கிரேக்கத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என்று சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதை சிலர் வேடிக்கையாகவும், தேவையற்ற அச்சம் என்றும் நினைக்கக்கூடும்.
இந்தியாவின் பொருளாதாரமும் சிக்கலில் தான் உள்ளது.
பல மாநிலங்களில் கடந்த காலங்களில் புதுச்சேரி, பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களின் பொருளாதார நிலை திருப்தியாக இல்லை. சில மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியமும் , ஓய்வூதியங்களும் வழங்கவே சிரமப்படுகின்றன என்று தகவல்கள் வருகின்றன.
1930ம் ஆண்டு உலகமே பொருளாதாரத்தில் தேங்கியிருந்தது. 1920ல் ஏற்பட்ட நுகர்வுக் கலாச்சாரம் தொழிற்துறையை மேலோங்கச் செய்ததே ஒழிய பொருளாதாரத்தை மந்தமாகவே வைத்தது. நுகர்வுப் பொருட்களைக் கடனுக்குப் பெற்றுச் சென்று, அந்த கடன்களை அடைக்க முடியாமல் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மைக்குச் சென்றது.
வரலாறும் கலாச்சாரமும் பாரம்பரியமுமான கிரேக்கத்தை பல லட்சம் கோடி யூரோ கடனில் மூழ்கடித்தது. இதனால் கிரீஸ் , ஐரோப்பிய யூனியன், பன்னாட்டு நிதியம் மட்டுமில்லாமல், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கடன்களை வாங்கிக் குவித்தது.
அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கிரிஸில் வங்கிகள் மூடப்பட்டு.. மக்கள் பணப்புழக்கம் இல்லாமலும், வங்கியில் பணம் எடுக்கமுடியாமலும் சிரமத்திற்கு உட்பட்டார்கள்.
இதனால் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கிரீசை கடன்கொடுத்த நாடுகள் கட்டாயப்படுத்தினார்கள். மேலும் வரிகளை உயர்த்தவும், மானியங்களை ரத்து செய்யவும் ஊதியங்களைக் குறைக்கவும் நிர்பந்தம் செய்தது. இதற்காக மக்களிடையே பொதுவாக்கெடுப்பு
நடத்தியபோது 61% கிரீஸ் மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
எனவே, கடன்கொடுத்த நாடுகளின் நிர்பந்தத்திற்கு அடிபணியமுடியாது என்பது பொதுவாக்கெடுப்பின் முடிவாக இருந்தது. இதைக்குறித்து அந்நாட்டுப் பிரதமர் அலெக்சி, “ஸ் சிப்ராஸ் சிரமமான நிலையிலும் உண்மையான ஜனநாயகத்தை முடக்கவோ மிரட்டவோ முடியாது” என்று பெருமையோடு சொன்னார்.
ஆகவே, நிர்பந்தங்களை ஏற்கமுடியாம, ஏற்கனவே கிரீசில் 40,000பேர் அரசுப் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். 2,500பேர் இரண்டாண்டுகள் இந்த அவலநிலையினைப் பார்த்து தற்கொலை செய்துகொண்டார்கள்.
மக்களின் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்திற்கு 21சதவிகிதம் வரியைச் செலுத்திவிட்டு அந்தப் பணத்தை மீட்டுக்கொண்டுவந்து கிரேக்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று வேண்டுகோளை விடுத்தது கிரீஸ் அரசாங்கம்.
இந்நிலையில் இன்றைக்கு உலக நாடுகள் கிரேக்கத்திற்கு தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு உதவ இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. கிரேக்கத்தை இடதுசாரி ஆட்சிகளிடமிருந்து மீட்க இதுதான் சரியான தருணம் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ முன்வருகிறார்கள் என்ற செய்திகள் வந்துள்ளன. கஷ்ட்டமோ நஷ்ட்டமோ மனித இனம் அழியாமல் கிரீஸ் காப்பற்றப்பட்டால் போதும் என்ற நிலை.
வெள்ளையரோ, கருப்பரோ மனிதநேயம் நாடுகள் கடந்து தளைக்கவேண்டும்.
-கே.எஸ் இராதாகிருஷ்ணன்.
14-07-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #GreeceEconomy
See also
:
http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_58.html
http://ksr1956blog.blogspot.in/2015/05/ancient-greek.html
http://ksr1956blog.blogspot.in/2015/07/greece.html
No comments:
Post a Comment