கடந்த 7.7.2016 அன்று முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை சோதிக்க மத்திய அணைப் பாதுகாப்பு முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை தலைமையில் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் தலைவர் நாதன் ஓய்வு பெற்றதால், பி.ஆர்.கே. பிள்ளை அந்த குழுவின் தலைவராக பொறுப்புக்கு வந்தார். எட்டு மாதங்களுக்குப் பின் தென்மேற்கு பருவ மழையால் நீர் வரத்து அணைக்கு அதிகமாக வருவதால் திரும்பவும் அணையின் பலத்தை ஆய்வு செய்ய இந்தக் குழு வந்திருந்தது. கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழக அதிகாரிகள், தமிழகப் பொதுப்பணித் துறையின் படகில் சென்று ஆய்வு நடத்தினர். "அனைத்துவிதமான ஆய்வுகள் மற்றும் சோதனைக்குப் பின் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இதனால் கேரளாவுக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாது. அணையை ஒட்டியுள்ள 13 சட்டங்களும் சரியாக பராமரிக்கப்படுகின்றன. இது குறித்து மாதம் ஒரு முறை ஆய்வும் நடத்தப்படுகிறது" என்று ஆய்வுக்குப் பின் உறுதிபட திரு. பிள்ளை அவர்கள் குறிப்பிட்டது தமிழகத்துக்கு ஆறுதலான செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)
*ஆந்திராவில் #கோவிட்அலெர்ட்*
*ஆந்திராவில் #கோவிட்அலெர்ட் * கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆந்திர அரசு சுகாதாரத் துறைக்கு எச்ச...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment