Thursday, June 14, 2018

தமிழக சுற்றுச் சூழலைக் குறித்தான தமிழகத்தின் வரைபடம்

இன்றைக்கு (14-6-2018)ஆனந்த விகடனில் 

 ்தை வெளியிட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்கும் பல பிரச்சனைகள் அந்த வரைபடத்தில் இடம்பெறவில்லை. 

1. மீத்தேன், ஹட்ரோகார்பன் திட்டம் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வரை திட்டமிடப்பட்டுள்ளது. 
2. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் கோவை மாவட்டம் பாலக்காடு முடிய உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வளங்களை அழித்தல், வனவிலங்களுக்கு துன்புறுத்தல்
3. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை.
4. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவு.
5. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் மணல் கொள்ளை.
6. நாமக்கல் மாவட்டம் சித்தாம்பூண்டியில் பிளாட்டினம் உருக்கி எடுத்தல்.
7. திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்
8. பாலக்காடு, செங்கோட்டை போன்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் நச்சுக் கழிவுகளை குப்பை, குப்பையாக்கொட்டுவது,
9. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் கெயில் குழாய் பதிப்புகள். இதே போல திருவள்ளூரில் இருந்து மதுரை வரையும், கடலூரில் இருந்து சேலம் வரையும் திட்டமிடப்பட்டுள்ளது.
10. தமிழகத்தின் நீராதாரங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகள்.
11. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் சுற்றுச் சூழல் பாதிப்புகள்.
என ..........

இது போன்ற பல பிரச்சனைகள் அந்த வரைப்படத்தில் இடம்பெறவில்லை.

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
14-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...