Thursday, December 7, 2023

#*திடிர் நபர்கள்-திமுக*

#*திடிர் நபர்கள்-திமுக*

இன்றைக்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரை யார் என்றே எனக்கு மட்டுமல்ல திமுக முன்னோடிகள் பலருக்குமே அவர்களை தெரியவில்லை. .
அவர்கள் எங்கிருந்து, எப்படி திடிர்னு வந்தார்கள் என்றும் புரியவில்லை. இன்றைக்கு  திண்டுக்கல் ,கடலூர்  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள போன்ற சிலரை நான் 2018 வரையில் திமுகவில் எந்த இடத்திலும் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை. இவர்களுக்கெல்லாம் எதன் அடிப்படையில் வாய்ப்பு தரப்பட்டது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நாடாளுமன்றத்தில்  பேசிய பின்  திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினால் கண்டிக்கப்பட்டு மன்னிப்பு கேட்டு நிற்கிறார். இப்படியான அரைகுறைகள்  திமுகவுக்கு என்ன பெருமையை தேடித் தந்து விடப் போகிறார்கள்

என்னைப் பொறுத்தவரை தூத்துக்குடி பெரியசாமி மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு தான் முதல்வர் ஸ்டாலின் என்னை ஒதுக்கி வைத்தார். இருக்கட்டும் அதனால் எனக்கு ஒன்றும் பெரிய வருத்தமெல்லாம் இல்லை. இப்படிபட்ட நபர்கள் எந்த உழைப்பும் திமுகவுக்கு வழங்காமல் திடிர் என கட்சிக்குள் வந்து ஸ்டாலின் தயவில் மந்திரி-MP என பதவி பெற்று பொறுப்பற்ற நடப்பது வடிக்கையாகிவிட்டது.

இப்படியான வெற்று விசுவாசிகளும் அரசியல்,  வரலாறு தெரியாதவர்களும் பெரும் பணம் சம்பாதிப்பவர்களும் தன்னைச் சுற்றி இருந்தால் போதும் என்று நம்புகிறார்கள் .
இப்படியாக  எங்கிருந்தோ வந்தவர்கள் பலவாறாக திமுகவில் இடம் பெற்று விட்டதால் அதன் உண்மையான வாழ்நாள்  வேர்களாக இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

கடந்த காலத்தில் எந்த ஒரு நடவடிக்கையின்  போதும் கலைஞர் என்னை அழைத்து கலந்து ஆலோசிப்பார். அவருடைய தொலைநோக்கோடு இணைந்து என்னுடைய கருத்தையும் நான் பதிவு செய்வேன். அப்படியான சூழல் அன்று . இன்று இப்படி முகம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய திமுகவில்  திடிர் தோற்றும பெறும் இந்த சந்தர்ப்பவாதிகளும் துதிபாடிகளும்   என்ன செய்யப் போகிறார்கள் என்பதை முதல்வர் அறிய வேண்டும்.

இது போன்ற நபர்களுடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுகிற இவர்களின் நடவடிக்கைகள் மீது  முதல்வர் கவனம் அற்று இருப்பது எதிர்கால நலன்களுக்கு உகந்ததாக இருக்காது .

#ksrpost
7-12-2023.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...