Monday, July 27, 2015

எப்படி இருக்கின்றது ஏர் இந்தியா நிர்வாகம். -Air India



இன்றைக்கு டெல்லி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சென்னை திரும்பும் பொழுது, ஏர் இந்தியா பயணச் சீட்டில் விமானம் எண் AI-142 நிற்கும் கேட்-18 என்று குறிப்பிடப் பட்டிருந்தது. விசாரித்த பொழுது விமானம் நிற்கும் கேட்-11 என்று கூறினார்கள்.

11-வது கேட்டில் காத்திருக்கும் போது சென்னைக்குத் திரும்ப,  பாரீசிலிருந்து வரவேண்டிய விமானம் வருவதற்கான தடயமே தெரியவில்லை.  விமானம் புறப்படுவதற்கு பத்து நிமிடம் மட்டுமே இருக்கும்பொழுது நிர்வாகத்திடம் மீண்டும் விசாரித்ததில், 10வது கேட்டுக்குச் செல்லுங்கள் என்று ஏர் இந்தியா பணியாளர்கள்.  விரட்டுவது போல தெரிவித்தார்கள்.

கடைசி ஐந்து நிமிட அவகாசத்தில் விமானத்தில்  ஏறவேண்டிய நேரத்தில் கேட் 12-A விற்குச் செல்லுங்கள் என்று அலைக்கழிக்கிறார்கள். எப்படி இருந்த  ஏர் இந்தியா இப்படி ஆகிவிட்டது. ஒரு பன்னாட்டு விமானநிலையத்தில் இப்படி நிர்வாகக் குளறுபடிகள் இருந்தால் வெளிநாட்டிலிருந்து வரும் பிரயாணிகள் இந்தியாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-07-2015.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...