Thursday, November 29, 2018

தின்னவேலியும் சாகித்ய அகாடமி விருதுகள் .........



——————————-
தின்னவேலியில பொறக்கும் படைப்பாளிகள் மட்டும் சாகித்ய அகாடமி விருதுகளை வழக்கம் போல அள்ளிச் செல்லுகின்றனர்.

ரா.பி.சேதுபிள்ளையில் தொடங்கி ஆ.சீனிவாசராகவன், பி. ஸ்ரீ ஆச்சார்யா, தொ. மு. சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், தோப்பில் முகம்மதுமீரான், பூமணி, சு. சமுத்திரம், ஜோ டி குருஸ், மேலாண்மை பொண்னுசாமி,ருத்ர துளசிதாஸ், வண்ணதாசன் என நீண்டபட்டியல் ;
இவ்வளவு சாகித்ய விருதினைப் பெற்றது எந்த மாவட்டத்துக்காவது, எந்த மாநிலத்துக்காவது சிறப்புகள் உண்டா? ரா.பி.சேதுபிள்ளை, வல்லிக்கண்ணன்
ஆகிய இருவர் ராஜ வல்லி புரம் ; கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் இடைச்செவல் என இரண்டு கிராமத்தில் 
இருவர் இந்த விருதை பெற்ற பெறுமை
எங்கும் கிடையாது.

தின்னவேலி அதனை சுற்றியுள்ள கரிசகாட்டு எழுத்தாளர்களும் குடிக்கின்ற தாமிரபரணி நீரும், கரிசல் காட்டு சவறு நீரும் அவர்களுக்கு எழுத்துலகில் போசாக்கு சக்தியை தருகிறது. ஒருபுறம் பாடுபடும் வெள்ளந்தி கரிசகாட்டு-செவக்காட்டு விவசாயிகளின் போர்குணமும், நெல்லை மக்களின் யதார்த்தமான இயல்பும் இவர்களை அற்புதமான படைப்புகளை உருவாக்கும் காரணிகளாகும். மேற்கே ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் துவங்கி ஆண்டாளுடைய திருப்பாவை, சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, பாரதியின் எட்டையபுரம், கரிசல் காட்டுடைய பருத்தி,மிளகாய் விளைச்சல் காடுகளும், ராஜபாளையம் மணிமேகலை மன்றமும், கோவில்பட்டி காந்தி மைதானம், விளாத்திக்குளம் வானம் பார்த்த பூமி, கடற்கரையும் ஒட்டப்பிடாரத்தின் வேலிக்காடும், தூத்துக்குடியின் கருவாட்டினுடைய வாசமும், புழுதிபரந்த நகர்க்கோலமும், தாமிரபரணியின் ஆற்றோரமும், நெல்லையின் இலக்கிய வாசமும், பொதிகையின் தமிழ் தொட்டிலும், தென்காசியின் திருவள்ளுவர் மன்றமும், சங்கரன்கோவிலில் புதிய பார்வை அமைப்பும், தெற்குச் சீமை இலக்கிய படைப்பாளிகளிடம் பின்னிப் பினைந்தவை. 

ஒரு , வறட்சிக் காடு, மற்றொரு பக்கம் தாமிரபரணி தீரவாசம், கொட்டித் தீர்க்கும் குற்றால, பாநாச அருவிகளும், மனப்பாடு,திருச்செந்தூர், தூத்துக்குடி, புன்னைக்காயல், வேம்பாறு கடற்கரையும் சிந்தனையை தூண்டுகின்ற களங்களாகும். இந்த களத்தில் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகும். 

தின்னவேலி, பாளையங்கோட்டை கலாச்சாலைகள் இப்படிப்பட்ட இலக்கிய படைப்புகள் அமைய நாற்றாங்கால்களாகும். நிமிர வைக்கும் நெல்லைக்கு பல அடையாளங்களும், முத்திரைகளும் உண்டு. வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடெமி 2016இல் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நெல்லைபடைப்பாளிவண்ணநிலவனுக்கு சாகித்ய அகாடமி விருது  கிடைப்பதாக செய்திகள் வருவது தித்திப்பாக இருக்கிறது. கோவில்பட்டியில் தமிழ்த்தாயி நெல்லையில் வாக்கப்பட்டு நல்லஇலக்கியங்களைபடைத்திருக்கிறார். என்னை பிரசவித்த பூர்வீக நெல்லை மண்ணை மிடுக்கோடும், பெருமையோடும் வணங்குகிறேன். 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-11-2018
#நிமிரவைக்கும்நெல்லை
#சாகித்யஅகாடமிவிருதுகளை 
#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...