Thursday, June 14, 2018

நீதிமன்றத்தின் மாண்பு சட்டமன்றத்தில் காப்பாற்றப்பட்ட வரலாறு.

இது நடந்தது1980 களில் ......

நீதிமன்றத்தின் மாண்பு சட்டமன்றத்தில் காப்பாற்றப்பட்ட வரலாறு.
————————————————-
தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றிருந்த 1984 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்வாடி ஒருவரின் கிரிமினல் வழக்கு விசாரனைக்கு வந்தது.  அது ஒரு அசாதாரணமான வழக்கு தான் என்றாலும் அன்று  நடந்தவைகள் அனைத்துமே வினோதமானது, விசித்திரமானது. வழக்கத்திற்கு மாறாக  ஞாயிற்றுக் கிழமை உயர்நீதி மன்ற தனது சேம்பருக்கு வந்து விசாரித்து தீர்ப்பெழுதினார் நீதிபதி டி.என்.சிங்காரவேலு. அவர் எழுதிய அந்த தீர்ப்பை மறுநாளான திங்கட்கிழமை எழுதி இருந்தால் அது சதாரணமான நிகழ்வாக அமைந்திருக்கும். என்போன்ற அப்போதைய இளநிலை வழக்கறிஞர்களுக்கு பாடமாக அமைந்திருக்காது.  

அந்த தீர்ப்பு பல சந்தேகங்களுக்கு இடமளித்தது.  அவசரகதியில் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமில்லாத , நியாயமற்ற தீர்ப்பு தான் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அப்படியான
அவசர வழக்கும் அது இல்லை.

அவ்வாறு வழங்கப்பட்ட நியாயமற்ற  தீர்ப்பை ,  என்னுடைய சீனியர் வழக்கறிஞர் ஆர்.காந்தி அவர்கள் அந்த தீர்ப்பின் மீதான சந்தேகங்களை குறிப்பிட்டும் , சென்னை உயர்நீதி மன்ற  வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் என்ற நிலையில், சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு  கடிதமாக  என்னிடம் கொடுத்து சபாநாயகரிடம் கொடுக்க சொன்னார். நான் தான் கொண்டுபோய் சட்டமன்ற வளாகத்தில் யுள்ள வசந்த மண்டபத்தில் போய் கொடுத்தேன். 
பி.எச்.பாண்டியன் உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி வி. இராமசாமியின்
ஜீனியர். பாண்டியன் அவர்கள் பேரவை
தலைவர் என்ற சூழலில் உயர் நீதிமன்ற 
வந்து வாதாட முடியாது. நான் அவருக்கு
நெருக்கமான நட்பு நிலையில் அவரின் சில வழக்குகளை கவனித்து கொண்டேன்.

அப்போது துணை சபாநாயகராக வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் இருந்தார்.  அவருடைய அறைக்கு எதிர்ப்புறம் உள்ள  அறைதான் எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் அவர்களின் அறை.  கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தேன். அடுத்தநாள் சட்டமன்றம் கூடிய போது வானளாவிய அதிகாரம் படைத்த (sky is my limit)சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அந்த உயர்நீதி மன்ற  தீர்ப்பை சட்டப் பேரவையில் ரத்து செய்து உத்தரவிட்டார்.  இது மாபெரும் அதிர்ச்சியை அரசியல் வட்டாரத்திலும் நீதித்த்துறை வட்டாரத்திலும் அச்சமயத்தில் ஏற்படுத்தியது எனலாம். மறுநாள் நானே சட்டமன்ற வாளகம்  சபாநாயகர் அலுவலகம் சென்று ரத்து செய்யப்பட்ட கடிதத்தையும் பெற்றுக் கொண்டு வந்தேன். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் எனைப்பார்த்தார். நீதான் நேற்று கடிதத்தை கொண்டு வந்ததா என்றார். ஆம் என பதிலளித்தது இன்றும் நினைவில் உள்ளது. அன்றைய சட்டமன்ற பணிகள் நிறைவுற்றது. 

மறுநாள்,சட்டமன்றம் கூடிய போது தலைவர் கலைஞர் அவர்கள்  நாவலர், பேராசிரியர்  ஆகியோருடன் ," நீதிமன்ற தீர்ப்பை சட்டமன்றத்தில் இப்படியா ரத்து செய்வது,  அவரவர்களில் துறையில் அவரவர்கள்அதிகாரவரம்புக்குள்( separation of power)  இயங்க வேண்டாமா? நீதிமன்றத்திற்கு என ஒரு மாண்பு இருக்கின்றதே என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நாவலரும் பேராசிரியரும் அமர்ந்து பேசினார்கள். பிறகு  நாவலர் எம்.ஜி.ஆருடன் பேசினார். அன்றைய தினம்  சபாநாயகரின் ரத்து உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.  நீதிமன்றத்தின் மாண்பையும், நீதிபதியின் மாண்பையும் அன்று  காப்பாறியது திமுக.  அந்த நிகழ்வுகள் அனைத்தையும் உடனிருந்து  கவனித்து வந்தவன் நான் என்கிற முறையில் இன்றைய தினத்தில் நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பதிவிடுகின்றேன். 

இன்றைய நீதிமன்ற தீர்ப்புக் குறித்து பேசப்படுவதால் அவற்றை எல்லாம் சொல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.  நீதிமன்றத்தின் தீர்ப்பை அன்று சட்டமன்றம் காப்பாற்றியது. இன்று சட்டமன்ற மாண்பை நீதிமன்றம் காப்பாற்றியதா?  என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.
உயர் நீதி மன்ற நீதிபதிகள் கே. ரவி சந்திர பாபு, டி.எஸ்.சிவஞானம்,ஜம்மு-காஷ்மீர் உயர் நீதி மன்ற ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி 
பால் வசந்த குமார், ஒய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி,
எம். ஜெய்சந்திரன் ஆகியோருக்கு இதை
பற்றி நன்கு அறிவார்கள். ஏனெனில் இவர்கயொல்லாம் அப்போது என்னுடைய சக வழக்கறிஞர்கள்.

இதுபோன்ற அனுபவங்கள் இந்த சமுதாயத்திற்கு பயன்பட்டு இருக்க வேண்டும் என்ன செய்வது அன்றைய தினம் எனக்கு தட்டச்சு உதவியாளர் நாடளுமன்ற  உறுப்பினர்கள்.  அனுபவத்தை செயல்படுத்த வேண்டிய நான்  உங்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றேன். ஏனெனில் தகுதியே தடை

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
#வானளாவிய_அதிகாரம்_பி_எச்_பாண்டியன் #தகுதியேதடை

#நீதிமன்றமாண்பு #Seperationofpower 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
14-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...