தமிழில் பாபநாசம், மலையாளத்தில் த்ரிஷ்யம் படங்களில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் அதற்கான கம்பீரத்தோடு நடித்த நாற்பத்து நான்கு வயது நடிகை ஆஷா சரத்தின் புகழைக் களங்கப் படுத்தும் வகையில் ஆபாசப் படத்தை வலைதளத்தில் சில விசமிகள் பரவச் செய்தது அதிர்ச்சியாக இருந்தது.
தைரியமாக உறுதியுடன் ஆஷா சரத் கொச்சி மாநகர போலீஸ் கமிசனரிடம் புகார் கொடுத்தது பாராட்டக் கூடிய செய்தி ஆகும். திரைத்துறையில் உள்ள பலர் இதுமாதிரியான விஷயங்களில் நமக்கெதற்கு வம்பு என்று நினைத்து ஒதுங்குபவர்கள் மத்தியில் ஆஷா சரத் ஒரு தைரியமான பெண் ஆளுமைதான். அவருக்கு ஒரு சபாஷும் சல்யூட்டும்.
“இந்த சம்பவம் தொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறியதாவது: சமீபத்தில் சமூக வலைதளங்களில் தரக்குறைவான படங்கள் மற்றும் பதிவுகளை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இதுதொடர்பாக கொச்சி நகர் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளேன். தற்போது இந்த வழக்கு விசாரணை மாநில சைபர் போலீஸ் செல் மூலம் நடத்தபட்டு வருகிறது.
விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு தகுந்த தண்டனை பெறுவார்கள் என நான் நம்புகிறேன். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக போராடும் பொழுது பெண்கள் அனைவரும் கைசேர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.”
" I have filed a petition with the City Police Commissioner of Kochi. I am so grateful to the authorities that immediate action has been initiated on my petition. As has been reported, the case is now being investigated into by the state cyber police cell. I am given to understand that proceedings are already on and that the culprits shall be brought to law at the earliest. I believe that such criminal offences against women shall not go unpunished and I therefore am committed to fight this case till it is legally remedied. We all should join hands to ensure that women are respected and not humiliated. I thank u all, each one of u and especially the media, once again for taking up this issue as a priority. Asha sharath "
பாபநாசம் திரைப்படத்தில் குற்றவாளியை கைது செய்யாமல் கோட்டை விட்டதைப் போல கொச்சி காவல் துறை ஆஷா சரத்தின் புகாரிலும் குற்றவாளிகளைப் பிடிக்காமல் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பது தான் நம்முடைய கருத்து.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2015.
##KsRadhakrishnan #KSR_Posts #AshaSharath
No comments:
Post a Comment