______________________________________
நேற்றைக்கு இரவு பிபிசி தொலைக்காட்சியில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அந்நாட்டு நிதிநிலை அறிக்கையை ஜார்ஜ் ஆஸ்பார்ன் சமர்பித்து உரையாற்றியதை முழுவதும் கேட்க வாய்ப்பிருந்தது.
தொழிலாளர் கட்சி எதிர்கட்சியாக அங்கு இருக்கும் நிலையில் , ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் அரசுப்பணியாளர்கள், தொழிலாளர்கள், சாமானியர்கள் நலம் நாடி கோடைகால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.
பட்ஜெட் தாக்கல் செய்த ஆஸ்பானினுடைய பேச்சு கவனத்தை ஈர்த்தது. அந்தப் பேச்சு ரசிக்கக் கூடிய வகையில் மட்டுமில்லாமல் நடைமுறைக்கும் வருமா என்று லேபர் கட்சியினர் வினா எழுப்பியுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு முன்பு, ஜீரோ ஹவரில் லேபர் கட்சியின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பிரதமர் டேவிட் கேமரூன் அரை மணிநேரம் தயக்கமில்லாமல் லாவகமாகவும், வேடிக்கையாகவும் பதிலளித்ததும் பார்க்க நேர்ந்தது.
என்ன வேடிக்கை என்றால் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அமர்வதற்கு இருக்கைகள் அங்கு இல்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் நின்றுகொண்டும் இருக்கைப் படிகளிலும் கீழே அமர்ந்துகொண்டிருப்பார்கள். இதனை பிரிட்டன் சென்றபொழுது வேடிக்கையாக கேட்டபொழுது இதுதான் இங்குள்ள நடைமுறை என்று டேவிட் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்போது சொல்லி இருந்தார். நேற்றைக்கு இந்த காட்சிகளையும் தொலைக்காட்சிகளில் காண முடிந்தது
Link : http://www.mirror.co.uk/news/uk-news/george-osbornes-budget-2015-speech-6025464
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-07-2015
No comments:
Post a Comment