Friday, December 8, 2023

மதிமுக- வைகோ . அன்றும் இன்றும்….

சில தினங்களுக்கு முன், தினமலர் ஏட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக சென்றுள்ள *வைகோ*  அங்கு  மாநிலங்கள்அவையில் அதன் தலைவர் அழைத்தும் பேசவில்லை ஏன் மௌனமாக இருக்கிறார் என்கிற மாதிரியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

என்ன ஒரு சிக்கலான கேள்வி

வைகோவுடன் நெடுநாள் பழகியவன்!  பல முக்கியமான மக்களுக்கான செயல்பாட்டின் மீதான முடிவுகளில் கூட இருந்து கலந்து ஆலோசித்து அவருக்கு ஊக்கம் கொடுத்தவன் என்கிற முறையில் இந்த செய்தி எனக்கு மிகுந்த மனச்சங்கடத்தை உண்டாக்கியது. எப்பேர்ப்பட்ட பேச்சாளர்! முன்பு எப்பேர்பட்ட வினைகளைச் செய்யக் கூடியவர்! வடக்கில் தமிழ் மக்களுக்கான தென்னக நியாயங்களை  உரத்த குரலில் எடுத்துச் சொல்லி அதற்காக நாடாளுமன்றத்தில் முழங்கியவர்! வினாக்கள், கவன ஈர்ப்பு,தனிநபர் மசோதாக்களை முன்வைத்து  பலமுறை பாராளுமன்றத்தில் வாதம் புரிந்தவர் !.ஒரு காலத்தில் பத்திரிகையாளர் நண்பர் மறைந்த சுதாங்கன் 1980களில் சொல்லியது மாதிரி  நாடாளுமன்றத்தின் புலி போல் உலவிய வைகோவா ஆறாவது முறையாக நாடாளுமன்றம் சென்ற வைகோ இன்று மௌனமாக இருக்கிறார் என நினைக்கும் போது அந்த சங்கடம் மேலும் கவலையாக மாறியது.என்னிடம்  இதை குறித்து பல பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது எதையும்  சொல்லாமல் கடந்தேன்.

 எங்கள் இருவருக்கும் இடையே   இப்போதும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவருடைய வைராக்கியத்தையும் அவருடைய பேச்சையும் அவருடைய துணிச்சலையும் பார்த்து வந்தவன் என்ற முறையில்
அவருடைய இந்நாள் அமைதி வருத்தத்துக்குரியதாக தான் இருக்கிறது. அந்த வகையில் அவருடன் என்னுடைய கருத்து வேறுபாடுகளும் கூட ஆரோக்கியத்திற்கான சில விவாதங்கள்தான். அவை யாவும் நியாயங்கள் நோக்கிதான்…. *மதிமுக* 1993 இறுதியில் கட்டிய இயக்கம். தமிழக நலன், கட்சி ஜனநாயம் சீர் செய்யவே அரசியல் கட்சியாக  நியாயங்கள் ஜெயிக்கட்டும் என துவங்கப்பட்டது. ஆனா நினைத்தது நடக்கவில்லை. ஆதனால் எங்கள் வாழ்வில் ஏற்பட்ட தன் சிரமங்களை அதிகம் என்பது வேறு விடையம்.  (ரப்பர் பந்து போல துள்ளியது மதிமுக· இந்த துகள்கள் பின்னடைவை ஏற்படுத்தாது, ஆனால் அவை மோதிய பிறகு ஒன்றிணைக்கும் என்ற இயங்கி கடபாடுகளை  கொடுத்தோம்). ஆனால் தமிழ் மக்கள் அன்று ஆவலாக எதிர்நோக்கிய அடர்ந்த மறுமலர்ச்சி திமுகவின் பின்னடைவு தமிழ் மண்ணில் உரிமைகளை காக்க, மீட்க இன்றைக்கு உருப்படியாக எதுவும் இங்கு இல்லை. இதில் யாரை என்ன சொல்ல…

இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகதேர்ந்தெடுக்கப்பட்டுப் போனவர்கள் பலர் தகுதியற்று கை,கால் பிடித்து ஏதோ வகையில் திடிர் என கட்சிக்கு வந்த நபர்கள் கூட சென்று விடுகின்றனர். ஆனால்,வைகோ நாடாளுமன்ற பணிகளை duty மற்றும்ppassion 
ஆக நினைப்பார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் நாடாளுமன்ற இரு அவையில் உறுப்பினர் ஆவார்.

ஒரு காலத்தில் தீவிரமாக பல சிக்கல்களை குறித்து முழங்கியதும் செயல்பட்டதும் ஈழத் தமிழருக்காக அவர் குரல் அந்த அவையில் கொடுத்ததும் இன்றும் மக்கள் மனதில் நீடிக்கத்தான் செய்கிறது . அவரைப் பேச விடாமல் எது தடுக்கிறது என்பது ஒருபுறம் இருக்க  எதிர்காலத்தில்  அவர் பேச வேண்டிய சூழ்நிலை வரும்போது என்ன பேசுவார்  என்றும் யோசிக்க வைக்கிறது.அவரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.

#தமிழகஅரசியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-12-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...