Wednesday, December 13, 2023

#*பலமான நன்மக்கள் ரௌத்திரம் பழகுனு….*



————————————
சுயமான ஆளுமை திறன் இல்லாதவர்கள் பொறுப்பான பதவிக்கு வருவது எப்பொழுதுமே தரக்குறைவான நிகழ்வாகவே முடிகிறது.

நீண்ட கல்வியும் அனுபவமும்  உண்மையான உழைப்பும் வரலாறும் அரசியலும் கற்றுத் தேர்ந்தவர்கள் எந்த ஒரு முடிவையும் மேற்கொள்வதற்கு முன் தன் சுய ஆளுமையை அதனுடன் இணைத்துத்தான் முடிவெடுப்பார்கள் அத்தகைய முடிவு ஏறக்குறைய எல்லாருடைய பிரதிபலிப்பாகவும் இருக்கும்.

ஆனால் தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அரைகுறையான முடிவுகளை எடுப்பது பிறகு அந்த முடிவு எடுத்த பிறகு அது தவறு என்று உணர்ந்து பின்வாங்குவது இவற்றையெல்லாம் சுய ஆளுமை திறன் உள்ளவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

இதனை இவன் செய்வான் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் சிறப்பு
என வள்ளுவர் கூறுவது இதைத்தான். அனுபவமும் பட்டறிவும் கல்வியும் சுய ஆளுமைத் திறனை ஒருவருக்கு உருவாக்குகிறது. அதன் மூலமாகத்தான் அவர் தலைமை பண்பை அடைகிறார் அப்படி இல்லாமல் ஒரு சூழ்நிலைக்கு இடையே தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் சுய ஆளுமை அற்றவராய் இருந்தால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் அவரைக் கைப் பாவையாக வைத்துக்கொண்டு தங்கள் மனம் போன போக்கில் ஏதாவது அபத்தங்களை செய்து மொத்த சூழ்நிலையையும் குழப்பத்திற்கு உள்ளாக்குவார்கள்.

ஒரு சரியான அமைப்பிற்கு தலைமை தாங்கும் ஒருவர் அந்த அமைப்பிற்குள்  நிகழும் அனைத்திற்கும் பொறுப்பேற்க  வேண்டி இருப்பதால் தனது கட்டுப்பாட்டிற்கு வெளியே அவ்மைப்பைச் சார்ந்த  யாரொரவரும் தனது உறவுகள் ஏதோன்றையும்  தன் போக்கில் பயன்படுத்த  இடம் தரக்கூடாது  என்பதைத்தான் நாம் சுய ஆளுமை அல்லது தலைமைப் பண்பு என்கிறோம் என்று சொல்கிறோம்.

அத்தகைய தலைமை பண்பிற்கு நிறைய ஆற்றலும் பல்வேறு வகையில் முடிவெடுக்கக் கூடிய திறனும் வரலாற்று அறிவும் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற செயல் ஊக்கமும் இருக்க வேண்டும்.

இதைத்  தலைமை பண்புக்காக மட்டும் சொல்லவில்லை ஒவ்வொரு தனி மனிதரும் பின்பற்ற வேண்டிய அவசியமும் கூட என்பதால் ஒருவருக்கு தன்னை நம்பி இருக்கக்கூடிய சுய பலமும் அதற்குரிய தன்மானமும் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படி இருக்கிறதா என்றால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. இங்கு #தகுதியேதடை. எனவே பலமான நன் மக்கள்  ரௌத்திரம் பழகுனு; இவர்களை விட்டு ஒதுங்கி உள்ளனர். இது அரசியல் கட்சிகளில் இன்றைய நிலை;  இந்த அமைப்புகள் செயற்கையாகவே உள்ளது. இயற்கையாக இல்லை. பம்மாத்து இயங்குவியல் அரசியல் ஆகி விட்டது. தெரியல்அற்ற,அறிதல்அற்ற அரை குறைகள் இயங்கும் வியாபாரதனமான அரசியல் ஆடுதளம். 

திமுக எதிர் கட்சியாக இருத்தல் நிலையில், அன்றைய சோதனைகள் போது என் போன்றவர்கள் திமுகவை தூக்கி பிடித்தோம். அன்று திமுகவை கலைஞரை கடுமையாக பரிகாசம் செய்தவர்கள்; இன்று இதே மனிதர்கள், ஆளும் திமுகவை ஒரு வாய் சோத்துக்கு எப்படியெல்லாம் இன்று  ஸ்டாலின் ஆதரவோடு முட்டு கொடுக்குறுது போல  கடுமையாக புகழ்வது/ஆதரித்து எம்பி/ எம்எல்ஏ/ ஏதோ வாரியம் என ஆசையில்… அவ்வளவுதான்.
திருவிளையாடல் பட தருமி போல வாழ்வு இருந்தால்  இவர்களுக்கு போதும்.

"The consciousness of life is higher than life, the knowledge of happiness is higher than happiness"
                         - Fyodor Dostoevsky (The dream of a ridiculous man)
இந்நிலையில்,
எப்போதும் சுய பலத்தினை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும்.அதுவே தன்மானம்.

#இன்றையஅரசியல்
#தமிழ்நாடு #MKStalinCM #திமுக #DMKFailsTN
#சிலசிந்தனைகள்.
.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
13-12-2023

.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...