Friday, December 22, 2023

#ஊழல்வழக்குகள்/ தீர்ப்புகள்.. #DisproportionateAssetsCase #திமுக #dmk




#தமிழக_திமுகஅமைச்சர்கள் எ.வ. வேலு  கே.என்.நேரு,உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சோதனை வட்டத்தில் இருக்கின்றனர். இப்படி 10, 11 திமுக அமைச்சர்கள்.

இதில் பொன்முடி மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவியை இழந்துள்ளார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலையும் அவை எந்தெந்த நீதிமன்றங்களில் எந்த கட்டத்தில் உள்ளன என்ற தகவல்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
இது போன்ற வழக்குகளை கண்காணிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி கங்கபுர்வாலா தலைமையிலான அமர்வு இந்த வழக்குகளை கண்காணித்து, கீழமை நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கும். அமைச்சர் துரைமுருகன் மீது வேலூரில் வழக்கு நடைபெறுகிறது. கே என் நேரு மீது இரண்டு வழக்குகள் உள்ளன, ஐ. பெரியசாமி மீது நான்கு வழக்குகள் நடைபெறுகின்றன, எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன, அதே போன்று ரகுபதி, பெரியகருப்பன், டி எம் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன. அமைச்சர் கீதா ஜீவன் 2022ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் மேல் முறையீட்டுக்கு அரசு செல்லவில்லை. மேல் முறையீட்டுக்கு செல்ல வேண்டும். இப்போது கிடைத்த ஒரு தீர்ப்புடன் நின்று விடக் கூடாது. இது காலம் கடந்த தீர்ப்பு ஆகும். மற்ற வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.  எ.வ. வேலு 
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகள் நடத்தினர்.
இன்னும் வரும் காலம்….⁉️

#2Gவழக்கு கனிமொழி, ஆ. ராசா வழக்குகள் டில்லி உயர நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவும் இருக்கிறது.

#பொன்முடி 
#ஊழல்வழக்கில்தீர்ப்புகள்
#DisproportionateAssetsCase #preventionofcorruptionact
#ponmudi
#திமுக_ஊழல்வழக்குகள் 

 #கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-12-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...