Sunday, July 12, 2015

தாமிரபரணியும் நெல்லை சுற்றுலா மாளிகையும். - Tamiraparani

நேற்றைக்கு(12-07-2015) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் ஓர் நிகழ்ச்சிக்காக நெல்லைக்கு வந்து வண்ணாரப்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்கள்.  அவர்களைச் சந்திக்க அங்கு சென்றபொழுது, சுற்றுலா மாளிகையின் பின்பிறத்தில் செடிகளும் கொடிகளுமாக புதர் மண்டிக்கிடந்ததை காண முடிந்தது.

1960களின் துவக்கத்தில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது, இந்த சுற்றுலா மாளிகைக்காக திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பொருநை நதிக்கரையில் அவரே இடம் தேர்வு செய்தார் என்றும், சுற்றுலா மாளிகைக்குப் பின்பகுதியில் தாமிரபரணி நதியின் நீர்ப்போக்கைக் காணக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்று விரும்பியே இந்தஇடத்தில் சுற்றுலா மாளிகையைக் கட்டினார் என்றும் 1978ம் ஆண்டு பழ.நெடுமாறன் அவர்களோடு திருநெல்வேலியில்  இங்கே தங்கியபோது விடியற்காலை வேளையில்  மாளிகையின் பின்புறம் அமைந்த தோட்டத்தின் சிமெண்ட் சாய்வு இருக்கையில் அமர்ந்தபடி என்னிடம் சொன்னார்.




ஆனால், இன்றைக்கு இந்த படங்களைப் பார்த்தால் எந்த காரணத்துக்காக தாமிரபரணிக்கரையில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அமைக்கப்பட்டதோ அந்த நதியே கண்ணுக்குத் தெரியாமல் செடிகொடிகளும் கிளைகளும், ஆகாயத் தாமரைகளும் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. சுற்றுலாமாளிகையின் சாளரத்தில் இருந்து பார்த்தாலும் அருகாமையில் ஓடும் தாமிரபரணி நதியின் நீர்ப்போக்கை காணமுடியவில்லை.

இதை சீர் படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை அல்லவா?.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...