சில பிரச்சனைகளில் தற்கொலையும், தீக்குளிப்பதும் தீர்வல்ல. அந்த கொடிய நிகழ்வு அனைவரையும் வேதனைப்படுத்தும். இதுவரை இந்த ரணப்படுத்தும் சம்பவங்கள் நடந்ததெல்லாம் சிலநாள் பேசப்படுகிறது, மறக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக உயிரைத் தியாகம் செய்கிறார்களோ? அந்த காரணமே மழுங்கடிக்கப்பட்டு மறக்கவும்படுகிறது. இதனால் என்ன பயன்?
துக்க செய்திகளை தான் கேட்க முடிகிறது. இந்த உயிரை மறுதலித்தல் போன்ற எண்ணங்கள் தலைதூக்கவே கூடாது. பிறந்தோம், வளர்ந்தோம். என்ன பிரச்சனைகள் வந்தாலும் மனதிடத்தோடு சந்திக்கவேண்டும். இந்த உயிரிழப்பை ஒருகாலும் யாரும் அனுமதிக்க கூடாது. மற்றவர்களுக்கு அது இயல்பாகவே விளம்பரமாக்கப்படுகிறது. இறந்தவருக்கோ, இறந்தவரை சார்ந்தவருக்கோ அந்த இழப்பை யாராலும் சரிசெய்துவிட முடியாது. உயிர்கள் பிறந்து வாழத்தான். மடிய அல்ல. இயற்கை கொடுக்கின்ற காலங்களில் அவரவருக்கான பொறுப்புக்களை, கடமைகளையும் செய்வோம்.
••••
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
நாளைப் பொழுதும் என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுதும் என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
இது தான் யதார்த்தம்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்_
07-06-2018
No comments:
Post a Comment