Thursday, December 14, 2023

*இன்றைய தமிழகம் அறிய வேண்டிய அன்றைய திமுகபுள்ளி புதுக்கோட்டை புலவர் துரை மதிவாணன் அவர்களுக்கு 94 ம் அகவை இன்று*.

*இன்றைய தமிழகம் அறிய வேண்டிய அன்றைய திமுகபுள்ளி புதுக்கோட்டை புலவர் துரை மதிவாணன் அவர்களுக்கு 94 ம் அகவை இன்று*.

அன்றைய புதுக்கோட்டை அடங்கிய திருச்சி  மாவட்டத்தில்  ஆரம்ப கால தி.மு.க.வை வளர்ப்பதில்  அன்பில் தருமலிங்கம் உடன் இணைந்து பிரதானமாக இருந்தவர். பின்பு கொள்கை வழியில் சம்பத்துடன் விலகி  தமிழ்தேசிய அரசியல்.தற்போது பழ. நெடுமாறன் உடன் ….

திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து தமிழ் வித்வான் பட்டம் பெற்றார்

தி.மு.க. மும்முனைப் போராட்டத்தில் குறிப்பாக கல்லக்குடி ரயில் நிலைய மறியல் போராட்டத்தில்  கலைஞர் உடன் கலந்து கொண்டு மூன்று மாதங்கள்  திருச்சி சிறைவாசம்.

பழைய தி.மு.க.காரர்கள் அண்ணா, சம்பத், எம்ஜிஆர்,மன்னை நாராயணசாமி, சி.பி.சிற்றரசு,பழ. நெடுமாறன் கே.ஏ.கே.மதியழகன் போன்ற பல தி.மு.க.பிரமுகர்கள் காலத்தில் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தவர்.

காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், சம்பத், நெடுமாறன், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் கருத்திருமன், கவிஞர் கண்ணதாசன்,தமிழ்ழகன், மற்றும் வள்ளத்தரசு என பலரும்  இவருக்கு நெருங்கியவர்கள். பிரபாகரன் நட்பு கொண்டு ஈழத்தமிழர் சிக்கலில் களப்பணி செய்தவர்.

பொதுவாழ்வுக்காக தன்னுடைய ஏராளமான பூர்வசொத்துக்களை இழந்தவர். ஆரம்ப காலத்தில் தி.மு.க.சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு சீட்  அளிக்க வந்த போதும் கூட தேர்தலில் நிற்க மறுத்தவர். ஆனால் இவர் சுப்பையாவை வேட்பாளராக நிற்க்க வைத்து வெற்றிக்காக பாடுபட்டு வெற்றி பெற வைத்தவர்.அவர் பின் நாட்களில் தமிழக அமைச்சர்.

வஉசியை பற்றி"செம்மாப்பு தமிழர் சிதம்பரச் செம்மல்" நூலினை சமீபத்தில் எழுதியுள்ளார்.

நேர்மையான சிறந்த ஒழுக்க சீலர்.

இன்று  புலவருக்கு 94 ம் அகவை.

ல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழியவே…

#புதுக்கோட்டை_புலவர்துரைமதிவாணன் 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-12-2023


No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...