Friday, July 31, 2015

பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு- Pamba Achankovil Vaippar link.



கடந்த 24-07-2015 அன்று டெல்லியில் உள்ள சரம்சக்தி பவனில் அமைந்துள்ள, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு, “உச்சநீதிமன்றம் கடந்த 2012ல் எனது வழக்கில், நதிநீர் இணைப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் மீது என்ன செயல்பாடுகள் நடந்துள்ளது” என்று அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சென்றிருந்தேன்.

இந்த அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீசசி சேகரைச் சந்திக்கச் சென்றபோது அவருடைய அறையில் அவர் இல்லை. எனவே அவருக்கு அடுத்துள்ள அதிகாரிகளான, துணை மற்றும் இணைச் செயலாளர்களைச் சந்திக்கக்கூடிய சூழல்தான் அப்போது அமைந்தது.

அந்த அதிகாரிகளிடம் உச்சநீதி மன்றத்தின் தீர்பின் மீது அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று கேட்டேன். குழு அமைத்ததுடன், உரிய ஆலோசனைகள் நடத்தி நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்திக்கவும், நினைத்தபோது அவரும் டெல்லியில் இல்லை.

தென் மாவட்டங்களுக்குப் பயன்படும் அச்சன்கோவில்- பம்பை-வைப்பாறு பற்றிக்கேட்டபொழுது, மத்திய அரசு கொள்கை ரீதியிலாக இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
கேரள அரசும் இந்த பிரச்சனையில் முரண்டு பிடிக்கிறார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் அப்போது என்னிடம் தெரிவித்தனர்.


இதைக்குறித்து நான் எடுத்துச் சென்ற குறிப்பை (Notes) அவர்களிடம் வழங்கி, இதைப் பரிசீலனை செய்யுங்கள் என்று  அளித்தேள்.

அந்த குறிப்பில் நான் குறிப்பிட்டது-

பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பால் குறிப்பாக தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் பயன்பெறும்.  குறிப்பாக, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், சிவகிரி, விளாத்திகுளம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புதூர், சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் பாசான  வாய்கால்கள் அமைக்கப்படவேண்டும்,

 இந்திராகாந்தி காலத்தில், ராஜஸ்தான் பாலை நிலத்தில் வெட்டப்பட்ட, ஆண்டுதோறும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கால்வாய்கள் போன்று இப்பகுதியில் வெட்டப்படும் கால்வாய்கள் அச்சன் கோயில் -பம்பை- வைப்பாறு திட்டத்தால் நடைமுறைக்கு வரும்.

வறட்சியில் வாடும் கரிசல் மண்ணில் இப்போது கண்ணில்படும் கருவேல மரங்களும், வேலி மரங்களும் போன்ற வறட்சிக் காட்சிகள் கண்ணை பார்வையை விட்டு அகலும். இந்த இணைப்பின் மூலம் கேரளாவிலிருந்து 22டி.எம்,சிக்கு அதிகமான அளவில் இருக்கும் உபரி நீரைத் தமிழகத்திற்குத் திருப்பலாம்.

அப்படித் திருப்பும் பொழுது, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் வசதிக்கும் திட்டங்களைத் தீட்டலாம்.
தமிழ்நாட்டின் 40சதவிகித பூமி இதனால் பயன்பெறும். இந்த திட்டத்தை இந்திரா காந்தி காலத்திலிருந்து மத்திய அரசு வலியுறுத்தியும் கேரளா மௌனம் சாதிக்கிறது.

1995ல் இத்திட்டத்தை வரையறுத்தும், எந்த நடவடிக்கைகளும் இப்போதுவரை இதுகுறித்து இல்லை. தமிழ்நாடு, கேரள பொதுப்பணித்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி. தேனீர் சாப்பிட்டுக்  கூடிக்கலைந்தது தான் இதுவரை நடந்துள்ளது.

இதைக்குறித்து மத்திய அரசு கூட்டிய  ஐந்து கூட்டத்திலும், இத்திட்டம் பற்றி விவாதிக்கப் பட்டுள்ளது. ஆனால் கேரளா இதற்கு எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை, எங்களிடமே தண்ணீர் இல்லை என்றும், கேரளாவின் மீன்வளம் பாதிக்கப்படும் என்று ஒப்புக்குக் காரணங்கள் சொல்லி அரபிக்கடலுக்கு வீணாகத் தண்ணீரை அனுப்புகிறது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 500மெ.வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் அதிக அளவு கேரளாதான் பயனடையும். அதுமட்டுமில்லாமல்,  தென்மாவட்டங்களில் இருந்துதான் கேரளாவிற்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் அனுப்பப் பட்டுவருகின்றன.  இவையெல்லாம் அந்தக் குறிப்பில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தேன்.


இப்படியெல்லாம் காரணங்கள் இருந்தும் கேரளா இத்திட்டத்தை மறுப்பது நியாயம் தானா?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015















3 comments:

  1. How come, this has not been placed in any manifestos of political parties still? Worth detailing and at least divert water during monsoon seasons.

    ReplyDelete
    Replies
    1. Pamba and Achankovil rivers are pure intra state rivers in kerala.What the regional parties in Tamil Nadu can do by putting this in their manifesto?Without Kerala's consent even central Government cant interfere in this issue.

      Delete
  2. How Funny are you statements?Rivers are mean to be discharge at sea.if they are not discharged at sea'then where they it will discharge?At saint george fort??
    Kerala is not in any urgent need of 50 W Electricity and Goods.All what here is to save interests of tamil nadu.
    More over the Severe Ecological balance and water drought which can caused by this Project.
    In Tamil nadu every Natural water resources are destroyed and polluted.now the same have to do with the water resources in Kerala.
    No doubt Kerala Government will allow this just for the intrests of Tamil nadu to destroy the Water resources of kerala just like they destroyed theirs.People will never allow this.

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...