புதியதலைமுறையின் நெறியாளார், நன்பர் திரு கார்த்திக் அவர்கள் நடத்தும் வட்டமேசை நிகழ்வில் பா.ஜ. கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தொடர்ச்சியாக பிரச்சனை செய்துவருகிறார்கள்.
மதுரையில்11-5-2018ல் நடந்த நான் கலந்து கொண்ட வட்டமேசை விவாதத்தில் பார்த்தேன். அங்கு நான்
பேசும் போது,அசிங்கமாக கூச்சல்
போட்ட போது நான் வாயை மூடி வெளியே போ என கடுமையாக எச்சரித்தேன்.
இதைத்தொடர்ந்து கோவையில் நடைபெற்ற வட்டமேசையில் விருந்தினர் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள், தங்களை விமர்சித்து கருத்து தெரிவித்தவுடன் பா.ஜ. கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்துள்ளார்கள்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வழக்குகள் பதிவு செய்வதாக இருந்தால் இந்தியாவில் பல தொலைக்காட்சிகள் மீதும் நாளொன்றுக்கு பல நூறு வழக்குகள் பதிவு செய்ய வேண்டி இருக்கும்.
அரங்கில் நுழைந்து தகராறு செய்தவர்களை விட்டுவிட்டு தொலைக்காட்சி செய்தியாளர்கள், நிறுவனம், பங்கேற்ற விருந்தினர் மீதெல்லாம் வழக்குப் பதிவு என்பது நியாயமற்றது....
#தொலைக்காட்சிவிவாதம்
#tvdiscussion
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-06-2018
No comments:
Post a Comment