Friday, December 29, 2023

நேற்று பிறந்த பயல்கள் எல்லாம் எனக்கு அறிவுரை சொல்ல வருகிறார்கள். சொல்லுகிறேன்; மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை துப்ப வேண்டாம்.

நேற்று பிறந்த பயல்கள் எல்லாம்
எனக்கு அறிவுரை சொல்ல வருகிறார்கள். சொல்லுகிறேன்; மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை துப்ப வேண்டாம்.

  சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் உருவான அனைத்து அரசியல் வாழ்விலும் ஊடாகக் கலந்தவன் என்கிற முறையில் யார் எதற்கு எங்கே அசைகிறார்கள் என்ன பேசுகிறார்கள் எதற்காக அவர்கள் இந்த அரசியல்ச் சூழலைப் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் துல்லிதமாக அறிந்தவன் நான்.

50 வருட  எனது அரசியல் வாழ்க்கையில் நான் சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்கள்  எந்தெந்த காலத்தில் யார் யார் என்ன செய்தார்கள்? அதன்மூலம் அவர்கள் பெற்ற பலன்கள் வளர்ச்சிகள் என்ன பொது சமுகத்திற்கு அவர்களால் நேர்ந்தது என்ன! முக்கியமான காலகட்டங்களில் எடுத்த முடிவுகள் தவறுகள் எல்லாவற்றிலும் யார் யார் எந்த வகையில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்! எத்தனை உள்ளடி வேலைகள் அவர்களின் சுயநல அதிகார ஆசைகள் அனைத்திற்கும் என்னிடம் ஆவணங்களோடு அதற்கான சாட்சியங்களும் இருக்கின்றன.

என்னைச் சீண்டுவதன் மூலம் அவர்கள்  வெளிப்பட்டு கேவலமாக அம்பலப்பட விரும்புகிறார்கள் போலும்.

அத்தனையும் நான் எனது பெருந்தன்மையினாலும் எனக்கு நேர்ந்த பல்வேறு வகையான இடர்களினாலும் மட்டுமன்றி பல ஏமாற்றுக்கார்களை நெஞ்சில் நஞ்சுள்ள சுயநல வஞ்சக மனம் படைத்தோரை நேர்முகத்தில் பேசும்போது ஆசை காட்டி மோசம் செய்தவர்களை எல்லாம் மறந்து மன்னித்து எதற்கும் ஆசைப்படாமல் அந்நியமாக இருந்ததாலும் பலருக்கும் பல விதத்தில் நான் பயன்பட்டிருக்கிறேன் என்கிற நிம்மதியாலும் அவற்றையெல்லாம் வலியுடன் சகித்துக் கொண்டுதான் எனது பணிகளைச் செய்து வருகிறேன். அதை எனது பண்பாகவே நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

வருகிறவன் போகிறவன் எல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசுவது இங்கு சந்தர்ப்பவாத வழக்கமாகிவிட்டது.  அதை எல்லாம் தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது! நான் எதிலும் குறைந்த அளவே பேசுகிறவன். உங்களைப் போல போலித்தனங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருக்க மாட்டேன்.

நான் மதித்த பழகிய  அல்லது முக்கியத்துவமானவர்கள் என்று கருதிய  தலைவர்களோடு இணைந்து எனது கடமையைச் செய்துள்ளேன். பலவகையிலும் அவர்களுக்கான இக்கட்டில் உதவி செய்துள்ளேன். அதற்கான நன்றியை கூட நான் எதிர்பார்க்கவில்லை. அப்படியான நன்றியோ ஒருவருக்கு  அவரது செயலுக்கான மதிப்பைத் தருவதோ சுட்டுப் போட்டாலும் உங்களுக்கு வராது. அதற்கான பண்புகள் வேறு.
 அதை உங்களிடம் நான் இதுவரை பார்த்ததும் இல்லை!
ஆகவே தான் மீண்டும் சொல்கிறேன்! இந்த உரசிப் பார்க்கும் வேலையை விடுங்கள்.

எல்லாச் சரக்குகளும் என் கைவசம் இருக்கிறது . ஆவணங்கள்,ஆவணப் படங்களோடு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் காலத்தின் மதிப்பு கருதி நான் பத்திரப்படுத்தி இருக்கிறேன்! அதெல்லாம் எடுத்து வெளியே விட்டால் தாங்க மாட்டீர்கள் எனவே சொல்லிக் கொள்கிறேன் இந்த விளையாட்டுகள் எதுவும் என்னிடம் வேண்டாம்

உங்கள் வெளிச்சத்திற்கு மட்டுமல்ல நிழலுக்கும் நானே சாட்சி

எச்சரிக்கை!!

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
29-12-2023


No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...