Thursday, July 9, 2015

கிரீஸின் சரிவு போல சீனாவுக்கும் சிக்கலா? - Greek and China



கிரீஸில் பொருளாதார சீரமைப்புக்காக நடந்த பொது வாக்கெடுப்பில், கிரீஸின் இறையாண்மையை காக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கலுக்காக பிறரிடம் கடன் வாங்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று முடிவாகியுள்ளது.

கடந்த பத்து நாட்களாக சீனாவின் பொருளாதார நிலையும் கிரீஸைப் போலவே சரிவை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.  சீனாவின் யென்-னின் மதிப்பும் சரிந்துவிட்டது. அங்குள்ள பங்குச்சந்தை பெரும் பாதிப்புக்குள்ளாகி பல வர்த்தக பணிகளும் முடங்கிவிட்டது.

43சதவிகித நிறுவனங்கள் அதாவது 1249 நிறுவனங்கள் பங்கு பேரத்தையே நிறுத்தி வைத்துள்ளது. ஆசியாவில் எல்லா பிரச்சனைகளையும் கடந்து உலகிலேயே அமெரிக்க ஆதிக்கத்திற்கு இணையாக முன்வந்த சீனாவின் வளர்ச்சிக்கு இது ஒரு பெரிய முட்டுக்கட்டை. இதனை சீனா எப்படி சரி செய்யப்போகின்றதோ..

உலக வரலாற்றிலும் நாகரிகத்திலும் முதன்மையான நாடுகளாகத் திகழ்ந்த கிரேக்கத்திற்கும், சீனாவிற்கும் இவ்வளவு பொருளாதாரச் சரிவுகள் ஏனோ தெரியவில்லை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-07-2015.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...