நேற்றைக்கு முதல்நாள் பாட்னாவில் மோடியின் பயணத்தின் போதும், இன்றைக்கு சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபொழுதும், அதே சாலையில்நான் பயணிக்கும் போது பிரதமர் மோடியும் பயணிக்கின்றார். எந்த இடங்களிலும் காவல்துறையோ பாதுகாப்புப் படையினரோ கண்ணில் தென்படவில்லை. இந்த இரண்டு நாட்களிலும் பார்வையில் பட்ட இந்த காட்சிகள் தமிழ்நாட்டை பற்றி சற்று சிந்திக்க வைத்தது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா பயணிக்கும் போது, பத்தடிக்கு ஒரு காவலர் நின்றுகொண்டு, காலையிலிருந்து மாலைவரை கால்கடுக்க நின்றுகொண்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கின்றது.
பிரதமருக்கே இந்த பரிவாரங்கள் இல்லாத போது, ஒரு முதலமைச்சருக்காக அவர் பயணிக்கும் சாலையில் காவலர்கள் காத்திருந்து அசௌகரியங்கள் ஏற்படுவது நியாயம் தானா?
மோடிக்கும் நமக்கும் பல விஷயங்களில் மாறுபட்ட கருத்து உண்டு. பீகாரின் முதல்வர் நிதிஷ் குமாரின் டி.என்.ஏ குறித்த விஷயங்கள் பற்றி மோடி பேசி பீகார் மக்களை அவமானப்படுத்திவிட்டார் என்பது வேறு விடயம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-07-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #
No comments:
Post a Comment