Tuesday, December 26, 2023

#*மகிழ்ச்சியென்பது ரணத்தை தூக்கி எறியும் மனம்தான்* ….

#*மகிழ்ச்சியென்பது
ரணத்தை தூக்கி எறியும் மனம்தான்* ….



————————————
சும்மா சிலர் மூலம் வெற்றிடத்தைப் பார்த்துப்பிரமித்துக் கொண்டிருந்ததில்
ஒரு  நாற்பது வருடம்  சில நொடிகளில் எனக்கு ஓடி விட்டது.

இதனால், எனது லட்சியங்கள்
முன்பெல்லாம் கொஞ்சம் அடக்கமாக 
இருந்தது.

எங்கே விழுந்தோம் என்பதை விட
எங்கே கவனத்தை சிதற விட்டோம் என்பதைகவனித்துப்பாருங்கள் விழவே மாட்டீர்கள்...

முடியாததை முடியும் என்று முனையும் போது தான் முயற்சி முளைக்கிறது.

பிறரிடம் இல்லாதது நம்மிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கும் போது தான் நம்பிக்கை பிறக்கிறது.  

முனைப்புடன் நினைப்பும் சேரும் போது தான் எந்த காரியமும் கை கூடுகிறது.

முயற்சி செய்யும் வரை எவருக்கும் தன் திறமை தெரிவதில்லை. முயற்சி செய்பவர்களுக்கு மட்டும் தான் கடவுள் உதவி செய்கிறார்.

எதை உங்கள் எண்ணங்களில் உருவாக்க முடிகிறதோ, 

எந்த எண்ணத்தை உங்களால் நம்ப முடிகிறதோ,

அந்த எண்ணத்தை உங்களால் நிஜமாக்கவும் முடியும். வெற்றி நிச்சயம்.

வாழ்க்கையின் சிறந்த நாட்களை அடைய சில மோசமான நாட்களோடும் போராடியே ஆக வேண்டும்...!

மகிழ்ச்சியென்பது
ரணத்தை தூக்கி எறியும் மனம்தான்
அந்த மனம் வாய்க்கவில்லை என்றால் பெரும் வேதனைதான்…
மற்றவர்களின் கண்ணீரை காட்டித்தான்
காலம் நம்மை தேற்றுகிறது….
நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். நல்லவைகளை மட்டும் வாழ்வில் செயல் 
படுத்துங்கள்.

நம் வலியை உணர்ந்தவர்களே மட்டுமே
நமக்கு ஆறுதல் சொல்வார்கள்.
எதையும் எளிதாக கொண்டால் நலம்.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-12-2023.

படம்-#nellaifloods

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...