Tuesday, December 26, 2023

#*தமிழக வெகுஜன அரசியல் பதம் பார்த்த மக்கள் அறியா ஆளுமைகள்*

#*தமிழக வெகுஜன
அரசியல் பதம் பார்த்த மக்கள் அறியா ஆளுமைகள்*
 ————————————
பிரிட்டிஷாரின் ஆட்சி முதல் மக்கள் அரசியலுக்கும் குரல் கொடுத்த 
ஆர்.நல்லகண்ணு  இன்று 99 ஆவது பிறந்தநாள். 

இந் நாளில் சிலரை நினைத்துப் பார்க்கிறேன்;

•#வஉசி 

•சிறையில் துன்பப்பட்டு நோய்வாய் பட்டு வெளியே வந்த வத்தலகுண்டு #சுப்பிரமணியசிவா. 

•கன்னியாகுமரி #தீரன் செண்பகராமன்.

•#அயோத்திதாசர்.

•#இரட்டைமலை சீனிவாசன்.

•#ஓமந்தூரார்

•#சேலம் பி.வரதராஜநாயுடு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர். இவர் பெரியாரை காங்கிரஸ் கட்சியின் காரியதரசியாக  நியமித்தார். காமராஜர் முதல்வர் ஆகவும்
உதவியர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டின் நிறுவனர்.

.#திருவிக

•#மறைமலைஅடிகள்.

•#நாவலர் சோமுசுந்தரபாரதி.

•கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் #ஜீவானந்தம் ,

•#சிங்கராவேலர்.

•#சக்கரைசெட்டியார்.

•#பி.எஸ்.குமாரசாமிராஜா.

•#மதுரை வைத்தியநாதஅய்யர்.

•அரசியல் அமைப்பு சட்ட மூல பிரதியில் தமிழில்  கையெழுத்து இட்ட  #தூத்துக்குடி மு.சி.வீரபாகு. 

• தமிழை வளர்த்த #அவினாசிலிங்கம்.

•#தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம்.

•#பட்டுக்கோட்டை
அழகிரி.

• #ஈவிகே.சம்பத் 

•#கவிஞர் கண்ணதாசன்

•#விவசாயசங்க தலைவர் நாராயணசாமி நாயுடு

•#புதுக்கோட்டை வல்லத்தரசு, 

•சுதந்திரா கட்சி கம்பன் அடிப்பொடி  
#சா.கணேசன் 

•#பழ .நெடுமாறன்,

•#தஞ்சை ராமமூர்த்தி,

•பா ஜ க தலைவர் கச்ச தீவுக்கு 1976 இல் வழக்கு தொடர்ந்த மதுரை
#ஜனா.கிருஷ்ணமூர்த்தி.

•பவானிசாகர் அணையை கட்ட குரல் கொடுத்த  #ஈஸ்வரன் 

•ஏற்காட்டிற்கு வழி அமைத்து மேட்டூர் 
அணையை உயர்த்தி அரசியலமைப்பு அவையில் இடம்பெற்ற #காளியண்ணன்.

•#கோபி லட்சுமணன்

•கலைஞரின் வேண்டுகோளுக்கு ஏற்ப #ஜனசங்கம், #இன்றைய பாஜக உறுப்பினராக இருந்த சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த #சேஷாத்திரிதான் மதுரையில் முத்து மேயராவதற்கு ஓட்டை போட்டவர்! 

•#தமிழருவிமணியன்

மேலும் இன்று வரை இயங்கி வரும், 

•அருமைக்குரிய தோழர் #சி.மகேந்திரன்  

•ஒரு காலத்தில் மாணவர் அமைப்பிலிருந்த…முன்னாள் சிபிஎம் மாநிலத் தலைவர் 
#ஜி.ராமகிருஷ்ணன் 

•மகளிர் வரிசையில்  #உ.வாசுகி போன்றோர் பலரும் இன்றும் தன்னலமற்று இயங்கி வந்தவர்கள். 

முழு வாழ்க்கையையும்  பலன் கருதாது அரசியலுக்காக சிந்தித்த.  என நீளும் என்னை போன்ற பட்டியலில் நீளமானது.

பாவம் பரிதாபம் என்று யாரும் இதற்கு உச்சுக் கொட்ட வேண்டியதில்லை. இவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டின் வரலாறு இல்லை.

இவர்களெல்லாம் ஒரு எம்பி /எம்எல்ஏ  பதவியில் அமர அவ்வளவு தகுதி உள்ளவர்களாக இருந்தும் அந்த வாய்ப்பு ஏன் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு இந்த தமிழகம் செய்தது என்ன? 

இவர்களோடு அன்றி,என்னைப்போல் அரசியல் வாழ்க்கையில் உழைத்த பலரையும்  இந்த  தமிழக வெகுஜன அரசியல் பதம் பார்த்திருக்கிறது. தங்களுக்கு தேவையான விசுவாசிகளை தேர்ந்தெடுப்பதன் அரசியல் வியூகமா?

போக இன்றைய அரசியலில் பலன் பெற்று வரும் பல அடிவருடிகளுக்கு மேற்சொன்ன எவரையும் பற்றிய அறிமுகமோ அவர்களுடைய தியாகம் சார்ந்த அறப்போராட்ட  வாழ்க்கைகளைப் பற்றிய தெளிவும் வாசிப்பும் ஏன் பின்பற்றுதலோ கூட இருக்காது என்பதை நான் அதிகம் விளக்க வேண்டியதில்லை. மேற்சொன்ன யாரும் அரசு முறையில் இதுவரை போற்றப்படவே இல்லை. மாறாக மறக்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் காலம் இவர்களை மறப்பதில்லை. உண்மை வரலாறு எப்பொழுதும் வெளிப்பட்டு தான் தீரும்.

#தமிழகவெகுஜன_அரசியல்_பதம்_பார்த்த_மக்கள்அறியாாஆளுமைகள்
#தமிழகஅரசியல்
#தமிழகம்அன்றும்இன்றும்
#Tamilnadupoltics #Madraspresidency

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
K.S.Radhakrishnan 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-12-2023.


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...