Monday, March 2, 2015

மோடி அரசுக்கு ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் வினா! ( Amnesty international )



சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பான  ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் இந்தியாவைக் குறித்து தனது அறிக்கையில் பல செய்திகளை கூறியுள்ளது.

1. கடனிலும், பரிதவிக்கும் அப்பாவி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் விதத்தில், அவசர நில கையகச் சட்டத்தை கொண்டு வந்தது முற்றிலும் தவறான அணுகுமுறை. இதனால் ஏழை, மத்தியதர, காடுகளிலும் மலைகளிலும் வாழும் பூர்வமக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாவர்கள்.

2. மக்கள் நல்வாழ்விலும், சுற்றுச் சூழல் சுத்தத்திலும், அடிப்படைத்தேப்வைகளிலும் முன்னுரிமைக் கொடுப்போம் என்று சொன்னவர்கள் அதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.

3.  பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் மதத் தொடர்பான விவகாரங்கள் அதிகரித்துள்ளன. அன்னை தெரசாவையே கொச்சைப் படுத்தும் வகையில், அவர் மதமாற்றத்திற்கு வழி செய்தார் என்று பேசிய செயல்களெல்லாம் இதில் உள்ளடங்கியது. தாய் மதம் திரும்பல் என்று
வலுக்கட்டாயமான நடவடிக்கைகள் நடந்தபடி உள்ளன.

4.  போபால் விஷவாயு வழக்கு மந்தமான நிலையில் இருக்கின்றது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் வறுமைக் கோட்டில் கீழ் உள்ளர்வர்கள் வளர்ச்சியில் மோடி அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைகள் குற்த்து வினாக்களையும், அந்த அறிக்கையில் மோடி அரசுக்கு எதிராக ஆம்னஸ்டி அமைப்பு எழுப்பியுள்ளது.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...