Thursday, June 21, 2018

அரசியல் #பொது_வாழ்வு

இன்றைக்கு அரசியலில் சந்திப்புகளும், ஊடகங்களில் முகத்தைக் காட்டி பேட்டிகளும், பத்திரிக்கைச் செய்திகள் தான் அடிப்படைப் பணிகளாக உள்ளன. தனிநபர் புகழுக்காகவும், சுயஇருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் தனக்கு சம்மந்தமில்லாதவர்களைத்  சிலரைத் திரட்டி போராட்டங்கள் நடத்துவதும் வேடிக்கையாக இருக்கின்றது. ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதையே ஒரு பெரிய வரலாற்று செய்தியாக்குவதும், பயனற்ற செயல்களை பயனுள்ள செய்திகளாகக் காட்டுவதும் நாட்டுக்கு தேவை தானா? தமிழகத்திலிருந்து எண்ணற்ற தனிநபர்களுக்காக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்று நீண்ட பட்டியலே தேர்தல் ஆணையத்தில் உண்டு. இதனால் நாட்டுக்கு என்ன பயன். அடியேன் எல்லாம் 1980, 1994இல் அரசியல் கட்சியைப் பதிவு செய்யும்போது இப்படியெல்லாம் நாங்கள் பந்தா காட்டிக் கொள்ளவில்லை. அரசியல் என்பது மண் சார்ந்த மக்கள் நல அரசியல், தனி நபர் புகழுக்கோ, இருப்பைக்காட்ட அரசியல் களம் இல்லை.

#அரசியல்
#பொது_வாழ்வு 
#தேர்தல்_ஆணையம்
#Public_Life
#Politics
#Election_Commission
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...