சிலரது இருப்பு உணர்த்தாததை இறப்பு உணர்த்திவிடுகிறது.
கொண்டாட நினைக்கையில் அருகிலோ தொலைவிலோ அவர்கள் இருப்பதில்லை. அருகிருந்தும் தூரமாய் பேசமுடிந்தும் பேசாமல் மௌனமாய் அவர்களைக் கடந்திருப்போம். நாளைக் காலை விடியலில் நாமிருப்போமா என்பதே நமக்குத் தெரியாத நிலையில்.கோபமும் பொறாமையும், கபடமும், நன்றி அற்ற குணம் கொண்டு ஒன்றும் சாதிக்க போவதில்லை. ஓடி ஓடி எல்லாம் சேர்த்து நின்று மூச்சு விடும் வேளையில் அருகிருக்க யாருமில்லா வாழ்வு எதற்கு?
மரணம் தவிர்க்க முடியாது.ஆனலும் மனிடம் நியாயங்களை நினைக்க மறுக்கிறது ....
இந்த சூழலில்; வலியில் பெரும் வலி நம் உழைப்பு உதாசீனப்படுத்தும் போது உணர்வது தான். தீவிரமான போராட்டக் களத்திலும், பிரச்சினைகள் முற்றிய போதும் தன்னுடன் தோள் கொடுத்து மனம் ஒன்றி நின்றவர்களைக் காலப் போக்கில் புறந்தள்ளிப் புறக்கணித்து, எதிர்பார்த்து இயங்கும் தகுதியற்ற பச்சோந்தி இயல்பு கொண்டவர்களை அரவணைத்து அங்கீகரிக்கிற பொதுப்புத்தி இங்கு இயல்பாக இருக்கும்வரை தகுதியானவர்களுக்கு உரிய வெளிச்சமோ, பொறுப்புகளோ கிடைப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. இது ஆரோக்கிய பொது வாழ்வுக்கும் நல்லது அல்ல.
#தகுதியேதடை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
04-06-2018
No comments:
Post a Comment