Monday, December 4, 2023

#தெலுங்கானா தேர்தல் அரசியல் சங்கதிகள்

#தெலுங்கானா தேர்தல்
அரசியல்சங்கதிகள்
————————————
தெலுங்கானாவின் கடந்த கால அரசியல் சங்கதிகளைப் பின்னோக்கி பார்க்கலாம். 

நான்கு மாநில ரிசல்டில்  தெலுங்கானாவைத் தவிர மூன்றில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது! 

தெலுங்கானா மாநில முதல்வரான சந்திரசேகர ராவ் கம்மாரெட்டி, காஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டி.  தெலுங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவை மற்றும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி வீழ்த்தினார்.

இத்தேர்தலுக்கு முன்பாக முதல்வராக இருந்த கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் அக்காலத்தில் தெலுங்கு தேச முதல்வராய் இருந்த சந்திரபாபு நாயுடு  ஆட்சியில் சந்திரசேகரராவ் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் காங்கிரஸ், அடுத்து டிஆர்எஸ் கட்சியைத் துவக்கினார்.2004ஆம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 5 மக்களவைத் தொகுதிகளில் தமது கட்சிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பின்னர் மைய அரசில் பங்கேற்று மத்திய அமைச்சராக இருந்தார். தமது அரசிலிருந்து விலகி தமது தெலுங்கானா போராட்டத்தைத் தொடர்ந்தார்.







2009 டிசம்பரில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் துவங்கினார். இதனால் மாணவர் போராட்டமும் கடையடைப்புகளும் வன்முறையும் எழுந்தன.

தெலுங்கானா தனி மாநிலம் கோரி சென்னா ரெட்டி அவர்கள் முன்னெடுத்த ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் சந்திரசேகர ராவ்  போராட்டம் தெலுங்கானா தனி மாநிலம் ஆகியது . இரண்டு முறை தெலுங்கானா முதல்வராக கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தார்.

தனியாக பிரிக்கப்பட்ட மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த போதும் இத்தேர்தலில் அவர் தோற்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன . முதலாவதாக வாரிசு அரசியல் . தேர்தலுக்கு முன்பாக கொடுத்த கொடுத்த வாக்குறுதிகளை அதிகம் நிறைவேற்றவில்லை.   10 வருட ஆட்சியை மிக இறுக்கமான முறையில் தளர்த்திக் கொள்ளாமல் கொண்டு சென்றிருக்கிறார். இடையே பல ஊழல் பிரச்சனைகள். வேறு.

தெலுங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றிய பின் இன்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
ரேவந்த் ரெட்டியும்.
பாரதிய ஜனதா கட்சியின் ஏபிவிபி 
(Akhil Bharatiya Vidyarthi Parishad )உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பில் இருந்தவர்.சந்திரசேகர ராவை போலவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியில இவரும் இருந்தனர். ரேவந்த் ரெட்டி  அரசியல் நகர்வில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் TDPயில்  இரண்டு முறை எம்எல்ஏவாகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்,அனுமுலா ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் சேரந்து, 2019 ஆம் ஆண்டு மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தெலுங்கானாவின் முதல்வராக ஆகியிருக்கிறார்!

தெலுங்கானாவில் காங்கிரஸ் தேர்தல் உறுதிமொழிகளை (திமுகவை மகளிர் உரிமை தொகையை அதிகமாக அறிவித்துள்ளது. இப்படித்தான் இதை சொல்லி கர்நாடகவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை நிறைவேற்ற முதல்வர் சித்தராமையா இன்று தவிக்கிறார். இங்கு திமுகவும் இதில் சொன்ன படி சரியாக நிறைவேற்ற வில்லை) அள்ளி வீசியுள்ளது.நாளை, ரேவந்த் ரெட்டி இதை  செய்வரா? என்பதும் கேள்விகுறி…

இப்படி இவர் இன்று தெலுங்கானாவின் முதல்வராக ஆகியிருக்கிறார்! 
இவரும் இந்த தேர்தல் வாக்குறுதியில் தான் ஜெயித்து வந்தால் மகளிர்க்கு மாதம் தோறும் 2000 முதல் 10 ஆயிரம் வரை மாதம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்.
ஓட்டு விழாமல் என்ன செய்யும்?
இந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாமல் இப்படி மக்களுக்கு ஆசை காட்டி ஓட்டை பெறுவது பின்னாளில் நடைமுறை சிக்கலை ஏற்படுத்துமா? இல்லையா?  எப்படி இந்த வாக்குறுதிகளை  மனம் போன போக்கில் தருகிறார்கள்? ஏற்கனவே கர்நாடகாவில் சீதாராமையா இப்படி இலவச தொகைகளை அறிவித்துவிட்டு இன்று அதற்கான நடைமுறைச் சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்! 

சில சீர்கேடுகள் சந்திரசேகர் ராவிற்கு ஏற்பட்டதால் அவர் பின் தங்கியிருக்கிறார். தெலுங்கானாவின் இந்த புதிய ஆட்சியும் அந்த சீர்கேடுகளில் இருந்து  தபபித்து விடுமா? எந்த பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படி அறிவிக்கிறார்கள்? இது எப்படி சாத்தியமாகும் என்று எந்த பொருளாதார அறிஞரும் பொது ஊடகங்களும் மக்களுக்கு ஏன் எடுத்து விளக்குவதுமில்லை! மக்கள் சிந்தித்து தான் பார்க்க வேண்டும்.
வேறு சொல்ல என்ன இருக்கிறது!

#தெலுங்கனாஅரசியல்
#TelanganaPolitics
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost 
4-12-2023


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...