Tk Kalapriaகவிஞர் கலாப்ரியாவின் "*வேனல்*" நாவல் படித்து முடித்தேன். திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளைப் பற்றியான நினைவுகள் பின்னோக்கி சென்றன. நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவில் அருகேயுள்ள கீழ ரத வீதீ, அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்ற புகைப்படம் கிடைத்தது. வாகையடி முக்கிலிருந்து எடுத்த படம் என்று நினைக்கின்றேன்.
நெல்லையப்பர் நெடுஞ்சாலை சென்ட்ரல் தியேட்டர், ராயல் டாக்கீஸ், பார்வதி, ரத்னா, லட்சுமி, பேலஸ் டி வேலஸ், பாளை அசோக் போன்ற தியேட்டர்களும் சந்திரவிலாஸ் ஹோட்டலும், எஸ்.ஆர். சுப்பிரமணியம் பிள்ளை, ஆறுமுகப்பிள்ளை புத்தகக் கடையும், பாளை மரியா கேண்டின் என அக்காலத்தில் பழக்கத்தில் இருந்த பல இடங்கள் ஒரு நொடியில் மலரும் நினைவுகளாக வந்து சென்றன.
#கலாப்ரியாவின்வேனல்
#திருநெல்வேலி
#பாளையங்கோட்டை
#Tirunelveli
#Palayamkottai
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-06-2018
No comments:
Post a Comment