Monday, December 4, 2023

ஈழத்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை கார்த்திகை மகம்.

"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?

ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லூர் எனும் ஊரில் 1882 டிசம்பர் 18 ஆம் திகதி கந்தப்பிள்ளை மற்றும் சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ஆறுமுகன் என்பதாகும். இவரது தந்தை, தாத்தா, பூட்டன் ஆகியோர் தமிழறிஞர்களாக இருந்ததுடன் அரச ஊழியர்களாகவும் இருந்துள்ளனர்.

இவ்வாறான பெருமைமிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர் பிற்காலத்தில் சைவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஆனார்.

ஐந்தாவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த இவர் சுப்பிரமணிய உபாத்தியரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். பின்னர் சரவணமுத்து புலவரிடமும் சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வியை கற்றுக் கொண்டார்.

12 வது வயதில் தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் புலமை பெற்றார். பின்னர் முன்னணி ஆங்கில பாடசாலையான வெஸ்லியன் பள்ளியில் ஆங்கிலம் கற்று திறமை பெற்றதோடு அதே பள்ளியில் தனது 19 வது வயதில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.

இவரது பணிகள் சைவ சமயத்திற்கும் தமிழிற்கும் அளப்பரியவையாகும். அந்த வகையில் சைவ சமயத்தை வளர்க்கும் பொருட்டு பிரசங்கம் செய்வதை வழக்கமாக்கி கொண்டார்.

இவரது பிரசங்கங்களின் விளைவாக சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. சைவப் பிள்ளைகளுக்கு நூல்களை அச்சிடுவதற்காக தனது இல்லத்திலேயே அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவி பல நூல்களை அச்சு வடிவில் உருவாக்கி மாணவர் கைகளில் கிடைக்கச் செய்தார்.

இவரது பணி தமிழகத்திலும் கூட பரவியிருந்தது. அங்கு திருவாடுதுறை, இராமநாதபுர சமஸ்தானம், மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதானம், குன்றக்குடி என பல இடங்களில் பிரசங்கங்கள் செய்து புகழ் பெற்றார்.

அத்துடன் தமிழகத்தில் பல சைவ பாடசாலைகளை நிறுவியதுடன் பல நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார்.

இவ்வாறான சைவப்பெருஞ் சேவைகளையும், தமிழ் வளர்ப்பினையும் செய்த ஆறுமுக நாவலர் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி 1879 ஆம் ஆண்டு தனது 56 வது வயதில் இயற்கை எய்தினார்.

இவர் இறந்தாலும் பதிப்பாளராகவும் வைச பிரசங்கராகவும், கல்விசாலை நிறுவனராகவும், எழுத்தாளராகவும் இவர் ஆற்றிய அரும் பெருஞ்செயல்கள் இவரது புகழை பறை சாற்றுபவையாக இருக்கின்றன.

 ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் சைவப்பணிகளும் தமிழ்ப்பணிகளும்.

1846ல் அதாவது யாழ்ப் பாணம் வெஸ்லியன் மெதடிஸ்த் மிஷன் மத்திய கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, சைவ சமயப்பிள்ளைகளை ஒன்று திரட்டித் திண்ணைப் பள்ளியை ஆரம்பித்தார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்.

1848 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமது ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார்.

 தமிழகத்தின் சிதம்பரத்திலும் 1860ல் சைவவித்தியாசாலையை அமைக்க முயன்றார். இருப்பினும் பொருளாதார உதவி அங்கு கிட்டாமையால், யாழ்ப்பாணத்திலே நிதிதிரட்டி சிதம்பரத்தில் சைவவித்தியாசாலையை நிறுவினார்.
யாழ்ப்பாணத்துக் கோப்பாய், புலோலி என்னும் இடங்களிலும் 1870 களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை அமைக்க முயன்றார்.
1872 - 1876 காலப்பகுதியில் வண்ணார்பண்ணையில் சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றினையும் ஆரம்பித்து நடத்தினார். இதன் நோக்கம் ஆங்கிலம் கற்பதற்காகக் கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குச் சென்று மதம் மாறுபவர்களைத் தடுப்பதேயாகும்.
1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை ஶ்ரீ  வைத்தீஸ்வரர் கோவில் வசந்த மண்டபத்திலே சைவப்பிரசங்கத்தைத் தொடங்கி 1879ம் ஆண்டு ஜீலை மாதம் வரை ஆற்றிவந்தார்.
சைவசமய நூல்கள் பலவற்றைத் தாமே எழுதியும், கிறிஸ்தவ மதக் கண்டனத் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டும், சைவசமயச் சிறப்புக்களை, உண்மைகளைத் துண்டுப்பிரசுரங்களாக வெளியிட்டும் சைவப்பணி புரிந்தார்.
உரை நடையே அக்கால மக்களின் தமிழ் அறிவுக்குப் பொருத்தமானது என்பதனையும், உலகம் முழுவதும் உரைநடை பரவி இருந்தமையை அவதானித்தும், புராணங்களை உரை (வசனம்) நடையில் எழுதி வசன நடை கைவந்த வல்லாளர் எனப்
போற்றப்பட்டார்.

 பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்
புராணம், கோயிற் புராண உரை என்பவற்றை வசன நடையில் எழுதினார்.
இவற்றில் பெரிய புராண வசனம், திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரில் வெளிவந்தது. கந்த புராணத்தில் அசுரகாண்டம் அசுரயாகப் படலம் வரை வசன நடையில் எழுதினார்.
 திருவிளையாடற் புராணத்தில் பெரும்பகுதியை வசன நடையில் எழுதினார்.

 எழுதிய சைவ நூல்கள் :
பெரியபுராண சூசனம், அனுட்டானவிதி, (நித்தியகரும விதி) - முதற்புத்தகம் இரண்டாம் புத்தகம், சைவவினாவிடை - முதற் புத்தகம், இரண்டாம் புத்தகம், குருவாக்கியம், சிவாலய தரிசனவிதி, 
சைவசமயசாரம், சைவசமயி, அனாசாரம், திருக்கோயிற் குற்றங்கள்.
யாழ்ப்பாணச் சமயநிலை, நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லூர்க் கந்தசாமி கோவில் பத்திரிகை, மித்தியாவாத நிதர்சனம் ஆகியவற்றையும் எழுதி வெளியிட்டார். 

உரை எழுதிய சைவ நூல்கள்:

திருச்செந்தி நீரோட்ட யமக அந்தாதி, திருமுருகாற்றுப் படை, சைவசமய நெறி, மருதூர் அந்தாதி, சொரூபானந்தப் பொருளாகிய உபநிடதம்,

 கண்டன நூல்கள்:
போலி அருட்பா, சைவ தூஷண பரிகாரம், சுப்பிர போதம், வச்சிர தண்டம், முதலானவை அவர் எழுதிய கிறிஸ்தவ மதக் கணடன நூல்களாகும்

 பதிப்பித்த சைவ நூல்கள்:
செளந்தர்யலகரி உரை, புட்பவிதி, கொலைமறுத்தலுரை, ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், கோயிற் புராணம், மறைசை அந் தாதி, திருக்கோவையார் உரை, திருவாசகமும் திருக்கோவையாரும். சேது புராணம், சிதம்பர மும்மணிக்கோவை, அருணகிரிநாதர் திருவகுப்பு, கந்தபுராணம், பதினோராம் திருமுறை, விநாயக கவசம், சிவகவசம், சக்திகவசம், சகலகலாவல்லி மாலை என்னும் சரஸ்வதி தோத்திரம், இலக்குமி தோத்திரம், நால்வர் நான் மணி மாலை, பெரியநாயகி விருத்தம், பிச்சாடன நவமணிமாலை, பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்திரட்டு, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்
தமிழ், திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருச்செந்தூரகவல்,
 ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, வாக்குண்டாம் (மூதுரை). நல்வழி, நன்னெறி என்னும் நீதி நூல்களுக்கு உரை எழுதியும் வெளியிட்டார்.
சூடாமணி நிகண்டு முதற்தொகுதி உரை, இலங்கைப் பூமி சாத்திரம், இலக்கண வினாவிடை, ஏர் எழுபது, திருக்கை வழக்கம், நன்னூல் விருத்தி உரை, தருக்க சங்கிரகவுரை, இலக்கணக் கொத்து. இலக்கண விளக்கச் சூறாவளி, திருக்குறள் (பரிமேலழகருரை) தொல்காப்பியச் சூத்திரவிதி முதலானவற்றைப் பதிப்பித்தார்.

இலக்கணச் சுருக்கம் இவர் எழுதிய மிகச் சிறந்த இலக்கண நூலாகும்.

நாமறிந்த நாவலர் என்னும் நூலில் இருந்து...

சமூகவியல் நோக்கில் நாவலர்
- கார்த்திகேசு சிவத்தம்பி
--------------------------------------------------------
சமூகவியல் என்பது இக்காலத்தில் பெருவழக்காகப் போற்றப்படும் ஒரு பயில் துறையாகும். பொதுப்படையாகக் கூறுவ தானால் அது, அத்துறைபோகிய அறிஞர் மொறிஸ் கின்ஸ்பேர்க், என்பவரது கூற் றுக்கிணங்க '"மனித ஊடாட்டங்கள் (interactions). இடையுறவுகள் (interrela- tions), அவற்றின் நிலை, பலாபலன்கள் பற்றி ஆராயும் துறையாகும். அது தனக் கென ஒரு பயில் களத்தையும் பயில் நெறி யையும் கொண்டது. ஆயினும் அது அதன் வளர்ச்சியில் இரு வேறு திசைநெறிகளைக் கொண்டதாகக் கிளைத்துள்ளது. மரபு நிலைப்பட்ட சமூகவியல் (conventional sociology) என்றும் மார்க்ஸீய நிலைப்பட்ட சமூகவியல் (Marxist sociology) என்றும் போற்றப்படுவதுண்டெனினும், அதன் அடிப்படையான அறிவுத்தளம் ஒன்றினுள் மற்றொன்று அடங்குவதாக அமையுமென் பதில், அத்துறையின் கருத்தியல் அறிஞர்க ளிடையே எண்ண ஒருமைப்பாடு உண்டு. மரபியற் சமூகவியலில். சமூகத்தின் வர்த்தமான அமைப்புக்கள், மனித நடத் தைகள், நடைமுறைகள், எண்ணப் பெறு மானங்கள் (values-விழுமியங்கள்) முதலி யனவே இடம் பெறும். வரலாற்றுப் பகைப்புலத்தில் ஒருவரை, அல்லது ஒரு சமூக நிகழ்வை, அல்லது சமூக இயக் கத்தை மதிப்பிடும் முயற்சி மேற்கொள்ளப் படும்பொழுது (அதாவது வரலாற்று நிலைப் பட்ட சமூகவியல் (historical sociology) நாவது:

ஆய்வு) அந்த ஆய்வு சமூக வரலாறாகவே (social history) பேசப்படும். சமூக வர லாற்றுக்கு மார்க்ஸீயத்தின் அடிப்படைக ளான வரலாற்றுப் பொருள்முதல் வாதம் இயங்கியற்பொருண்முதல் வாதம் என் பனவே அணுகுநெறிகளாகக் கொள்ளப் படுவதுண்டு. அன்றேல் கடந்தகாலச் சமூக சம்பவமொன்றின் "ஊடாட்டங் கள்''. ''இடையுறவுகள்'' ஆகியனவற்றை அறியமுடியாது போய்விடும்.
 ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

ஆறுமுகநாவலர் (1822-1879) இலங் கைத் தமிழரின் சமூக, மத, கல்வி வர வாற்றில் மிக முக்கிய இடம் வகிப்பவ ராவர். எனவே அவரை, மேற்கே மெத்த வளரும் சமூக அறிவுத்துறையின் வழி நின்று ஆராய்ந்து, அவரது இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, வியாப்தி, நிலைபேறு ஆகியவற்றுக்கான காரணங்களை அறிந்து கொள்வது அறிவுப்பசிக்கான அத்தியா வசிய ஊனாகும். அத்தகைய ஆய்வு ஆறு முக நாவலராய்வில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தும்.

எனவே, முதலில் மரபு நிலைப்பட்ட சமூகவியலறிஞர்களின் நிலையில், சமூக வியல்துறையின் அறிவு வட்டம், பயில் களம் யாது என்பதனை நிறுவுவோம். இத்தகைய அறிஞர்களுள் முக்கியமானவ ராக விளங்குபவர் ரல்கொற் பார்சன்ஸ் (Talcott Parsons) என்பவர். அவர் கூறுவதாவது

"சமூகவியல் ஆய்வின் முக்கிய பொருட்கிடக்கை, சமூக நடவடிக்கை (Social action)யின் நிறுவன நிலைப் பட்ட அமிசத்திளைக் கண்டறிவதாகும். பொதுப்படையாகக் கூறுவதானால், யாதானுமொரு பண்பாட்டினைத் தள மும் சுளமுமாகக் கொண்ட சமூக அமைப்பொன்றில், (அச்சமூகத்தினுள் ஏற்படக்கூடிய நடவடிக்கைகள் பற் றிய) மேனிலை எடுத்துக்காட்டாகக் கூறப்படத்தக்க, உயர்படிவ எதிர் பார்ப்புகள் (normative expectations) எவ்வாறு தோன்றுகின்றன. தொழிற் படுகின்றன என்பதுபற்றி அறிந்து கொள்வதன்மூலமும், பல்வேறு சூழ் நிலைகளில், பல்வேறு அந்தஸ்துகளை யும் (statuses), பல்வேறு கடமைப் பணி (role - பங்கு, 'பாகம்')களையுங் கொண்டு தொழிற்படும் மனிதர். எவ் வெவற்றைச் செய்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்பது பற்றி அறிந்துகொள்வதன் மூலமும் 'சமூக நடவடிக்கையின் நிறுவன நிலைப்பட்ட அமிசத்தை அறிந்து கொள்ளலாம். இந்த(ச் சமூக) எதிர் பார்ப்புகள் அப்பணிகளைச் செய்பவர் களின் நோக்குக்களுடன் மூன்றி பதும், ணைந்தே நிற்கும். அதாவது, அப் பணிகளைச் செய்பவர் எத்தன்மை யினர், அவர் நிலைப்பாடு யாது. அவர் எத்தகைய சூழலில் இயங்குகின்றார், ருக்கே அவர் "எத்தகைய காரியங்களைச் செய்யத் தூண்டப்படுகின்றார். அவர் எத்தகைய காரியங்களைச் செய்ய விரும்புகின்றார் என்பவையுடன் இணைந்ததாகவே சமூக எதிர்பார்ப் பும் அமையும். ஆயினும், ஒழுங்கமைதி யுடைய ஒரு பயில்நெறி என்ற முறை யில் சமூகவியலானது தனி மனிதர்க ளிள் ஆளுமை பற்றிய ஆய்விலும் பார்க்க, சமூக அமைப்புக்களே அதன் ஆய்வுத் துறையாக அமைவதால், தனிப்பட்ட ஒருவரது கடமைப்பணி யானது அதன் ஆய்வுக்கு முக்கிய

மானதாக விருக்குமிடத்தும் தனிப் பட்டவர்களில் கவனஞ் செலுத்தாது தனிப்பட்டவர்களைக்கொண்டு ஆக்கப் பெற்ற திரட்சிகளிலேயே (collectvities சமூகத்திரள்களாக நிற்கும் நிலை) தனது கவனத்தைச் செலுத்தும். (நடவடிக்கைகளுக்கான) உந்துதல் கள் பற்றி நோக்கும்பொழுதுகூட, தனிப்பட்ட ஒருவரது நடவடிக்கைகள் பற்றி அதிக கவனஞ் செலுத்தாது பொதுப்படையான முறையில், உந்து தல்களின் வகைபாடுகள் பற்றியும், அவற்றின் வேகங்கள் பற்றியும், அவ் வுந்துதல்களின் பலாபலனாக ஏற்படும் நடத்தை (behaviour) பற்றியுமே அது முக்கிய கவனம் செலுத்தும்''.

(ரால்கொற் பார்சன்ஸ்: 1988-பக். 347-8)

இக்கூற்றினை ஊன்றி நோக்கும் பொழுது. ஆறுமுகநாவலர் பற்றிய. இதுவரை வந்த பெரும்பாலான ஆய்வுகள் இம் முறையில் அமையவில்லை என்பது தெரிய வருகின்றது, ஆனால் இத்துடன் மேற்கூறிய முறையில் ஆராயும்பொழுதுதான் நாவ ரின் சமூகப் பின்னணி துல்லியமாகவும், அறிவுபூர்வமாகவும் நிறுவப்படலாமென் நிறுவப்படவேண்டு மென்பதும் தெரியவருகின்றது. எம்மிற் பலர் நாவலர் என்னும் தனிமகனையே முதலும் முடிவு மாகக் கொண்டுவிட்டனர். இது நாவல் உடன்பாடான கருத்தன்று. (கைலாசபிள்ளை: 1955-பக். 58). எனலே. மேற் கூறிய கண்ணோட்டத்திலே நோக்குவ தானால் சமூக அமைப்பு. அதில் நிலவிய உறவுகள் ஏற்பட்ட மாற்றங்கள், மாற் றங்களால் ஏற்பட்ட தேவைகள், தேவை கள் காரணமாக எழுந்த சமூக எதிர்பார்ப் புக்கள். அவ்வாறு எதிர்நோக்கிய குழு வினர். அவர்களின் தேவைகள் என்பன வற்றின் பின்னணியிலே ஆறுமுகநாவல ரின் நடவடிக்கைகள், நடவடிக்கைகளுக் கான உந்துதலின் தன்மை, நடவடிக்கை களால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன வற்றை நோக்குதல் வேண்டுமென்பது புலனாகிறது (சிவத்தம்பி: 1979).

நாவலர் ஓரு வரலாற்றுப் புருடராக விருப்பதனால், இவ்வாய்வினை எவ்வாறு மேற்கொள்ளலாமென்பதற்கு ஓரிப்போல் வழிகாட்டுகின்றார்.

சமூக நிகழ்ச்சிகளினதும் நிகழ்வு களினதும் தோற்றம், காரணகாரியத் தொடர்பு பற்றிய விளக்கங்களை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. ஒருகுறிப்பிட்ட சமூக - பொருளாதார கட்டமைவினுட் காணப்படும் (Socio economic formation ) தனி மனிதர் களின் பருப்பொருட்சூழலை அறிந்து கொள்வது தான். மக்கள் வாழுகின்ற நிலையில். மனிதக் கருத்துக்கள், சமூகம்பற்றிய கருதுகோள்கள் ஆகி யனவற்றின் சாரமே இந்தப் பகுப் பொருட் கூறுகளினால் ஏற்படுவது தான். அதுமட்டுமன்று, மக்களின் சிந் தனையை, உந்து தல்களை, நடவடிக்கை களை, சமூக நடத்தையை உருவாக் கும் புறத்தேவையாகவும் அவை அமைகின்றன.''

(ஓதிப்போவ்: 1969-பக். 21-22)

அத்தகைய ஓர் ஆய்வு இங்கு செய்யப் படுதல் முடியாது. நாவலர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக-பொருளாதாரக் கட்டமைவு. அக்கட்டமைவினுள் முனைப் யுப்பெற்றுநின்ற சமூகக் குழுக்கள். அவர் களின் பொருளாதார, சமூகத்தேவைகள். அவை சமூகத்தில் பிரதிபலித்த முறைமை, இத்தேவைகள் பற்றி நாவலர் உணர் வதற்குக் காரணமாக விருந்த அவரது குடும்பப்பின்னணி, சமயக்கல்விப் ளணி, அவர் உந்துதல்பெற்ற முறைமை, அவருக்கு உதவிய சமூகக்குழுக்கள். அவர் களின் தேவைகளும் (எதிர்பார்ப்புகளும்) நாவலரின் இலட்சியங்களும் இணைந்த முறைமை என்பனபற்றியும். நாவலர் நினைவு போற்றப்படுவதற்கான காரணங் கள். அவரின் நிளைவு போற்றப்படும் முறைமை, போற்றுவோரின் வரிக்க நிலை பாடுகள். இவற்றின் காரணமாக நாவல ரின் ஆளுமை பற்றி நாம் இன்று கொண் டிருக்கும் கருத்துக்கள் என அவ்வழிப்பட்ட

கார்த்திகேசு சிவத்தம்பி

ஆய்வு விரியும். இத்தகைய ஓர் ஆய்வுக்கு எம்மை இட்டுச் செல்லும் வகையில் நாய லரின் வரலாற்றுப் பின்னணியும் ப பாட்டுப் பின்னணியும் தெளிவாக்கப்பட்டு வருவதனை நாம் காணலாம். இல்லாறு நோக்கும் பொழுது நாவலர் பற்றிய சமூக வரலாற்றியல் ஆய்வு தவிரிக்கப்பட முடி யாத வகையில் வளர்வதற்கான அறிவுப் பின்னணி ஏற்படுவதையும் அவதானிக் கக் கூடியதாகவிருக்கின்றது.

(கைலாசபதி:1972, சோமகத்கண்:1074

சிவத்தம்பி: 1978

இக்கட்டுரையிலே முதலில், தனிமனி தனின் சாதனைகள். சமூக வரலாற்றில் (அதாவது சமூகவியல் ஆய்வு நெறியினைக் கொண்டு நோக்கும் வரலாற்றியலில்) எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்ப தனை நோக்கி, அடுத்து நாவலரின் ' சாத ளைகளை''ச் சமூகலியற் பின்னணியில் எவ் வாறு விளங்கிக்கொள்ள முடிகின்றது என்பதலை நோக்குவோம்.

மரபியற் சமூகவியலாளர் குறிப்பாகத் தமது ஆய்வுவட்டத்தினுள் தனிமனித ஆளுமைக்கு முக்கிய மளிக்காதுவிடினும், சமூகவரலாற்றியலில் தனி மனித ஆளுமை முக்கியத்துவம் பெறுவது இயல்பே. இத் தகைய சமூகவியலாளரே, கைத்தொழிற் சமூகவியல், அரசியற் சமூகவியல் போன்ற உப- துறைகளில் ஆய்வு செய்யும்பொழுது ** தலைமை க்கு முக்கியத்துவம் கொடுப் பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.

எனவே இங்கு நாம் வரலாற்றுத் பின் தலைமைக்கான சமூகளியற் பின்னணியை நோக்குவோம்.

(அ) ''ஒவ்வொரு குறிப்பிட்ட காலப் பகுதியிலும் சமுதாயத்தின் ஸ்தாபன வடிவம்தான் திற னுள்ள அல்லது திறனற்ற தனி நபர்களின் பாத்திரத்தையும் அதன்விளைவாக அவர்களின் சமுதாய முக்கியத்துவத்தை யும் நிர்ணயிக்கின்றது ''
(பிளெகானவ் பக். 82)

எனவே, நாவலரின் தலைமை பற்றி ஆராய்வதற்கு நாவலர் காலச் சமுதாய
அமைப்பு, அத்த அமைப்பில் அவருக் திருந்த வாய்ப்புக்கள் ஆகியனவற்றை அறிவது அத்தியாவசியமாகும்.

நாவலரது எழுத்துக்கள், எழுத்தின் மூலம் அவர் சாதிக்கவிரும்பிய பணிகள், கல்வி நிறுவனங்கள். அக்கல்வி நிறுவனங் யோர் போன்ற காரணிகளை அடிப்படை யாகக் கொண்டும், அவர் காலச் சமூக அமைப்புப்பற்றியும் அவ்வமைப்புச் சீர் கெடாமற் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் வாதிட்ட முறையினை அடிப்படை யாகக் கொண்டும், அவரது குடும்பப் பின் னணி அவரது குடும்பத்தினரின் திருமண உறவுகள் ஆதியன கொண்டும் பார்க்கும் (பிளெகானவ்: பக். 101) பொழுது, நாவலர். அக்காலத்தில் யாழ்ப் பாணத்தில் நிலவிய, நிலவுடைமை வர்க் கத்தின் பிரதிநிதியும் தலைவருமென்பது தெரியவரும். மேனாட்டாட்சியனுபவ முடைய இவ்வர்க்கமே அக்காலத்தில் அசைவியக்கம் கொண்ட குழுவாக இயங் கியது என்பதும் புலனாகும். அக்காலத் தில் பிறிதொரு வர்க்கத்திலிருந்து தாவ லர் ஆற்றிய பணிகளைச் செய்யக்கூடிய ஒரு தலைவன் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் அந்த வர்க்கங்கள் இந்தப் பிரச்சனைகளாலே பாதிக்கப்படும் நிலைமை இருக்கவில்லை.

(ஆ) "தமது வளர்ச்சிக்கு அனுகூல மான சமுதாய நிலைமைகள் எங்கெங்கு, எவ்வெப்போது நிலவுகின்றனவோ அங்கெல் லாம். எப்போதும் ஆற்றல் கள் தோன்றுகின்றன என்பது நீண்ட காலமாகப் பார்த்த விஷயமாகும். இதற்கு அர்த்களில் பயிற்சிபெறத்தக்க தகைமையுடை தம் பதார்த்தத்தில் தோன்று கிற ஒவ்வொரு ஆற்றல் மிக்க புருஷனும், அதாவது ஒரு சமூ தாப சக்தியாக விளங்கும் ஒவ் வொரு ஆற்றல் மிக்க புருஷ னும், சமுதாய உறவுகளால் உண்டாக்கப்பட்ட பொருளேபாவாள் " விளை

(இ) "முன்னணியில் திற்கும் வர்க்கம். திறமையும் ஆற்றலுமுடைய தலைவர்களின்றி, அரசியல் மேன்மையைப்பெறமுடியாது; தன்னுடைய அதிகாரத்தைப் பேணவும் வலுப்படுத்தவும் முடியாது; அதன் அரசியல் எதிரிகளுக் கெதிராகப் போராடமுடியாது.

வரலாறு எடுத்துக்காட்டி யுள்ளது போன்று, அத்தலை வர்களின் தோற்றத்தை ஊக் தவிக்கும் காலத்தின், வர்க் கத்திள் பண்புக்கேற்ப வெவ் வேறு வகைப்பட்ட காலகட் துவது டங்களில் வெவ்வேறு வகைப் பட்ட தலைவர்கள் தோன்றி யுள்ளனர். ஒவ்வொரு வர்க்க மும், தனது சமூகப் பண்புக ளுடன் இயைந்து நிற்கும் ஒரு குறிப்பிட்ட வகைத் தலைவ னையே விதி நெறியாகத் தோற்றுளிக்கின்றது.

இக்கட்டத்தில் நாவலருக்கும் செட்டி குலத்தினருக்கும் நிலவியதொடர்புக்கான சமூகவியற் காரணிகளைத் தெளிவுபடுத் அத்தியாவசியமாகும். நாவலர் குடும்பத்துக்கும் ஒரு செட்டி குடும்பத்தி னர்க்கும் திருமண உறவு இருந்தது. நாவ லர் கட்டிய பாடசாலைகளுக்கு ஆரம்பத் திலும் தொடர்ந்தும் உதவியளித்தோர் அக்குலத்தினரே. நாவலரின் பணி வட்டத் துள் வந்த வண்ணார்பண்ணை. பருத்தித் துறைச் சிவன் கோயில்களுக்குச் செட்டி மாரே பொறுப்பாளராக விருந்தனர். (டெனிசோன்: 1988-பக். 248) ஆறுமுகநாவலரின் இந்தியப் பயணத்தின் பொழுதும், இவர்கள் முக்கிய இடம் பெற் றனர். இவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு வணிக வர்க்கத்தின் உறவு

இருக்கும்பொழுது அவரை நிலவுடைமை யின் பிரதிநிதியாகக் கொள்லதுமாத்திரம் பொருத்தமாகுமா என்ற வினா எழலாம்.

இதற்கு அச் செட்டிகுலத்தினரின் பொருளாதார நடவடிக்கைகளை அறிதல் வேண்டும். இவர்கள் நிலவுடைமை யமைப் பினுள்ளே தோன்றும் நகரங்களில் வாழ்ப வர்கள். அந்த அமைப்பினிடையே காணப் படும் தூரதேச வணிகம் இவர்களது பிரதான தொழிலாகும். உள்ளூரில் அவர் கள் 'லேவாதேவி' வியாபாரத்தில் ஈடுபடு வார்கள். இதன் அடிப்படையான முதல் “கடுவட்டிமுதல்' (usuary capital) ஆகும். இவ்விரு அமிசங்களுமே நிலவுடைமையின் துணைப்பொருளியற் பண்புக ளாகும். மேலும் இதே வேளையில் பிரித்தானிய ஆட்சியின் பொருளாதார நடவடிக்கை களினால் (வங்கி நிறுவுதல் போன்றவை) இவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப் புக் காணப்படுகின்றது. யாவற்றுக்கும் மேவாக இவர்களது உபரி - இலாபங்கள் (Surplus-profits) கோயில் கோயில்களைப் பேணுதல் ஆகியவற்றுக் குச் செலுத்தப்படுவதே பாரம்பரிய வழக்கமாகும். அத்துடன் இக்குழுவி னர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தமையால், அவருள் ஒரு பிரிவினர் யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூக அமைப்பிள் உயர் குழுவினரான வெள்ளாளருடன் இல்லாந்துமிருந்தனர். செட்டி வெள்ளாளர் என்ற 'துணைச் சாதி'யின் தோற்றமிதுவேயாகும்.

எனவே, இவையாவற்றையும் ஒன்றி ணைத்து நோக்கும்பொழுது அன்று நிலவுடைமைச் சமூக நாவலர் பொகு ளாதாரக் கட்டமைவின் உள்ளதமான பிரதிநிதியாக அமைந்தார் என்பது தெரி யும். அத்துடன், அந்நிலவுடைமை அமைப் புள்ளும். அக்காலகட்டத்தில் மேனாட் டாட்சித் தொடர்புடைய குடும்பங்க ளுக்கே நாவலரை எதிர்நோக்கிய பிரச் இளைகள் முக்கியமாக விருந்தன. நாலலர் அத்தகைய ஒரு குடும்பத்திலேயே-உத்தி யோக ஊழியர்களைக் கொண்ட ஒரு குடும்

கார்த்திகேசு சிவத்தம்பி

பத்திலேயே பிறந்தாரென்பதும் முக்கிய மாகும். இந்த மேனாட்டுமயமாக்கத் தாக் கம் படிப்படியாகவே யாழ்ப்பாணத்தின் முக்கிய கிராமங்களுக்குச் சென்றது. அப் படிச் சென்றபொழுதுதான் அவ்வக் கிரா மங்களிலுள்ள நிலவுடைமைக் குடும்பத் தினர் சைவ-ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவினர்.

[மாளிப்பாய், உரும்பராய், காரை நகர், தெல்லிப்பழை, புத்தூர். அள வெட்டி, ஈரவெட்டி, புலோலி போன்ற யாழ்ப்பாணத்து முக்கிய கிராமங்களின் சைவ-ஆங்கிலப் பாடசாலைகளின் (கல் லூரிகளின்) தோற்றம் பற்றிய விவரங்கள் அவ்வப் பகுதிகளின் சமூக வரலாற்றுக் கான சுவாரசியமான அமையும்]. தகவல்களாக

ஆறுமுகநாவலர் என்னும் வரலாற் றுப் புருஷனின் நினைவு இன்றும் போற்றப் படுவதற்குக் காரணமாக விருப்பது, இரு கட்டுதல், துறைகளில் அவரது ' ' கடமைப் பணிகள்'' (roles) பெற்றுள்ள இடமேயாகும்.

(அ) மத-பண்பாட்டுப் பாரம்பரியப் பேணுகை.

(ஆ) ஈழத்து இலக்கியப் பாரம்பரியத் தோற்றுவிப்பு.

1960ஆம் ஆண்டுத் தொடக்ககாலம் வரை இரண்டாவது கடமைப்பணி தனி யொன்றாக விதந்து கூறப்படவில்லை. முத 'லாவதுடன் இணைத்தே அதுவும் நோக்கப் பட்டு வந்தது.(வெபாதசுந்தரம்: 1950). உண்மையில் இக்கட்டுரையிலும் முதலா வதே ஊன்றி ஆராயப்பட வேண்டிய தாகும். ஆனால் இரண்டாவது "கடமைப் பணி"யௌ 1960க்குப் பின்னர் விதந்து கூறப்பட்டது; கூறப்பட்டு வருவது, மூன் ருவது பரிமாணம் ஒன்றினுக்கும்,

(இ) தேசீய வீரர் இடமளித்துள்ளதால், இக் கிளைநிலைப் போற்றல் முயற்சியின் சமூகலிய லடிப் படையினைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் வேண்டும்.

நாவலரின் இலக்கியப் பணியினை இலங்கை இலக்கியப் பாரம்பரியத்தின் கால்கோளாகக் கொள்ளவேண்டுமெனும் எழுத்தாளர் இயக்கமே முதன் முதலில் நாவலரது பணியினை மதச்சார்பற்ற முறையில் எடுத்துக்கூற முன்வந்தது. ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்திளை எடுத்து நிறுவ 1960களில் முன்னணியில் நின்ற இயக்கம் முற்போக்கு எழுத்தாளர் சங்கமாகும். இந்த இயக்கத்தின் இலக்கிய நடவடிக்கைகளின்படி நிலைவளர்ச்சியினை அறிந்துகொள்வது அவசியமாகும். அது முதலில் ஈழத்திற்குத் தளியொரு இலக் இயப் பாரம்பரியம் உண்டு என்பதை நிறு விற்று. அடுத்து, அந்த இலக்கியப் பாரம் பரியம் தேசிய இலக்கியத் தன்மை கொண்டதென்பதை வலியுறுத்திற்று. தேசிய இலக்கியமென்பது ஒரு நாட்டில் வாழும் பல குழுக்களையும், மொழி வேறு பாடுகட்கிடையேயும் இலக்கியப் பொரு ளால் இணைப்பது என்னும் கருத்தையும் வற்புறுத்தி, மேற்சென்று அத்தகைய தேசிய, யதார்த்த இலக்கியம் படைக்கப் படுவதே அக்காலகட்டத்தின் தேவை யெனக் கூறிற்று. இவ்வாறாக சமூகத்தின் முற்போக்குக்கான வளர்ச்சியுடன் இலக்கி யத்தை இணைப்பதே அவ்வியக்கத்தின் நோக்கமாகவிருந்தது. முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தினர் ஈழத்து இலக்கிய பாரமபரியத்தின் அடிவேரைத் தேடும் முயற்சியினூடாக நாவலரை ஈழத்து இலக் கியப் பாரம்பரியத்துடன் மாத்திரமல் லாது, ஈழத்துத் தமிழ்மக்களின் முற்போக் கான இலக்கியப் பாரம்பரியத்துடனும் இணைத்தனர் (சிவத்தம்பி: 1978). இலங்கை யின் தேசியக் கட்சியொன்றின் கிளை இயக்க மாகத் தொழிற்பட்ட இவ்வியக்கத்தினர் இவ்வாறு நாவலரைத் தமிழில் ஈழத்தின் தேசிய இலக்கியப் பிதாவாக நிலை நிறுத் தியபொழுது, மாறிவந்த வரலாற்றியல் தோக்குக்கள் காரணமாக (changes in bistoriography ) அவரைத் தேசியவீர ராகப் போற்றவேண்டிய தர்க்கரீதியான ஒரு தேவையும் ஏற்பட்டது. (சோமகாந் தன்: 1972).இவ்வாறு நாவலரை ஈழத்

துத் தமிழிலக்கியத்தின் ஊற்றுக்காலாக வும், தேசிய இலக்கியச் செல்நெறியின் விடிவெள்ளியாகவும், தேசிய விழிப்புணர் வின் தமிழ்ப்பிரதிநிதியாகவும் முன்வைத் ததால் ஒரேவேளையில் இரு காரியங்களைச் சாதிக்கக்கூடியதாக விருந்தது.

(அ) தமிழ்மக்களிடையே தமது இலக் கிய இயக்கத்திற்கு அங்கீகாரம் பெற முளைந்தமை

(ஆ) சிங்கள மக்களிடையே தமது இலக்கிய இயக்கத்தின் தேசிய நிலைப்பாட்டை எடுத்துணர்த் தியமை.

முதலாவது மிகச் சுலபமாக நிறை வெய்தவில்லை. இரண்டாவது மிகச் சுலப மாக நிறைவெய்திற்று. இந்த இரண்டா வது சாதனைதான் இக்கட்டத்தில் முக்கிய மாகின்றது. முற்போக்கு இலக்கிய இயக் கத்தின் வேகம் 1985க்குப் பின் (பல்வேறு அகப்புறக் காரணிகளினால்) குன்றிய பின் எரும், நாவலரின் தேசிய முக்கியத்து வத்தை தமிழ் மக்களிடையேயுள்ள உயர் மத்தியதர வர்க்கத்தினர் தம்மைத் தேசிய மட்டத்தில் இளைாத்துக் கொள்வதற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். 1959இல் நடைபெற்ற ஆறுமுகநாவலர் சிலை நாட்டு விழாவினை இச் செல்நெறியின் வெளிப் பாடாசுக் கொள்ளலாம். நாவலரைத் தொடர்ந்து நினைவுகூருவதற்கு, நாவல ருக்கு முற்போக்கு இலக்கிய இயக்கத்தின ரால் வழங்கப்பெற்ற தேசியப் பரிமாணத் தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆனால் இன்றோ. சாதி, மத வேறு பாடுகளை வாடறுத்துச் செல்லும் தமிழ் பேசும் மக்களின் தேசியச் சுயநிர்ணய உரி மைப் போராட்டமும், இந்துத் தமிழ்மக் களிடையே நடத்தப்பெறும் சமூக சமத் துவப் போராட்டமும், நாலலரின் பணி களை வேறொரு கண்ணோட்டத்தில் வைத்து, மதிப்பிடவேண்டியதற்காள ஒரு வரலாற் றுத் தேவையை உண்டாக்கியுள்ளன. (சிவத்தம்பி: 1979).

நாவலரின் வரலாற்றுச் சாதனைகளைச் சமூகவியற் கண்ணோட்டத்தில் மதிப்பிட முனையும் இக்சுட்டுரையில், நாவலரின் பணியையும், அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டன வற் றையும், அவரது பணிகளுக்கான, அவரா லேயே எடுத்துக்கூறப்பட்ட உந்துதல்களு டன் இணைத்து நோக்குவது அத்தியாவசிய மாகின்றது. இதற்கு நாவலர் விட்டுச் சென்றுள்ள தள்-வரலாற்றுச் சார்புநிலைப் பட்ட ஆவணங்கள் முக்கியமாவது இயல்பே. அவற்றுள் மிக முக்கியமான மூன்றை நாம் இங்கு எடுத்து நோக் குவோம்.

முதலிரண்டும் அவர் 1868இலும் 1870 இலும் வெளியிட்ட விக்கியாபனங்களா கும். இவ்விக்கியாபனங்களில் முதலாவது இந்தியாவிலும், இரண்டாவது இலங்கை யிலும் வெளியிடப்பட்டது. இவை இரண் டுமே அவரது இயக்கத்தின் ஏறத்தாழ இருபதாவது வருடகாலப் பிரிவினுள் வரு பவை. எனவே இவற்றில் அவர் தமது முக்கிய ‘கடமைப்பணி' யினை ஐயந்திரிபற உணர்ந்தும் தெரிவித்துமிருப்பாரென்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்க தரவாகும்.

முதலாவது விக்கியாபளத்தில் (1868) தான் செய்த ''பரித்தியாகங்"களைப்பற் றிக் குறிப்பிட்டுவிட்டு

*இவைகளெல்லாவற்றிற்கும் காரணம் சைவசமயத்தையும், அதன் வளர்ச்சிக்குக்கருவியாகிய கல்வியை யும் வளர்த்தவ் வேண்டும் என்னும் பேராசையேயாகும்.

இப்பேராசையினால் இருபது வருஷகாலம் நான்செய்த முயற்சிகள் பல; அவைகளுள்ளே சித்திபெற்றவை மிகச்சில, சைவசமயிகள் யாவரும் சைவசமயத்திலே சிரத்தையுடையர் களாகித் தங்கள் தங்களால் இயன்ற உதவிகள் செய்தார்களாயின், நான் எடுத்த முயற்சிகளெல்லாம் இதற்கு முன்னரே நிறைவேறி விடும்; நிறை

கார்த்திகேசு சிவத்தம்பி

வேறின், என்னைப்போலவே பிறரும் அங்கங்கே நன் முயற்சிகளைச் செய் வார்கள்; செய்யிற் கல்வியும் சமயமும் தழைத்தோங்கும்

நிலையில்லாத என் சரீரம் உள்ள பொழுதே என் கருத்து நிறை வேறுமோ நிறைவேறதோ என்னும் நவலை என்னை இரவும் பகலும் வருத் துகின்றது. அக்கருத்து இது. தமிழ்க் கல்வியும் சைவசமயமும் அபிவிருத்தி யாதற்குக் கருவிகள் முக்கியஸ்தலம் தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப் பிரசாரணஞ் செய்வித்தலுமே யாம்."

(கைலாசபிள்ளை : 1958-பக். 54-55) எனக் கூறுகின்றார்.

1870இல் இலங்கையில் வெளியிட்ட விக்கியாபனத்தில்.

..இந்தப்பிரகாரமே வட தேசத்திலும் இலங்கையிலும் ஊர் தோறும் வித்தியாசாலை தாபிக்கவும் தேவாலயந்தோறும் சைவப் பிரசங்கம் பண்ணுவிக்கவும் வேண்டும். இப்படிச் செய்யிற் கல்வியுஞ் சைவசமயமுந் தழைக்கும் ''

(கைலாசபிள்ளை: 1955-பக். 58)

எனவே, நாவலரின் பிரதான பணித் துறை "சைவமும் தமிழ்க் கவ்வி'யும்தான் என்பது நிறுவப்பெறுகின்றது. கிறித்துவப் பாதிரிகளின் கல்விக் கொள்கையில் கிறித் துவத்துக்கும் கல்விக்குமிருந்த தொடர்பு காரணமாகவே இவரும் சைவத்தையும் இணைத்தார். மிஷனரிமார் யாழ்ப்பாணத் நில் சுல்வி மூலம் சாதிக்க விரும்பியதை 1881இல் லண்டனில் ஜோன் பிறௌண் என்னும் பாதிரியார் நிகழ்த்திய சொற் பொழிவொன்று நன்கு எடுத்துக்காட்டு கின்றது. அதனை அதன் மூலத்தில் வாரிக்கும் பொழுதே அதன் பூரண தாக்கத்தையும் உணரலாம்.

"The School is the most powerful ally of the missonary, in as much, as it destroys all confidence in the religious books of his fathers. It destroys all confidance in the Shastras of the Hindus as religious guide. It is well known to those who have studied the subjects that these books are full of absurdities concerning nature, concerning the cosmogeny and physical geography of the world in which we live; and a bright intelligent boy has not been in the mission school many days before he is able to go home and say to his father, "Hereafter, I cannot accept for your books as my guide..." This is the first stage of the process

of the boy's conversion". Small: பக். 313

நாவலர் மறைந்து இரண்டுவருட காவத் திற்குப் பின்னரே, வண. ஜோன் பிறவுண் (Rev. John Brown) இவ்வாறு கூறியிருக்க முடியுமெனில், நாவலர் கல்வி மூலமே சைவத்தைப் பேணவும் அபிவிருத்தி செய் யவும் முனைந்தமை ஆச்சரியத்தைத் தருவ தன்று.

மூன்றாவது ஆவணம் நாவலர்,1852இல் வில்லியம் அண்டர்சன் எனும் தேசாதி பதிக்குச் சமர்ப்பித்த 'பிட்டீசம்' (pctition) ஆகும். அதில் அவர் தமது இயக்கத்தின் தேவையை வற்புறுத்துகின்றார். அதற்கு முகவுரையாக அவர் கூறுவனவும், அம் முகவுரையின் பின்னர் தமது வேண்டு கோளை எடுத்துக் கூறியுள்ள முறைமையும் அவர் கண்ணோட்டத்தில், அவர் நடத்திய இயக்கத்தை எமக்கு அறிமுகஞ் செய்து வைக்கின்றன.

The petitioner in common with the best informed position of the Tamil community is bound to acknowledge with gratitude the important advan- tages. which his countr ymen have

derived from Her Majesty's Govern- ment under whose protection a gracions Providence has placed the inhabitants of this island.

The petitioner is equally bound to acknowedge that by the labours of the different Missionaries in the Northern Province the State of Society has been considerably im- proved. It would bowever be disin- genuous on his part were he to hesitate respectfully and with diference to express his own conviction that had the influence in the Missionary Schools been less exacting of the renunciation of the conscientious attachment to the religious predile- ction entertained by the Tamil youths instructed therein the latter would have derived morally greater advan- tages from the tution imparted to them

Since that period (i. e. from 1843 when govt. schools system was abolished and grants given to Pro- testant & Catholic Schools ] parents and relations the of many youths in the country felt reluctant to send them to the mission schools preferring that the instructon needed to qualify their children for both a useful and profitable carrer in life should not involve their alienation from and moral requirements amongst their country men . .......''

தனஞ்செயராசசிங்கம: 1674-பர் 1

பிரித்தானிய ஆட்சியின் வருகைக்காக இந்நாட்டு மக்கள் தெய்வத்திற்கு நன்றி செலுத்துகின்றனர் என்று தொடங்கிய நாவலர், வடமாகாணத்தில், மிஷனரி மாரின் சேவையினால் சமூகத்தின் நிலை44

கார்த்திகேசு சிவத்தம்பி

நியாயமான அளவு உயர்ந்துள்ளது என் பசையும் ஒப்புக்கொண்டுவிட்டு. மேற் சென்று,

"மிஷனரிமார் பாடசாலைகளில் தமிழ் இளைஞர்களை அவர்களது சுய மத ஈடுபாட்டிலிருந்து விடுவிப்பதற்கு எடுத்த முயற்சிகளைச் சிறிது தளர்த்தி யிருந்தால், அக்கற்பித்தல் முறை யினால் அவர்கள் அதிகமான அற நெறி நிலைப்பட்ட நன்மைகளைப் பெற திருப்பார்கள் ''

என்று சுற்றுச் 'சுற்றி வளைத்துச்' சொல்லி விட்டு, இந்துப் பாடசாலைகளுக்கு மாவி யம் அளிக்காதது பற்றிக் குறிப்பிடும் பொழுது,

**வாழ்க்கையிற் பிரயோசன மானதும் இலாபகரமானதுமான ஒரு தொழிலைப் பெறுவதற்கான தகுதி வாகும். யைத் தங்கள் பிள்ளைகள் பெறுவ தென்பது, அவர்களை அவர்களது தேசத்தினரிடமிருந்தும், அம்மக்களி டையே வாழ்வதற்கான அறநெறிப் பட்ட தேவைகளிலிருந்தும் அந்நியப் படுத்துவதாக இருத்தல் கூடாது' என ஆணித்தரமாகவே கூறுகின்றார்.

இங்கும் அவர் கோரிக்கை ஆங்கிலக் கல்வி காரணமாகச் சைவசமய வாழ்க் கைப் பாரம்பரியத்திலிருந்து யாழ்ப்பாண மக்கள் பிறழக் கூடாது என்பதுதான். இப் பிட்டீசத்தில் வரும் "morally". "moral requirements' எனும் தொடர்கள் மிக முக்கியமானவை யாகும். Morals என்பது அறநெறி, ஒழுக்கம் என்பனவற்றைக் குறிக்கும். நாவலர் குறிப்பிடும் யாழ்ப் பாணச் சைவ சமூகத்தின் "morals' ( அற நெறி, ஒழுக்கங்கள்). ''moral require- mcats" ( அறநெறி, ஒழுக்கத் தேவைகள்) என்பன யாவை என்பதே இவ்விடத்தில் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண் டியனவாகும்.

அவற்றுக்கான பதிலைத் தேட முனை வதற்கு முன்னர், நாவலர் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக்கொண்டார் என்பதும்,

பிரித்தானிய ஆட்சி வழிவந்த சமூகமாற் றங்களை. அவை மேற்குறிப்பிட்ட அற நெறி, ஒழுக்கத்தாக்கங்களை ஏற்படுத் தாது விடின் அவற்றை அவர் ஏற்கத் தயங்கவில்லை என்பதும் தெட்டத் தெளி வாக விளங்குகின்றன. அதாவது சமூக வியல் பரிபாஷையிற்கூறுவதானால். அவர் நவீனமயப்படுத்தலை எதிர்க்கவில்லை. ஆனால் நவீன மயமாக்கம் (modernizatin) பாரம்பரியத்தை உடைப்பதாக இருத்தல் கூடாது என்றே கருதினார் என்பது தெரிய வருகின்றது. அதாவது நாவலர், பாரம் பரிய சமூக நிறுவன அமைப்பை உடைக் காத நவீனமயப் பாட்டையே விரும் பினார் என்பது தெரியவருகின்றது. சமூக அதிகாரத்தைப் பொறுத்தவரையில் இந் நிலைப்பாட்டின் தன்மை யாதென்பதே இங்கு பதிலளிக்கப்படவேண்டிய வினா

இவற்றுக்கான விடையை அறிவதற்கு முள்னர். அவர் " சைவப் பாரம்பரியம் " எனக்கொண்டவை யாவை யென்பதையும் அறிந்து கொள்ளுவோம். இவற்றை அவர் இருவகையாகக் கூறியுள்ளார்

(i) செய்யப்பட வேண்டியவை, அதாவது ' உடனிலை' நடத் தைகள் (positive behaviour) (li) செய்யப்படக் கூடாதவை,

(negative behaviour) "சைவவிரோதம்", "யாழ்ப்பாணத் துச் சமயநிலை", "தமிழ்ப் புலமை" (மூக் கியமாக 12வது அமிசம்), ''சைவ சமயி'', "அநாசாரம்" போன்ற கட்டுரைகளில் இக்கருத்துக்களை நன்கு காணலாம். கைலாசபிள்&: 1981)

இவற்றில் அவர் சடங்கு நடத்தை களையும் (ritual behaviour) சமூகத்தின் நிறுவன ரீதியான அமைப்பையும் இணைத்தே நோக்கியுள்ளார் நன்கு தெரியவருகின்றது. என்பது

எனவே நாம், இக்கட்டத்தில், சமயத் தின், சமய ஒழுக்கத்தின் சமூகவிய வடிப்
படையை அறிந்து கொள்வது
வசியமாகின்றது.

''எனவே, சமூகவியலாளர் நோக் கிவ், மதம் என்பது, மனிதன், தனது முழுக்குழவினுள்ளும் தான்பெறும் அது பவங்களுடன் தன்னை இயைபுறத்திக் கொள்வதற்கான ஒரு பண்பாட்டுக் கருவியேயாகும்.!! (எவிேைபத் நோற்றிம்:195ல் f)

நாவளர் மதம் பற்றிக் கூறுவனவற்றி விருந்து அவர் அதனைப் பணபாட்டின் கருவியாகவே கொண்டாரேன்பது புலன கிறது. ஆனால் சிறிது ஊன்றிக் கவணிக்கும் பொழுது அவர் அப் பண்பாட்டுக் கருவி பற்றிய ஒரு விளக்கத்தைக் (அதாவது வியாக்கியானத்தை) கொண்டிருந்தா ரென்பதும் ஐயத்துக்கிடமின்றிப் புலன கிறது. சமூகவியலாளர், இத்தகைய விளக் கங்களுக்கும், விளக்குபவரின் சமூக பொரு ளாதார அடிப்படைகட்கும் பாதேனு மொரு வகையில் தொடர்பு இருக்குமென் பதை வலியுறுத்துவர்."

**....ஒரு முழுச் சமூகத்தினலோ அல்லது ஒரு சமூக அமைப்பின் பெரும் பிரிவுகளாவோஏற்றுக்கொள்ளப்படும் கருத்தமைதிகள் (idea-systems), நீண்டகாலச் செவ்வாக்கு ஊடாட்டங் களின் வழியாக வருவனவாகும். அத் தகைய செவ்வாக்குகள், மத. நல் லொழுக்க, அறப் பெறுமானங்களை எடுத்தோதுகின்றனவும், அவற்றைப் பேணுவனவுமான பணிகளுடன் தொடர்புடைய குழுக்களை உள்ளடக்கி நிற்பனவாக விருக்கும். அத்துடன் (அச்செல்வாக்குகளுக்குள்) பொருளா தார,அரசியற் குழுக்களும், மேலோங் கிய அதிகாரமுடைய குழுக்களும் இடம் பெறும்.

அத்தியா தூய்மையான, மூல நிபிைற்கூட, அக் காலத்தில் நிலவும் சமூக, பொருளா தார, அரசியல் நிலைமைகள் பற்றிய அபிப்பிராயங்களுடன் எவ்வித தொடர்புமற்றனவாக வளர்த்தெடுக் கப்பட முடியாது" (:டல் 41 - 42)

தமது இக்கூற்றுக்கு மோசன், புத்தர், முகம்மது. கிறிஸ்து, கல்வின் முதலிய எவருமே புறநடையல்லர் என எலிளபெத் நொட்டிங்கரம் எடுத்துக் கூறுவர். எனவே நாவலரும் இவ்விதிக்குக் கட்டுப் படுதல் இயல்பே, நாவகரை ''ஐந்தாங் குரவர்" எனக்கொள்ளும் மரபிலேயே இச் சமூகவிளக்கம் தோக்கு நிற்கின்றதென லாம். சைவத்திற்கு "ஆபத்து'த் தோன் றிய காலங்களில் தோன்றிய முதல் நான்கு குரவர்கள் போன்று இவரும் சைவத்துக்கு ஆபத்துத்தோன்றிய ஒரு கட்டத்திவே தோன்றி, சைவத்துக்குப் புத்துயிர் அளித் தாரேன்பதே அதன் உட்கருத்தாகும். ஆயினும் சைவத்துக்கு ஆபத்து ஏற்பட்ட ஒவ்வொரு காலகட்டத்தினதும் வெவ்வே டூள சமூக திண்மைகளை நாம் மனதிற் கொண்டோமானல், ஒவ்வொருவரும், தத்தம் காலத்து நிலைமைக்கேற்ப, கோட் பாடுகளுக்கேற்பச் சைவத்தைப் "பாது காத்தனர்" எனக் கொள்ளலாம். நாவ லரைப் பொறுத்தவரையில், அவர்,பாழ்ப் பாணத்து மேனிச் சமூகக் குழுவைப் பாதுகாப்பதன் மூலமே. சைவத்தைப் பாதுகாக்க முடியுமென்று நம்பிஞர் என் பதும் அவ்வாறு தொழிற்பட்டாரென் பதும் தெட்டத் தெளிவாகின்றது, அதா வது பாரம்பரிய அமைப்புக்குள் நவீன மயப்பாட்டை இயைத்துக்கொண்டார்.

சமூக அதிகாரத்துக்கும் தத்துவத் தோற்றத்துக்குமுள்ள தொடர்பு பல அறிஞர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளது. சோழர் காளச் சமூக அமைப்புக்கும் முக் கியமாகச் சமூக அதிகாரத்துக்கும். சைவ சித்தாந்தத்திற்குமுள்ள உறவினைக் கைவா மேலும், எந்தவொரு மத ஒழுக் சபதி எடுத்து நிறுவியுள்ளார் (கைலாசபதி: அதன் மிகத் 1967), படிநிமைப்பட்ட சமூக அதிகாரம்

நிலவும் ஒரு சமூக அமைப்பில் சைவசித் தாந்தம் இயைபுறுகின்ற முறைமை அவ் வாய்வு வழியாகத் தெரிய வருகின்றது. பாரம்பரியச் சமூக அதிகார உடைவை விரும்பாத நாவலரும் சைவசிந்தாந்தத் தைத் தமது மத விளக்கக் கோட்பாடாகக் கொண்டிருந்தமையை நாம் அவதானிக் கத் தவறலாகாது.

இவற்றை அன்று நிலவிய சமூக உறவு களின் அடிப்படை கொண்டு சமூக அதிகா ரத்தை விளக்க முளையும்பொழுதுதாள். முன்னர் குறிப்பிட்ட “ Morally' ''Moral requirements' என்பனவற்றின் சமூக அடிப்படை துல்லியமாகின்றது.

ஆனால் இன்னொரு வரலாற்றுண்மை யையும் நாம் மறந்துவிடலாகாது. நாவலர் சைவத்தைப் பேணுவதற்கான கல்விச் சாதனமாக முதற்கொண்டது தமிழ்ப்பாட சாலையையே, ஆனால் ஆங்கில ஆட்சி வழங் கிய உத்தியோக ஊழிய வாழ்க்கைக்கு ளது. அத்தகைய பாடசாலைகள் வாயில்களாக அமையா என்பதை யுணர்ந்த அவ்வர்க்கம் நாவலரை ஊக்குவித்தும் போற்றியும் நின்ற அதேவேளையில், அப்பாடசாலை களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வில்லை. அவர் 1872இல் தொடங்கிய ஆங்கிலப் பாடசாலைக்குத் தானும் தங்கள் பிள் ளைகளை அனுப்பவில்லை. 1876இல் அதுவும் மூடப்படவேண்டியதாயிற்று. இங்கு தலை வளின் இலட்சியம் அவனது குழுவின் லௌகீக நோக்கினால் தோற்கடிக்கப் படு வதையும் காணலாம்.

நாவலரின் பிரக்ஞை. நிலைப்பட்ட அரசியல் நடவடிக்கை அவரது இறுதி வருடத்திலேயே எடுக்கப்படுவதையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. பொன்னம்பலம் இராமநாதனுக்கு அவர் அளித்த ஆதரவு காரணமாக, நாவலர் இயக்கம் (அதாவது மதநிலை வழி நின்று சமூக அதிகாரத்தைப் பேணுதல்) அரசியல் இயக்கமாக மாறுகின்றது. இராமநாதன் யாழ்ப்பாணத்துத் தமிழ்மக்கள் சம்பந்த மாக எடுத்துக்கொண்ட முயற்சிகளும்

கார்த்திகேசு சிவத்தம்பி

நிலைப்பாடுகளும் ஆராயப்படும்பொழுது தான் இவ்வுண்மை புலனாகும்.

ஆயினும் இதுவரை ஓரளவு கோடி யிட்டு மாத்திரமே காட்டப்பெற்ற சமூக நிலைநின்ற நோக்குக்கொண்டு பார்க்கும் பொழுது, நாவலரின் மத, சமூக இயக்கத்தின் வன்மையையும் வரையறைகளை யும் காணக் கூடியதாகவுள்ளது. நாவலர் 1879 இல் மறைந்தார்.

இந்தியாவில், பிரித்தானிய ஆட்சி யின் தாக்கத்தால் இந்துக்களிடையே ஏற் பட்ட மத, சமூக சீர்திருத்தங்களின் முதற் கட்டம் 1880இல் முடிவுற்றதாகக் கொள் ளப்படுகின்றது. பிரித்தானிய இந்தியா வின் முதற்கட்ட இந்து இயக்கங்கள் பற்றி ஜோர்டன்ஸ் கூறுவது, யாழ்ப்பாணத்தில் 1879 வரை நாவலரால் நடத்தப்பெற்ற இயக்கத்துக்கும் பொருத்தமாகவே யுள்

1880 வரையிலான முதலாவது கட் டத்தில், சமூக சீர்திருத்தம், ஐரோப் பிய செல்வாக்குக்குட்பட்டகுழுக்களைச் சேர்ந்தோர், தங்களாலும் தங்களைப் போன்றோராலும் அனுபவிக்கப்பட வேண்டியிருந்த இன்னல்களைச் சமா ளிப்பதற்கான ஒரு விருப்பின் காரண மாகவே பெரும்பான்மையும் தோன் றிற்று. பெரும்படியான மக்கள் பற் றிய அக்கறையோ, அல்லது தாம் (அக்காலத்தில்) புதிதாகக் கண்ட றிந்து கொண்டிருந்த சமுதாய நியதி களுக்கும் அறப் பெறுமானங்களுக்கும் ஏற்ப வாழ்க்கையை மீளமைப்புச் செய்வதற்கான விருப்போ இருந்த தாகத் தெரியவில்லை. தங்களுடைய கருத்துக்களைத் தெளிவு படுத்துவதி லும் அவற்றைத் தமக்கு அண்மித் தோராகவிருந்த புத்திஜீவிகளுக்குப் பிரசாரம் செய்வதிலுமே கவனஞ் செலுத்தி நின்றனர். எனவே இவ்வா றாகத்தானே இம்முதற்கட்டம், நிறு வள அமைப்புக்களிலும் பார்க்க பிரசாரத்திற் கவனஞ் செலுத்தும் ஒரு காலகட்டமாக, சீர்திருத்தவாதி முற் றிலும் தனது குழுபற்றியே அக்கறை கொண்டிருந்த ஒரு காலகட்டமாக, அத்துடன் அரசியல் அக்கறை அப் பொழுதுதான் முளைவிடுங் காலமாக

மேலும், சமூக சீர்திருத்தமென்பது மத சீர்திருத்தத்தினை வன்மையாக அடித்தளமாகக் கொண்டேயிருக்க வேண்டுமென்றும் பொதுவாகக் கரு தப்பட்ட ஒரு காலகட்டமாக அமைந் திருந்தது".

சான்றாதாரங்கள்

1950. Sivapathasundaram S.. Arumuga Navalar, Jaffna. 1951. கைலாசபிள்ளை த. (பதிப்பாசிரியர்), - ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு சென்னை (2ஆம் பதிப்பு).

1954. Nortingham, Elizabeth K.- Religion and Society, New York. 1955. கைலாசபிள்ளை த. ஆறுமுகநாவலர் சரித்திரம், சென்னை (4ஆம் பதிப்பு).

1968. Parsons, Talcolt (ed) Knawledge and Society, Voice of Amcrica Forum Lectures, Washington. Denizov V. Historical Materialism (cd. Glazerman and Kursanov), Moscow.

1969. Osipov G. Seciology, Moscow.

1972. சோமகாந்தன். - இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கியவிழா மலர் கைலாசபதி க. - அஞ்சலி, வட இலங்கைச் சிறப்பிதழ். -

1974. Thanajeyarajasingham S. - The Educational Activities of Arumuga Navalar, Colombo.

1975. Jordens J. T. F. in a Cultural History & India (ed A. L. Basham). Oxford. 1977. கைலாசபதி க. பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்ளை (இரண்டாம்

பதிப்பு). 1978. சிவத்தம்பி கா.- ஈழத் தில் தமிழ் இலக்கியம், சென்னை. 1979. Sivathamby K. Hindu Reaction to Christian Proselytization and Westerni-

zation, Social Seience Review, Vol. 1, No. I, Colombo.

திகதியற்றவை

Small W. J . T. (cd.) A History of Methodist Church in Ceylon (1814-1864) Colombo.

பிளெகாளல், கி.வ.: வரலாற்றில் தளிநபர் வகிக்கும் பாத்திரம் (மொ.பெ. ஆர். கே. கண்ணன்), மொஸ்கோ.

ஈழத்து வரலாறும் தொல்லியலும்


No comments:

Post a Comment

பிரபாகரன்- பாண்டி பாஜார் சம்பவம்- உண்மை என்ன⁉️உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...