Wednesday, June 27, 2018

கருத்துலகம்

எல்லோரும் கருத்துக்களைப் பகிர உரிமைகள் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. கடந்த காலத்தில் 1983 காலக்கட்டத்தில்  மனித உரிமை ஆர்வலரும், ஓய்வு பெற்ற நீதிபதியான தார்குன்டே சென்னையில் தாக்கப்பட்ட போது  அது குறித்தான கண்டன அறிக்கையில் கையெழுத்திட மறுத்தவர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அதே காலக்கட்டத்தில் சேலம் கிச்சிப்பாளையத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு பெண்மணி காவல் மரணம் அடைந்தார். இந்த காவல் மரணங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி நபர் சட்ட மசோதாவாக தாக்கல் செய்ய பழ. நெடுமாறனுக்கு நான் தயார் செய்து கொடுத்தேன். அப்போதெல்லாம் இவர்களிடம் கேட்டும் கருத்து சொல்லவில்லை. தங்கள் தொழிலுண்டு, பாடுண்டு அப்போது இருந்தார்கள். இப்போது ஓய்வு பெற்ற பின் கருத்து கந்தசாமியாக மாறுவது விநோதமாக இருந்தது. அவர்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்.காலத்திற்கேற்ப நிலைப்பாடுகள். எல்லா தளங்களிலும் இது தான் பொருந்துகின்றது.
இதயசுத்தியோடு தொடர்ந்து கருத்துகளைச் சொல்லுபவர்கள் மறுக்கப்பட்டு இவர்களை கொண்டாடப்படுகிறார்கள். வாழ்க நமது கருத்துலகம். 
#கருத்துலகம்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...