Friday, December 22, 2023

குருஞ்சாக்குளம்கிராபைட்ஆய்வுகள்_1932 #Kurunjakulam Graphite

#குருஞ்சாக்குளம்கிராபைட்ஆய்வுகள்_1932
#Kurunjakulam Graphite
________________________________
எனது பூர்வீகமான, நான் பிறந்த ஊர் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமம் பிரிட்டிஷார் காலத்திலேயே சில சிறப்பு தன்மைகள் வாய்ந்த ஒரு கிராமம் ஆகும்.

எங்கள் ஊரில் நீராவி  என்கிற ஒரு நீர்நிலை உண்டு. ஆடு மாடுகள் கால்நடைகளை குளிப்பாட்டும் ஒரு முக்கியமான நீர்த் தடுப்பு பகுதி. அது ஒரு குளமோ ஏரியோ கிடையாது. சிறு வயதில் அங்கு காக்கா  பொன்  எடுப்பது, பொன் வண்டு பிடிப்பது உண்டு. விவசாயிகள் போராட்டம், 31-12- 1980 இல் இதன் கரையோரத்தில்  எட்டு விவசாயிகளை சுட்டது என்பது இன்றும் வேதனையான விடயம்.மழைக்காலத்தில் பல்வேறு ஓடைகள் வழியாக அக் குளத்திற்கு நீர் வந்து சேரும். கிழக்கே சின்னக்களம்பட்டி தொடங்கி தெற்கே கழுமலைச்சாலை மேற்கு எனது நிலங்கள, வடக்கு வெள்ளாகுளம் வரை  விரிந்து கிடக்கும் பூமியில் கிராபைட் கடந்த நூற்றாண்டு முதல் ஆயவு நடக்கிறது.










கடந்த 1932 அதற்கு முன்னும் இங்கு கிராபைட் ஆய்வுகள் ஆங்கிலயர் ஆட்சியில் நடந்தன.

பின் மைசூர் பலகலைகழக புவியியல்
ஆராய்ச்சியாளர் சாம்ப சிவ அய்யர் எங்கள் கிராமத்திற்கு வந்து எங்கள்  வீட்டில் தங்கி மூன்று ஆய்வு நடத்தி  அறிக்கையை 7-7-1932 இல் திருநெல்வேலி மாவட்ட (ஆங்கிலயர்) ஆட்சி தலைவரிடம் வழங்கினார். என் பாட்டனார் ஆர். வெங்கடசல நாயக்கர்,(வில்லேஜ் -முனிசீப் கிராமமுனிசீப்) சாம்ப சிவ அய்யரிடம் எங்கள் விவசாய பாழ் ஆகிவிடும் என்று கூறினார். இவர்கள்  திருநெல்வேலிக்கு குருவிகுளம் ஜமீன்தார்  கொண்டல் ராய சாமியுடன் கலெக்டரை சந்தித்து இந்த
திட்டத்தை கிடப்பில் போட வைத்தனர்.

Graphite is a crystalline form of the element carbon. It consists of stacked layers of graphene. Graphite occurs naturally and is the most stable form of carbon under standard conditions. Synthetic and natural graphite are consumed on large scale (300 kton/year, in 1989) for uses in pencils, lubricants, and electrodes. Under high pressures and temperatures it converts to diamond. It is a good (but not excellent) conductor of both heat and electricity.

அதனபின் 1972 இல் ப. சிதம்பரம், 
பிவி நரசிம்ம ராவ் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த போது தனது சிவகங்கை தொகுதியில் கிராபைட் உள்ளதை ஆய்வு நடத்தி கிராபைட் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டார். அவர் 1991 தேர்தலில் போட்டியிட்ட போது  இந்த திட்டதிற்க்கு தனது தொகுதி மக்களிடம் உறுதி கொடுத்தார்.
அத்தோடு எனது கிராமம் குருஞ்சாக்குளம், சேலம் மாவட்டத்திலும்
ஆ‌‌ய்வு நடந்தது என்பது அன்றைய செய்திகள்.

அக்காலத்தில் அந்த நீராவி தண்ணீர் தேக்கம் குருவிகுளம் ஜமீனைச் சேர்ந்ததாய் இருந்தது. அக் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் உறவினர் ராஜேஸ்வரி அம்மாள் அவர்கள் வடக்கே விஜயவாடாவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு அங்கேயே வாழ்ந்து விட்டார்.

முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் ஆட்சிக் காலத்தில் 1966 இல் அவற்றை ஆய்வு செய்து அதை எடுக்க முயற்சி நடந்த போது விவசாயம் மட்டுமே சார்ந்து இருந்த அக்கிராமத்து மக்கள் இந்த கிராஃபைட்டை எடுப்பதனால் இந்த கிராமம் முற்றிலும் அழிவிற்கு உள்ளாகும் என்று முறையிட்டபோது
1966ல்  எனது தகப்பனார் கே.வி.சீனிவாசன் ( villagemunsif )அதை முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களிடம்  காமராஜர் மூலம் எடுத்துச் சொல்லி இது கிராமத்து மக்களின் நிரந்தர நம்பிக்கையான விவசாய வாழ்க்கையைப் பாதிக்கும் என்று சொல்லி அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று சொல்லி கேட்டுக்கொள்ளவே அதைக் கருத்தில் கொண்டு திரு பக்தவச்சலம் அவர்கள் அந்த திட்டத்திற்குத் தடை விதித்தார்.

அவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தை மறுபடியும் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து இருந்த 
ப .சிதம்பரம் மேற்சொன்ன கிராஃபைட் தங்களது தொகுதியான  சிவகங்கை மற்றும் சேலம், திருநெல்வேலி அதாவது எனது பிறந்த ஊரான குருஞ்சாக்குளம் ஆகிய பகுதிகளிலும் கிடைக்கிறது என்று சொல்லி அதை எடுப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்தார். அவ்வாறு அவர் முன்மொழிந்த காலம்  முதலில் 1991 பின் 1996-97 இல் தேவகவுடா பிரதமராக  இருந்தார் . தமிழகத்தில் 1996 இல் திமுக ஆட்சி. ப .சிதம்பரம் 1991 இல் காங்கிரஸ், 1996இல் தமாகா எம்பி ஆவார்.

அப்போது கூட்டணியில் இருந்த தமிழ்நாட்டின் ப.சிதம்பரம் பரிந்துரையில முதல்வர் கலைஞர் அது குறித்து விசாரிக்க  அப்பகுதிகளை பார்வையிடுமாறு கலைஞர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். 

அப்போது நான் மதிமுக. பின் மதிமுக-திமுக- பாஜக கூட்டணி ஏற்பட்ட போது  அவரிடம் 1999இ்ல் கிராபைட் திட்டம் எனது கிராமத்து மக்களுடைய வாழ்க்கையைக் கடுமையாக பாதிக்கும் என்று சொல்லி கடுமையாக வாதித்தபோது அதை ஏற்று அவரும் அத்திட்டத்தை  கிடப்பில் போட்டார்.

இதுதான் நடந்த உண்மையான வரலாறு. நான் பிறந்த இடம் என்பதற்க்காக இதை சொல்லவில்லை .இது மாதிரியான கார்ப்பரேட் கொள்ளையர்கள் மக்கள் வாழிடங்களில் புகுந்து அவர்களது விவசாயத்தையும் அவர்களின்  இருத்தலியல்  வாழ்வையும் முற்றிலும் அழித்து  அங்கே கிடைக்கக்கூடிய கனிமங்களை தங்களுடைய நலன்களுக்காக எடுப்பதன் மூலம் அந்த பகுதி வாழ் மக்களுக்கு பேரழிவையும் உண்டாக்குகிறார்கள். 

அதற்கு அரசுகளோ அதிகாரங்களோ துணை போகக்கூடாது என்பதுதான் எங்களுடைய பூர்வீக நிலத்தின் வேண்டுகோளாக இருக்கிறது. என் தந்தையின் காலத்திலிருந்து இன்று வரை அந்த கிராமத்தின் இயல்பு வாழ்க்கை கெட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நானும் கலைஞரிடம் முறையிட்டேன்.
அதற்கான அத்தனை ஆவணங்களும் எனது பூர்வீக மண்ணின் கதைகளும் அதற்குரிய குறிப்புகளும் என்னிடத்தில் இன்றுவரை பத்திரமாக இருக்கின்றன. மக்கள் வாழ்க்கையா இந்த பன்னாட்டு காப்பரேட்டின் கொள்ளைகளா என்று வருகிற போது ஒரு பாரம்பரிய  அறஉணர்வை காப்பாற்றுவதில் ஒரு தனி மனிதன் என்கிற முறையில் அரசிடம் போராடியுள்ளேன்.

ஏனெனில் இத்தகைய தாதுக்களை எடுப்பதன் மூலம் அதன் வழியே கிடைக்கும் லாபங்கள் அந்த பகுதி வாழ் மக்களுக்கு ஒருபோதும் எந்த வகையிலும் கிடைப்பதில்லை. மக்களை வெற்றிடம் ஆக்கிவிட்டு பன்னாட்டு கொள்ளைகள் அவற்றை எங்கோ கொண்டு போய் விடுகின்றன.

பிறகு தங்கள் பகுதி நாசமாகுவதை  தங்களுடைய இயல்பு வாழ்க்கை கெடுவதை வானம் பார்த்த கந்தக கரிசல் பூமி குருஞ்சாக்குளம் மட்டுமல்ல சிவகங்கை சேலம் மாவட்ட  மக்களும் விரும்புவார்களா என்ன?

ஆனால் இன்று அதே கார்ஃபைட் தனிமத்தை எடுப்பதற்கு ஜம்மு காஷ்மீர்,பீகார் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிடம் இன்றைய பிரைவேட் கம்பெனிகள் டெண்டர் கேட்டுள்ளன. மிகப் புத்திசாலித்தனமாக  இதற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்படித்தான் காவிரி டெல்ட்டா பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கு ஒப்புதல் கொடுத்து இன்று அந்த பகுதி முழுக்க வெப்பமாகவும் பறவைகள் அண்டாத அங்கே நிலவி வந்த பசும்கூழ் தன்மைகள் பல்லுயிர்ப் பெருக்கங்கள் அதை ஒட்டிய அடிப்படையான உயிரியல் விவசாயங்களும் நாசம் அடைந்து வருவதை இங்கே 

இந்த திட்டம் பத்து மத்திய-மாநில அரசுதுறைகளைப் . தமிழ்நாட்டின் உள்துறை மற்றும் வருவாய் துறைகள் தமிழக அரசு இதற்கு ஒப்புதல் கொடுத்திருப்பதாக தகவல்..

அதுபோகப்பலரும் இப்படியான விஷயத்தில் உண்மையை காணத் தவறுகிறார்கள். இத்தகைய மீத்தேன் அல்லது கார்ஃபைட் போன்றவற்றை வணிக முறையில் அதாவது மக்கள்  நிலையாக வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து எடுப்பதன் மூலமாக அதன் பலன்கள் சர்வதேச அளவில் சுரண்டலாக முடிவதோடு  பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமான முறையில் பாதிக்கப்படுகிறது. இது மிக அபாயகரமானது. யாருக்கு லாபம் யாருக்கு வாழ்நாள் சிரமம் . புவி வெப்பமயமாதல் காலநிலை மாறுபாடுகள் நிகழ்ந்து வரும் இச்சூழலில் கார்ப்பரேட்டுகள் அரசுடன் இணைந்து இத்தகைய சுரண்டலில் ஈடுபடுவதை எதிர்ப்பதும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அறிவு ஜீவிகளின் செயலாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஏற்கனவே இந்த விஷயத்தை மத்திய அரசின் பார்வைக்கு நான் கொண்டு சென்றுள்ளேன். அது குறித்த வழக்குகளையும் பதிவு செய்யவும் உள்ளேன். ஏறத்தாழ 700 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆகும். நான் கிராமத்து மனிதன் தான் !மனிதர்கள் தான் எனக்கு முக்கியம் ! இப்போதும் கடந்த 29 நவ 2023 டெண்டர் அறிவிப்பு வந்துள்ளது

1930 40களில் அதாவது பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் இருந்து பல்வேறு வகையான சுரண்டல்கள் இந்திய பெருநிலத்தில் நடந்துள்ளன. அது இன்னும் தன் தேச இறையாண்மையை காப்பாற்ற போராடிக் கொண்டுதான் இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகும்.
ஒரு நூற்றாண்டு நெருங்கும போதிலும் இத்தகைய மோசடிகள் குறித்தும் அதற்கு தமிழ்நாடு அரசும் துணை போவது குறித்தும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டி இருக்கிறது.

இதை என் ஊரிலிருந்து தான் இன்றும் எழுதுகிறேன். இன்றுவரை அங்கு வாழும் மக்களுக்கான உரிமை போராட்டங்கள் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் எந்த மூலையில் அல்லது இந்தியாவின் எந்த பகுதியில்  நடந்தாலும்  அதற்கு என் தலைமுறை தொடர்ந்து என் வரையில்  மனித உரிமைக்கான அடிப்படை உரிமைகளுக்கு  போராடி வந்திருக்கிறது என்பதை இங்கு முன்வைப்பதில் பெருமை கொள்கிறேன்.

இப்படியான மனநிலை எனக்கு கிடைத்த எந்த அரசியல் அதிகாரத்தாலும் அல்ல. தந்தையர் காலத்தில் இருந்து இன்று வரைமக்களோடு வாழ்ந்து மக்களோடு வசித்த வகையில் எது அவர்களுக்கு விரோதமானது என்பதை சட்டமும் நீதியும் வரையறுக்க வேண்டும் என்கிற அற உணர்ச்சியில் எழுவதுதான்.

#குருஞ்சாக்குளம்கிராபைட்ஆய்வுகள்_1932
#KurunjakulamGraphite
#TnMinorminerals
#taminadu_Minorminerals #Graphite
#tamilnaduGraphite
#தமிழ்நாடுதாதுகள்
#வானம்பார்த்த_கந்தககரிசல்பூமி
#விவசாயிகள்போரட்டம்
#தமிழ்நாட்டு_கிராபைட்ஆய்வுகள்
#graphite

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
K.S.Radhakrishnan 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-12-2023.

(படங்கள்) மைசூர் பலகலைகழக புவியியல் ஆராய்ச்சியாளர் சாம்ப சிவ அய்யர் அறிக்கை-1932.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...