Sunday, June 17, 2018

இந்து மகா சமுத்திர விவகாரம்

இந்து மகா சமுத்திர விவகாரத்தில் இந்தியாவிற்கு இன்னுமொரு சறுக்கல். இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு மரபு ரீதியாக உட்பட்டது என்று உலக சமுதாயம் கருதியது, 1970களில் டீகோகர்சியா தீவிற்குள் அமெரிக்க இராணுவ தளம் அமைத்ததை அன்றைய பிரதமர் இந்தியா காந்தியும், சோவியத் ரஷ்யாவும் கண்டித்து அந்த தளம் அப்போதே அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது ஒரு சர்வதேச பிரச்சனையாக அது கருதப்பட்டது. இலங்கையை வைத்துக் கொண்டு சீனாவும், அமெரிக்காவும் இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் உதவியினால் இராணுவ ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் இந்தியாவை மீறி கடந்த இருபது ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் கடற்படைக் கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் கொழும்புத் துறைமுகம் வரை வந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை. செசல்ஸ் தீவில் பிரிட்டிஷ் மூலமாக குத்தகை பெற்ற அமெரிக்காவும் மீண்டும் இராணுவத் தளத்தை அமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டது. பிரான்ஸும் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவைப் பிடித்து இராணுவத் தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி செசல்ஸ் நாட்டிற்கு பயணம் செய்த போது செசல்ஸ் நாட்டு கடற்படையோடு இணைந்து இந்தியா பணியாற்றும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை இப்போது செசல்ஸ் நாடு திரும்பப் பெற்றுவிட்டது. குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அந்த நாட்டிற்கு வரும் இந்த ஜுன் மாதம் பயணிக்கும் போது பிரதமர் மோடி கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் ரத்தாகும். இதற்குள் செசல்ஸ் நாட்டிற்கு எதற்கு இந்த மனமாற்றம். சீனா, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளின் அழுத்தத்தால் இந்த ஒப்பந்தம் திரும்பப் பெறுவதாக செய்திகள் வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பிற்கு இது ஆபத்தான நிலை. இப்படியான நிலையில் இந்தியாவின் ஆதிபத்தியம் கையைவிட்டு சென்றுவிடுமோ என்ற அச்சம் கடந்த 25 ஆண்டுகளாக நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன. இந்தியாவின் இறையாண்மையை இந்து மகா சமுத்திரத்தில் பாதுகாக்க வேண்டியது அவரமும், அவசியமும் ஆகும்.

இது குறித்தான மீள்பதிவு வருமாறு.
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2018/03/blog-post_9.html

#சீசெல்சு
#seychelles
#Indian_ocean
#இந்தியப்_பெருங்கடல்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-06-2018






No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...