மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் காக்க தாமதிக்கும் தமிழக அரசு - Western Ghats.
____________________________________________
நேற்றைக்கு(30-07-2015) மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றி எழுதிய பதிவில் சொல்லியவாறு, தமிழ்நாடு அரசு தன்னுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
மேற்குத் தொடர்ச்சிமலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசின் கருத்தை பலமுறை கேட்டு, இன்றோடு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தது.
நீதிமன்றத்தில் வாய்தா பெறுவது போல நினைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசாங்கம் மாதவ காட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகள் மீது தன் ஆய்வு அறிக்கையை அனுப்ப இன்னும் அவகாசம் கேட்டு தாமதிக்கின்றது? சுற்றுச்சூழல் பிரச்சனையில் விரைந்து செயல்பட அரசுக்குத் தயக்கம் ஏன்? இதனுடைய அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணராமல் ஒரு மாநில அரசு இருப்பது கண்டனத்துக்கு உரியதல்லவா?
மேற்குத் தொடர்ச்சிமலை உள்ளடங்கிய குஜராத், கோவா, மகாராஷ்ட்டிரம், கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய ஆறு மாநிலங்களில் தமிழகத்தை தவிர்த்து மற்ற ஐந்து மாநிலங்களும் எப்போதோ தங்களுடைய அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது.
ஆனால் தமிழக அரசு தன்னுடைய அறிக்கையை இதுவரை அனுப்பாமல் சவலைக் குழந்தையைப் போல கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பது நியாயம் தானா?
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.
No comments:
Post a Comment