Monday, June 18, 2018

மாசிடோனியா - கிரீஸ் பிரச்சனை

மாசிடோனியா - கிரீஸ் பிரச்சனை 
———————————————
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாசிடோனியா கிரீசின் அண்டை நாடாகும். ஐரோப்பிய நாடான, யுகோஸ்லாவியா, 1991ல், சிதறுண்டபோது, மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. இருப்பினும், மாசிடோனியா என்ற பெயரை பயன்படுத்த, அண்டை நாடான, கிரீஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிரீஸ் நாட்டின் வடபகுதியும் மாசிடோனியா என அழைக்கப்படுவதால் அப்பகுதியை புதிய நாடான மாசிடோனியா உரிமை கோரலாம் என்ற அச்சமே அதற்கு காரணம். இதனால், ஐரோப்பிய யூனியன் மற்றும் 'நேட்டோ' அமைப்பில் மாசிடோனியா சேர்வதை சிறப்பு அதிகாரம் வழியாக கிரீஸ் தடுத்து வந்தது. எனவே மாசிடோனியா அரசு, தங்கள் நாட்டின் பெயரை 'வடக்கு மாசிடோனியா குடியரசு' என மாற்றம் செய்ய கிரீஸ் சம்மதித்தது. இதற்கான முதற்கட்ட ஒப்பந்தம், மாசிடோனியா - கிரீஸ் இடையே நேற்று கையெழுத்தானது. இதன்மூலம், கிரீஸ் - மாசிடோனியா இடையிலான, 27 ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

#மாசிடோனியா
#macedonia#கிரீஸ்





#greece
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18/06/2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...