தி இந்து நாளிதழ் பாலாறு, பவானி ஆறு, முல்லைப்பெரியாறு, திருவேற்காடு நீர்நிலைகளைக் குறித்து அரிய தகவல்களுடன் செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த கட்டுரையினை தற்போது வெளியிட்டு வருகிறது.
அதுகுறித்தான எனது கடிதத்தை இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நம்முடைய உரிமைகள் எப்படி பறிபோனன. 1970களின் இறுதியில் இப்பிரச்சனை குறித்தான விபரங்கள் அறியப்படாமல் உள்ளது. அது குறித்தான விளக்கம்.
ஆசிரியர் அவர்கள்,
தி இந்து
சென்னை.
முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்து தமிழகம் அறிந்துகொள்ளும் வகையில் தங்களின் ‘தி இந்து’ தொடரில் வெளிக்கொண்டு வருகிறீர்கள். இன்றைய (09-07-2015) தொடரில் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன வார்த்தைகள் “வந்தோம் பேசினோம் உபசரிக்கப்பட்டோம் கையை நனைத்தோம் ஏமாற்றத்துடன் திரும்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.
1979ல் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகவும், கேரளாவில் சி.எச்.முகம்மது கோயா முதல்வராகவும் இருந்தார்கள். அப்பொழுது தமிழக நீர்பாசானத் துறை அமைச்சர் இராஜா முகம்மது.
29-11-1979 அன்று இவர்கள் திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசியபோது, கீழ்குறிப்பிட்ட சில தமிழக உரிமைகளை கேரளாவுக்கு விட்டுக்கொடுத்ததினால் ஏற்கனவே பிரச்சனையில் இருந்த முல்லைப் பெரியாறு கேரள அரசுக்கு சாதகமாகி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களைச் சொல்லி மேலும் பிரச்சனைகளை பூதாகரமாக்கியது என்பதுதான் உண்மை. அன்றைக்கு தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் நம்பியார் ஒன்றுபட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் சிரியாக் ஆகியோர் உடனிருந்தனர்.
அதைக் குறித்து எனது , “கலைஞரும் முல்லைப் பெரியாறும்” நூலில் உள்ள குறிப்பினை இணைப்பில் பார்க்கவும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-07-2015
#Mullaiperiyar
#KsRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment