Wednesday, November 13, 2024

#சாமுத்ரிகாலட்சனம் அல்லது


 #சாமுத்ரிகாலட்சனம் அல்லது 

#அங்கலட்சணம் பற்றி இந்து மரபியலில் சமஸ்கிருதம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் பழமையான நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. 


சாமுத்ரிகா லக்‌ஷணத்தை சோதிட இயலோடு தொடர்புடைய ஒரு கலையாகவே பலரும் கருதுகின்றனர். பழந் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு வாழ்வியல் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையான அத்தனை அம்சங்களின் ஊடாக இந்த கலையின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. 


அகத்தியர், தேரையர்,போகர் போன்றவர்களின் பாடல்களில் இந்த அங்க லக்‌ஷணம் பற்றிய விவரிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆண், பெண் என இரு பாலாருக்கும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். ஒருவரின் அங்க அமைப்பு அவரின் இயல்புகளையும், அவர்களுக்கான பலன்களையும் தீர்மானிப்பதாக கூறுகின்றனர். 


சாமுத்ரிகா  லக்ஷணம் ஆண்களின் வகைகள் :


சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பழமையான நூல்கள் இருந்தாலும் காலத்தால் சித்தர்களின் பாடல்களில் காணப் படும் தகவல்களே மிகப் பழமையானதாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளில் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி தனி நூல்கள் கிடைத்திருக்கின்றன.


அந்த நூல்களின் பெயர்கள் பின் வருமாறு...


அகத்தியர் அருளிய “அகத்தியரின் ஏம தத்துவம்”

அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000”

போகர் அருளிய “போகர் 12000”,

தேரையர் அருளிய “தேரையர் நயனவிதி”


ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பெரும் பிரிவாக வைத்து சாமுத்ரிகா லக்‌ஷணம் கூறப்பட்டிருக்கிறது. இரு பாலினத்தவரிலும் வெவ்வேறு வகைகள் இருப்பதாக துவங்கி அவர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கான இயல்புகளை பட்டியலிட்டிருக்கின்றனர்.

ஆண்களில் நான்கு வகையினர் இருப்பதாக தன் மாணவர் புலத்தியருக்கு கூறிடும் அகத்தியர், 

விதவஸ்தசுபசாதி

பயிரபதி சாதி

சாமசாதி

பிரகாசாதி


சாமுத்ரிகா லக்ஷணம்:-ஆண்களின் வகையும், தலை முடியும் !

பெரும்பாலும் நாம் தலையில் உதிப்பதை வைத்துத்தான் வாழ்கிறோம்.

எனவே அதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும்படியாக வைத்திருப்பது அவசியம்.1/2


விதவஸ்தசுபசாதி

********************

இந்த வகை ஆண்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் வாகுடன் நேர்த்தியான அங்கங்களை கொண்டு, அழகிய உடற்கட்டினை கொண்டிருப்பார்கள் என்றும்,எப்பொழுதும் சூடான உணவையே விரும்பி உண்பவர்களாக இருப்பர் என்கிறார். பொதுவில் தூய்மையான நல்லொழுக்கமும் எப்போதும் உண்மையையே பேசும் இயல்பினராக இருப்பர் 


பயிரபதி சாதி

***************

இந்த வகை ஆண்களின் தலையானது உயர்ந்தும்,அகன்ற தடித்த நெற்றியினை கொண்டிருப்பர் என்கிறார்.மேலும் இவர்களின் காதுகள் வழக்கத்தை விட பெரியதாக இருக்குமாம். இத்தகையவர்கள் சூடான உணவை வெறுப்பவர்களாக இருப்பர். பொதுவில் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் 


சாமசாதி

**********

இந்த வகையான ஆண்கள் தோற்றத்தில் முரட்டுத் தனமாக தென் பட்டாலும் மனதளவில் மென்மையானவர்களாகவும், நல்ல இயல்பினராகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என்கிறார். மேலும் சூடான உணவினை சிறிது சிறிதாய் ரசித்து உண்ணும் தன்மையுடைவர்கள்..

 

பிரகாசாதி

************

இந்த வகையான ஆண்கள் செம்மையான முகமும் நீண்ட வெண்மையான பற்களும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும். பொதுவில் இத்தகையவர்கள் கபடத்தனம் நிறைந்தவர்களாக, பொய் பேசும் இயல்பினராகவும் இருப்பர் என்கிறார்.


ஆண்களைப் பொறுத்தவரையில் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மீசை, தாடிகள், மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பு, தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், ஆகியவைகளின் அமைப்பினை வைத்து பலன் கூறியிருக்கின்றனர்.


தலை முடி

************

தொடுவதற்கு மிருதுவாகவும்,அதே நேரத்தில் உறுதியான முடியையுடையவர்கள் மிகுந்த ஆண்மையுடையவர்களாம், இத்தகையவர்கள் குளிர்ச்சியுள்ள சரீரத்தையுடையவர்களாக இருப்பார்களாம்.

தொடுவதற்கு மிருதுவாகவும்,கீழே தொங்கிக் கொண்டிருக்கும் முடியுள்ளவர்கள் இரத்த பிடிப்புயுடையவர்களாயும்,உஷ்ண உடம்பை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.


அதிக அளவில் அடர்த்தியுடன், விரைந்து வளரும் இயல்புடைய முடியுடையவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படுவார்களாக இருப்பார்களாம்.

அடர் கருப்பு நிறமாகவும், அதே நேரத்தில் சுருள் சுருளாயுமிருக்கிற முடி உடையவர்கள் அதிக உஷ்ணமுடையவர்களாக இருப்பார்களாம்.


நேராகவும், முடிவில் முள்ளம்பன்றியின் சிறு முள்ளைப் போலும் உள்ள முடியையுடையவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்களாம்.

வழவழப்பானதும், வளைந்த முடி உள்ளவர்கள், நேர்மையானவர்களாயும், விஷய விவகாரங்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையுடைவர்களாக இருப்பார்களாம்.


பளிச்சென பஞ்சு போல மிருதுவான முடி உடையவர்கள் பலவீனமானவர்களாகவும், நோயாளிகளாயுமிருப்பார்களாம்.2/2


#சாமுத்ரிகாலட்சனம் 

#அங்கலட்சணம்

No comments:

Post a Comment

"கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள்

 "கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி ...