தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகளும், வேறு நிறுவனங்களும் ஆந்திரத்தை நோக்கி தினமும் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய வட்டாரங்களில் 12 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க காலந்தாழ்த்துவதாலும், ஏற்கனவே ஒப்புதல் பெற்ற தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதில் காலம் தாழ்த்துவதாலும், போராட்டங்களாலும் இந்த பெரும், குறு தொழிற்சாலைகள் ஆந்திராவில் எளிதாக அரசு அனுமதிகள் கிடைப்பதால் அங்கு தங்களுடைய ஆலைகளை அமைத்து வருகின்றனர். குறைந்த விலையில் நிலமும் கிடைக்கின்றதே என்று தொழில் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே நோக்கியா ஆந்திர மாநிலம் தடாவிற்கு சென்றுவிட்டது. இப்படி தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக அடுத்த மாநிலங்களுக்கு சென்றால் தமிழகத்தில் தொழில் முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ?
#தமிழக தொழிற்சாலைகள்
#Indutries_of_Tamil_Nadu
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2018
No comments:
Post a Comment