Tuesday, June 12, 2018

தென்னாப்பிரிக்காவில் ரேசனில் தண்ணீர் விநியோகம்.

தென்னாப்பிரிக்காவில் ரேசனில் தண்ணீர் விநியோகம்.
------------------------------

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு விளையாடச் சென்றபோது, அவர்களை இரண்டு நிமிடங்களுக்கு மேல் தங்குமிடத்தில் குளிக்கக் கூடாது என்று நிர்பந்தப்படுத்தப்பட்டனர்.

கேப் டவுன் உலகின் முக்கிய நகரங்களில் ஒன்று. ஒரு காலத்தில் நாற்பது லட்சம் மக்கள் வாழ்கின்ற பசுமையான நகரமாக விளங்கியது. அந்த நகரில் இன்றைக்கு கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. இந்த பிரச்சனை பூதாகரமாக எழுமென்று 2006 காலக்கட்டங்களில் மக்களிடம் ஏற்படுத்தியும், அங்குள்ள மக்கள் இந்த எச்சரிக்கையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. எனவே இந்த வேதனையான நிலை அங்கு ஏற்பட்டுவிட்டது.

தற்போது, அங்கு மிகவும் குறைந்தளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு வந்துவிட்டது. அதற்கு மேல் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கின்றனர். இப்போது விடியற்காலையில் ரேசன் கடையில் கேன்களை வைத்துக்கொண்டு அத்தியாவசியப் பொருள்களைப் போல தண்ணீரை வாங்க வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை இந்தியாவிற்கு வந்துவிடக்கூடாது என்பது தான் நம்முடைய ஆதங்கம்.

தமிழகத்தினைப் பொறுத்தவரையில் நீரில்லாமல் எதிர்காலத்தில் கடுமையாக தவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று ஐ.நா. ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் சில கடமைகள் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-06-2018




No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...