Sunday, December 31, 2023

வாழ்க்கை வேடிக்கையானது, அற்புதமான தளம். அதில் தடம் பதித்து நமது சுவடுகளை வெளிப்படுத்த வேண்டும்.

“The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.”
― #WilliamShakespeare, As You Like It 

வாழ்க்கை வேடிக்கையானது, அற்புதமான தளம். அதில் தடம் பதித்து நமது சுவடுகளை  வெளிப்படுத்த வேண்டும்.

நீங்கள் ஒன்றுமில்லாமல் வருகிறீர்கள், பிறகு நீங்கள் எல்லாவற்றிற்கும் போராடுகிறீர்கள், பிறகு எதுவுமில்லாமல் போகிறீர்கள்.

இந்த  உலகில் நீங்கள் இழக்கவும் ஏதுமில்லை. தொலைக்கவும் ஏதுமில்லை. உரிமை கொண்டாடவும் ஏதுமில்லை. உங்கள் உடலும் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.

கவலை இல்லையெனில் மனிதனும் இல்லை. சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும். சிலரது வாழ்க்கையும் மாறும்.

ஆகவே எதற்கும் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இருக்கும் வரை உங்கள் வாழ்வை சிறப்பாக  நிறைவாக வாழ வேண்டும்.

மனம் ஒரு தோட்டம்.......
எண்ணங்களே இங்கு விதைகள்......
அதில் மலர்களை வளர்ப்பதும்.......
களைகளை வளர்ப்பதும் அவரவர் விருப்பம்.......

கடந்த 53 வருட எனது பணிகளில் குறிப்பாக... கடந்த 35  வருடங்கள நிறைய எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. என்னை, எனக்குக் காட்டியிருக்கிறது.  இந்த வாழ்க்கை பயணத்தில் நல்லவர்கள் சிலரையும் மற்றும் பலரையும் புரியவும் முடிந்தது.சின்னச் சின்ன சந்தோஷங்கள் உண்டு.

இந்த நிமிஷம் வரை யாருக்கும் துரோகம் செய்ததில்லை. காயப்படுத்தியதில்லை. ஆனால் துரோகமும் காயமும்  தடைகளும் இழப்புகளும் எனக்குப் புதிதில்லை. புத்தாண்டு சபதமெல்லாம் போட்டதில்லை. இன்னும் பணிகள் செய்யவும்,எழுத வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறேன். 

இப்போதும் போல் எப்போதும் கெளரவமும் கம்பீரமுமாக இருக்கவே விருப்பம். அந்த கம்பீர கெளரவம், உண்மையாய் இருப்பதில்தான் கிடைக்கும் என்று நம்புகிறவன் நான். 2023ம் ஆண்டு வாழ்த்துகள்.

#புத்தாண்டு2024
#newyear

#சிந்தனைகள்_சில
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
31-12-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...