Wednesday, December 20, 2023

#எதிர்கட்சியாக திமுக இந்தி எதிர்ப்பு… #அன்றையநினைவுகள்.. இன்று 'இந்தி தெரியாது போடா'னு சொல்லலையா ஸ்டாலின் அவர்களே.. கனிமொழி இதற்கும் அனைவருக்கு 'இந்தி தெரியாது போடா' என டி சார்ட் வழங்கி photo எடுப்பாரா? இன்று…… India கூட்டணியில்…




#இந்திதெரியாதுபோடா அன்று…
இன்று திமுக⁉️

 இண்டி கூட்டணி கூட்டம் டில்லியில் நடந்து கொண்டிருந்தபோது ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திமுக தரப்பில் ஆங்கில மொழி பெயர்ப்பு கேட்கப்பட்டது. நிதிஷ் குமார் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறும்படி டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி., மனோஜ் ஜாவிடம் கூறினார். அவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறினார். இதனால் கோபப்பட்ட நிதிஷ் குமார், "நாம் இந்தியாவில் வாழ்கிறோம், ஹிந்தி தான் நமது தேசிய மொழி அனைவரும் அதனை அறிந்திருக்க வேண்டும்." என கோபத்துடன் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், 'டி.ஆர்.பாலு எத்தனை ஆண்டு அரசியலில் இருக்கிறார். எம்.பி.யாக பலமுறை இருந்துள்ளார். அவருக்கு ஹிந்தி தெரியத்தானே செய்யும். தெளிவாக புரிய வேண்டும் என்றால் இந்தி படிக்க சொல்லுங்கள்." என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து  மற்ற தலைவர்கள் நிதிஷ் குமாரை சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நிதிஷ் குமாரின் இந்த ஆவேசம்தான் இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

#NitishKumar

'Should know Hindi': Nitish Kumar snaps at DMK leader for seeking speech translation
Bihar Chief Minister and Janata Dal (United) leader Nitish Kumar lost his cool when Dravida Munnetra Kazhagam (DMK) leader TR Baalu asked for a translation of his speech which was delivered in Hindi during INDIA bloc leaders meet on Tuesday.

No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...