Thursday, December 28, 2023

#விஜயகாந்த் அவர்களின் மறைவு மிக வேதனையான விஷயம்.

#விஜயகாந்த் அவர்களின் மறைவு மிக வேதனையான விஷயம்.

மதுரை மேல  மாசி வீதியில்இவரின் வீடு இருந்தது. விஜய்காந்தின் தந்தை அழகிரிசாமி அவர்கள் 1970 களில் ஒரு அரிசி அரவை மில் வைத்து நடத்தி வந்தவர். அக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராகவும் பணியாற்றினார். பழ நெடுமாறனை அடிக்கடி சந்தித்து உரையாடுவார் என்னிடமும் மிகச் சிறந்த நட்பு கொண்டவர்.இவருடைய பூர்விகம் அருப்புக்கோட்டை- பலையம்பட்டி அருகே இராமனுஜபுரம்.

 அப்படியான ஒரு நல்லதொரு பண்பான குடும்பத்தில் வளர்ந்து வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.தேமுதிமுக என்ற பெயரில் அவர் கட்சி ஆரம்பித்த வேலையில் தேர்தல் ஆணையத்தில் அதை பதிவு செய்ய என்னிடம் கைபேசியில் ஆலோசனைகள் பெற்றதும் உண்டு .பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் என்னுடனும் அரசியல் பயணம் செய்ய விரும்பியவர். மிகச் சிறந்த மனிதநேயர் .சில அரசியல் மற்றும் சந்தர்ப்பவாத தோழமைக்  கட்சிகளின் தவறான ஆலோசனைகளால்  அவர் பாதிக்கப்பட்டார் .ஆனாலும் மக்கள் செல்வாக்கைப் பெற்று எதிர் கட்சியாக இருந்த போதும் தனது தோழமைக் கட்சியாக இருந்த அதிமுகவுடன்  போராடியவர் .

#விஜயகாந்த் அவர்களின் மறைவு மிக வேதனையான விஷயம்.

மதுரை மேற்கு ஆவணி மூல வீதியில் இவரின் வீடு இருந்தது. விஜய்காந்தின் தந்தை அழகிரிசாமி அவர்கள் 1970 களில் ஒரு அரிசி அரவை மில் வைத்து நடத்தி வந்தவர். அக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராகவும் பணியாற்றினார். பழ நெடுமாறனை அடிக்கடி சந்தித்து உரையாடுவார் என்னிடமும் மிகச் சிறந்த நட்பு கொண்டவர்.

 அப்படியான ஒரு நல்லதொரு பண்பான குடும்பத்தில் வளர்ந்து வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.தேமுதிமுக என்ற பெயரில் அவர் கட்சி ஆரம்பித்த வேலையில் தேர்தல் ஆணையத்தில் அதை பதிவு செய்ய என்னிடம் கைபேசியில் ஆலோசனைகள் பெற்றதும் உண்டு .பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் என்னுடனும் அரசியல் பயணம் செய்ய விரும்பியவர். மிகச் சிறந்த மனிதநேயர் .சில அரசியல் மற்றும் சந்தர்ப்பவாத தோழமைக்  கட்சிகளின் தவறான ஆலோசனைகளால்  அவர் பாதிக்கப்பட்டார் .ஆனாலும் மக்கள் செல்வாக்கைப் பெற்று எதிர் கட்சியாக இருந்த போதும் தனது தோழமைக் கட்சியாக இருந்த அதிமுகவுடன்  போராடியவர் .

தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்ட தோல்வியோடு முடிந்ததா மக்கள் நல கூட்டணி பயணம்?  
மறைந்த விஜயகாந்தை மிகவும்
மன அளவில் இது பெருதும் பாதித்தது என்பதை நான்அறிவேன் . அவரும் என்னிடம் சொன்னது…விஜயகாந்தை இழுத்து தலைவர் மக்கள் நல கூட்டணி என தள்ளி விட்டு, பிறகு தோல்வி நிலையில் அவரை எட்டி /திரும்பிப் பார்க்காமல் சென்றனர் இந்த மகான்கள்…

இன்று விடைபெற்று போகிறார்! 
ஆழ்ந்த இரங்கல்!

Rest in Peace ( at least now ) CAPTAIN…

#vijayakanth #விஜயகாந்த் #RipVijayakanth #RIPCaptain

#விஜயகாந்த்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...