பொழுதும் நிகழும் ஒவ்வொரு பொருளிலும் புனிதம் பொதிந்திருக்கும் விதத்தில் நனைந்துள்ளது; அதே சமயம் அவளை ஒளிரச் செய்ய காலத்தால் அழியாத அருளை வரவழைக்கிறாள். அவளது உடல் மற்றும் ஆன்மாவுக்குள் நுழைய பேரின்பத்திற்காக அவள் உணர்ச்சியுடன் பாடும்போது அடையாளம் மற்றும் எல்லைகளின் அனைத்து குறிப்பான்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆண்டாளைப் வாசிக்கும் போது அவளது இளமையை மனதில் கொள்ள வேண்டும். அவள் தீவிர வன்முறையை மூர்க்கத்தனமான சரணடைதலுடன் இணைக்கிறாள்;  நமது காஸ்மிக்  தற்காலிகத்தின் தரிசனங்களுடன் பாலியல் உடலின் ஆசைகளைப் பிரிக்கிறது. ஆயினும்கூட, ஆண்டாளுக்கு 'அத்துமீறல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை  தவிர்க்கிறோம், ஏனெனில் இது வேண்டுமென்றே விதிகளை மீறுவதைக் குறிக்கிறது. கவிதைகள் தவிர - சமூக மரபுகள் அல்லது விதிகள் பற்றி அவள் கவலைப்படவில்லை என்று தோன்றுகிறது.

ஆண்டாள் தனது பதின்மூன்று வயதில் இயற்றிய முதல் படைப்பான திருப்பாவை (கிருஷ்ணனுக்கான பாதை) ஒரு நல்ல கணவனைப் பெறுவதற்காக இளம் பெண்கள் மேற்கொண்ட சபதங்களின் பாடல் வரிகள் ஆகும்; இது சபை வழிபாட்டின் பாடல். தனது இரண்டாவது மற்றும் கடைசிப் படைப்பான நாச்சியார் திருமொழியில் (பெண்மணியின் புனிதப் பாடல்கள்) ஆண்டாள், தான் தேர்ந்தெடுத்த கடவுளுடன் ஆன்மிகம் மற்றும் பாலியல் சுதந்திரத்திற்கான தனது தனிப்பட்ட தேவையைப் பாடுகிறார், மேலும் அதுவும் புனிதமான உடலில் உள்ள ஏராளமான பெண் ஆசைகளை வெளிப்படையாகப் பாடுகிறார் . ஆண்டாள் இறுதியில் ஒரு டீனேஜ் துறவி-கவிஞராகவும் பின்னர் ஒரு தெய்வமாகவும் மாறுவாள், அவள் விஷ்ணுவின் மனைவியாக மாறியதும், தெய்வீகத்துடன் தன்னை நிச்சயிக்கப்பட்டதாகக் கருதி, ஒரு மரண மனிதனுடனான எந்தவொரு திருமணத்தையும் அக்காலத்திலேயே ஒரு பிரபலமாக இருந்து அதை முற்றிலும் 
 நிராகரித்தாள்.

ஆண்டாளின் முதல் படைப்பான திருப்பாவை (கிருஷ்ணனுக்கான பாதை) தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் புகழ்பெற்றது மற்றும் புனிதமான மார்கழி மாதத்தில் பக்தர்களால் பாடப்பட்டது. இது ஒரு நல்ல கணவனைப் பெறுவதற்காக இளம் பெண்கள் மேற்கொள்ளும் சபதங்களின் பாடல் மற்றும் பக்தி நிறைந்த விளக்கமாகும், மேலும் இது ஒரு வகையில் கூட்டு சபை வழிபாட்டின் பாடலாகும். இருப்பினும், பிற்கால நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அவள் தேர்ந்தெடுத்த கடவுளுடன் பாலியல் கூட்டுறவின் அதன் தனிப்பட்ட தேவையைப் பாடுகிறாள்.  உண்மையில் அது அவரதுதிருமணச் சடங்குகள் பற்றிய  கனவுகளை விளக்குகிறது. மற்றும் இன்றும் திருமணங்களில் பாடப்படும் பாடல் ஆறு தவிர - மற்ற 13 பாடல்கள் அடிக்கடி கேட்கப்படுவதில்லை, ஒருவேளை அவை உடலில் வெளிப்படையாக இருக்கும் ஏராளமான பெண் ஆசைகளைப் பற்றி பேசுவதால் இருக்கலாம். ஜூடியோ-கிறிஸ்தவ வின் பைபிள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் நாஸ்டிக் நூல்களைப் போலவே, அவற்றின் வெளிப்படையான பாலியல் குறியீடாகவும், பரம்பரைத் தன்மைக்காகவும், நாச்சியார் திருமொழியிலிருந்து ஆண்டாளின் பல பாடல்கள் பலரால் கருதப்படுகின்றன . உண்மையில் அது அக்காலத்தில் அத்துமீறி' இருந்தது.

 தான் விரும்பிய 'அவர்' ஒரு மனிதர் அல்ல, என்பது ஆண்டாளுக்கு தெரிந்தே இருக்கிறது.  ஆனால் அவர் பிரபஞ்சங்களின் பாதுகாவலர், கனவு காணும் விஷ்ணு, விண்மீன்கள் நிறைந்த அண்டப் பெருங்கடலில், மேக நிறப் பாம்பின் மீது தங்கியிருக்கிறார். 'காலத்தின் முடிவில்லா புரட்சிகளின் நித்தியம்'.  என்று இந்தப் பதிகத்தைப் பேசியவர் அப்போது பதினைந்து வயதுள்ள ஆண்டாள். பாலியல் மற்றும் பக்தி தீவிரத்தின் இந்த நிகழ்வு நாச்சியார் திருமொழி , பாடல் பதின்மூன்று, செய்யுள் ஒன்று. இறையியல் அடிப்படையில், மஞ்சள் பட்டு பெரும்பாலும் நாராயணனின் உடலின் புனித ஞானத்தின் முக்காடு என்று விளக்கப்படுகிறது. இதை பேசுபவரின் அதாவது ஆண்டாளின் கடவுளுடனான அதீத பரிச்சயம், இந்தக் கவிதைகளுக்கு உயர்ந்த சிற்றின்பத்தின் வினோதமான விளிம்பைக் கொடுக்கிறது.
13 ஆம் நூற்றாண்டின் அறிஞர் பெரியவாச்சான் பிள்ளையின் (உண்மையான சிறந்த ஆசிரியர்) விளக்கவுரையைக் குறிப்பிடுகிறோம்,
ஒரு பக்தித் துறவியாக, ஆண்டாள்பழைய தமிழில் இயற்றினார். இருப்பினும், இலக்கணம் மற்றும் கவிதைகள் பற்றிய செவ்வியல் ஆய்வுக் கட்டுரையான தொல்காப்பியத்தில் குறியிடப்பட்ட பல விதிகளைப் பின்பற்றுவதை இது குறிக்கிறது . காதல் மற்றும் தூண்டும் நிலப்பரப்பின் மனநிலைகளை உணர்ச்சியின் அடையாள இடங்களாக மாற்றும் அதன் திணை மரபுகளை அவள் பின்பற்றவில்லை , ஆனால் அதன் பிற புதிரான சிக்கல்களுடன்  பலவகையில் காவியத்தன்மையோடு உறவு கொண்டிருக்கிறாள். . இந்தப் படைப்பை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமத்தை அதிகப்படுத்துவது, எதுவெனில் பழங்காலத் தமிழர்கள், தொன்மத்தின் தூண்டுதல் மற்றும் சிக்கலான கவிதை உத்திகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளைப் புரிந்துகொண்டு கவிதைகளை 'முழுமைப்படுத்த' கேட்போர் மற்றும் வாசகர்களை எனும் இருமையை நம்பியிருந்தனர். இது பின்நவீனத்துவ வாசகர்-பதில் கோட்பாட்டைப் போன்றது, அந்த வகையில் ஏன் எந்த உரையிலும்  பொருள் உட்பொதிக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்கு எதிராக மேற்கண்ட ஆண்டாளின் பாடல் வாதிடுகிறது, மாறாக உரைக்கும் வாசகருக்கும் இடையிலான உறவுக்கு இடையில் இயங்கியல் ரீதியாக மட்டுமே பொருள் வெளிப்படுகிறது என்று நம்புகிறது.
அந்த வகையில் காலகலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஆண்டாள் திருப்பாவை உள்ளிட்ட அவரது மொத்த பாடல்களும்இறைக்காதல் என்னும் டிவைன் லவ்வில் மிகச் சிறப்பான உலக அந்தஸ்தைப் பெறுகிறது.

கிரேக்க காதல் காவியங்கள் வடக்கே அக்கமாதவி மீரா போன்றோரின் தனிச்சிறப்பான பெண்ணிய விழிப்புணர்வுடன் கூடிய பட்டியலில்  நமது கோதை ஆண்டாளும் தென்னிந்தியாவில் பிறந்து தமிழகத்தில் நிலவி வாழ்ந்து ஒரு சிறப்புமிக்க பதிகங்களை நமக்கு பெருமைப்பட கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் ஆண்கள் பலரும் எழுதிய பால் மற்றும் இருத்தலியல் பிரச்சினைகளுக்கு அப்பால் ஆண்டாள் எழுதிய கண்ணன் பாடல்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன.
கண்ணன் என்பது இங்கே காஸ்மிக் ஆற்றல் என்று மாறுகிறது. கண்ணனின் உறுப்பு நலன்களை பற்றி பாடும் போது ஒவ்வொன்றும் தனித்துவமான அழகில் அற்புதம் பெறுகின்றன இயற்கையை போலவே. காமமும் கடவுளும் ஒரு பெண்ணுக்கு தன்னிச்சையான தேர்விற்குரியதுதான் என்பதை முன் வைக்கிற போது அழகும் மொழியும் உணர்வும் பாலாவலும்  ஒன்றி நிற்கும் பாசுரங்களில் ஆண்டாளின் வீச்சு மிகத் துலக்கமாக மிக உயர்ந்த தன்மையில் வெளிப்படுகிறது.

இந்த மார்கழிப் பாவியத்தின் கடந்த கால உன்னதம் தொடங்க இருக்கும் இம்மாதத்தை உலகமெல்லாம் வாழும் தமிழர்களுக்கு நினைவூட்டி இந்த என் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

{ஆதாரங்கள்
உஷா வி டி 2007
சர்மா            1977
உமா சக்கரவர்த்தி 1989
சுகிர்தராஜா 2001
சாப்ரியா பிரியா சருகாய்  2013
ஒரு தெய்வத்தின் சுயசரிதை
தேசாய் மீரா 1994
கிஷ்வர் மது 2001

இந்த கட்டுரைக்கு தேவையான அளவு மட்டுமே மேற்கண்ட ஆய்வாளர்களிடமிருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது! விரிவாக வாசிக்க விரும்புவோர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளவும்.}

#ஆண்டாள்
#திருப்பாவை
#மார்கழி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-12-2023


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...