Thursday, July 9, 2015

நீதிபதிகளின் ஊதியங்கள் - Why Judges deserve a salary hike.

நீதிபதிகளின் ஊதியங்கள்  - Why Judges deserve a salary hike.
________________________________________________________

நீதிபதிகளை விட வழக்கறிஞர்கள் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றனர். நீதிபதிகளுக்கு போதுமான அளவில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடே நீதித்துறையில் நீண்ட கால விவாதப் பொருளாக இருக்கின்றது. இதனாலே நீதித்துறையின் மீது சந்தேகங்களும், லஞ்சப் புகார்களும் எழுந்துள்ளன.

கீழ்கண்ட பட்டியலைப் பார்த்தாலே நீதிபதிகளுடைய ஊதிய விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். பன்னாட்டு நிறுவனங்களிலும், ஐ.டி துறையிலும் பணியாற்றுகின்றவர்களே மாதத்தில் சில லட்சங்கள் ஊதியமாக வாங்கும் நேரத்தில் நீதிபதிகள் ஒரு லட்சத்திற்கும் குறைவான ஊதியத்தையே இன்றும் வாங்கிக்கொண்டிருப்பது சற்றும் நியாயமாகப் படவில்லை.

ஆண்டு
இந்திய தலைமை நீதிபதி
உச்சநீதிமன்ற நீதிபதிகள்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
1950
5,000
4,000
4,000
3,500
1986
10,000
9,000
9,000
8,500
1998
33,000
30,000
30,000
26,000
2006
100,000
90,000
90,000
80,000


( இறுதியாக 2009ம் ஆண்டு இவர்களுடைய ஊதியம் உயர்த்தப்பட்டது)  


பல நீதிபதிகள் லஞ்ச லாவண்யப் பிரச்சனைகளில் விசாரணைக்குச் சிக்குண்டார்கள். கடந்தகாலத்தில்  பஞ்சாப், பீகார், சென்னை, கர்நாடகா, மும்பை போன்ற உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 30 ஆண்டுகளாக இம்மாதிரி புகார்களுக்கு எவ்வித முடிவுகளுமில்லாமல் அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன.

ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி கூட்டல் கணக்கு வழக்கில் செய்த தவறுகள் கண்கூடாக  தெரியவந்தது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருப்பதைப் போன்று நீதிபதிகள் நேர்மை என்ற நெருப்பாற்றில் நடைபோடுபவர்களாக இருக்கவேண்டும்.

Compared with Lawyers, whether in individual practices or in law firms, judges are grossly underpaid.


- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-07-2015.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...