Thursday, July 14, 2016

கச்சத்தீவு

கச்சத்தீவு  நமதே
---------------------------
இந்தியப் பெருமுதலாளிகள் தங்கள் 400 கம்பெனிகளை
இலங்கைக்குள் மேயவிட்டிருக்கிறார்கள்.இதனால் இந்தியா இலங்கை அரசை தாஜா செய்து கொண்டிருக்கி
றது. இதில் இந்தியா-சீனா போட்டி வேறு.#கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்னையில் இந்திய அரசு துருப்பிடித்
துக்கிடக்கிறது.
          சில ஆண்டுகளுக்குமுன்பு எகிப்து 2 தீவுகளை
சவூதிஅரேபியாவுக்கு வழங்கியது.அதை எதிர்த்து எகிப்தின் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் வழக்குத் தொடுக்கப்பட்டது. விசாரணைக்கப்பின்பு உச்சநீதிமன்றம்
அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. அந்த
இருதீவுகளும் இன்றுவரை எகிப்துக்கே என்பது தொடர்கிறது.
          தோழர் ஜோதிபாசு முதல்வராக இருந்தபோது
நமக்கும் பங்பகளாதேசுக்கும் கங்கைநீர் பங்கீடுபற்றி
தாவா இருந்தது.அதை ஜோதி மத்திய அரசுஉதவியுடன்
பங்களாதேசுடன் பேசி சமரசமாய் ஒப்பந்தம் செய்து முடித்தார். அந்த ஒப்பந்தத்தின் போது பங்ளாதேசிடம்
இருந்த ஒருநமது தீவு நமக்குக் கிடைத்தது.
           நமது உச்சநீதிமன்றம் நாளையே-- நாடாளுமன்றத்தைக்கலக்காமல் இந்திராகாந்தி செய்த ஒப்பந்தம் செல்
லாது என்று தீர்ப்பளித்தால் கச்சத்தீவு மீண்டும் நமதாகி
விடும்.
இதற்கு பெருமுதலாளிகளும் மோடியும் முயற்சிப்பார்களா ?-

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்