Wednesday, June 30, 2021

அதுதான் உணமை….

நமக்கானதில்லை எனும் போது தெளிந்து விலகி செல்வதில் இருக்கும் நிம்மதியும் ….
நமக்கானதா இல்லையா என்ற குழப்பத்தில் இருப்பதில்லை.

அதுதான் உணமை…

take a risk
open yourself
to what we could be
if we chose
to be more….

#KSRPost
30-6-2021.


#International_Day_of_Parliamentarism #இன்று_பன்னாட்டு_நாடாளுமன்ற_நாள்

#International_Day_of_Parliamentarism 
#இன்று_பன்னாட்டு_நாடாளுமன்ற_நாள்———————————————————-

நாடாளுமன்றத்தை அமைத்து, பாதுகாத்து பாராட்டுகின்ற வகையில் இந்த நாள் நினைவுபடுத்தப்படுகிறது.

ஜனநாயகம் என்பது கிரேக்கத்தின் நகர் அரசான ஏதென்சில் பிறந்து, உலகம் முழுவதும்  பரவியது. அதேபோல்  குடியரசு (Republic) இத்தாலியிலுள்ள ரோமில் பிறந்து அதுவும் உலகளவில் சென்றடைந்தது.

குடியரசும் ஜனநாயகமும் ஒரே நோக்கத்தில் சென்றாலும், அதன் அமைப்பு முறை, அதை இயக்குகின்ற இயங்குவியல் வித்யாசமானது.

ஜனநாயகம் கிரேக்கத்திலிருந்து பிரிட்டனுக்கு பெயர்ந்து அங்கு நாடாளுமன்ற அமைப்பு முறை (west minister form of government) என்ற முறை தொடங்கப்பட்டு அந்த நிலையில்தான் இரண்டு அடுக்குகள் கொண்ட bicameral நாடாளுமன்ற முறையை உலகம் முழுவதும் இன்றைக்கு நாம் அமைப்பு ரீதியாக வைத்துள்ளோம்.

பிரிட்டனில்தான்  அரசியல் சாசனத்துகான முதல் ஆவனம் மகாசாசனம் எழுதப்பட்டது. இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட அதன் பல காலனி நாடுகள், நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுகின்றன. இத்தாலி ரோமில் பிறந்த குடியரசு, பிரான்சிலும், அமெரிக்காவிலும் அதிபர் முறை ஆட்சியைக் கொண்டுள்ளது. 

இப்படி இரண்டு பகுதியான அமைப்பு ரீதியான வகைகள் இருந்தாலும், அனைத்தும் மக்கள் நல அரசாகவும், மக்கள் நல செயல்களுக்காகப் பேணுகின்ற அமைப்பு முறையே ஆகும். இன்றைக்கு நாடாளுமன்ற நாள். அதை நினைவு கூறுவோம். நாடாளுமன்ற முறையைச் செழுமைப்படுத்த உறுதி கொள்வோம்.

Parliament plays a crucial role in giving people a voice and representation to influence as well as shape policy. On International Day of Parliamentarism, commit to nourish our democracy….

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2021.


#தலைவர்_கலைஞர்_அவர்கள் #நள்ளிரவு_கைது_தமிழக_அரசியல் #வரலாற்றில்ஒருபிழை.......

#தலைவர்_கலைஞர்_அவர்கள்
#நள்ளிரவு_கைது_தமிழக_அரசியல் #வரலாற்றில்ஒருபிழை.........
————————————————-
தலைவர் கலைஞர் அவர்களை நள்ளிரவில் கொடூரமாக நாகரிகமற்ற முறையில் அன்றைய ஆளும் அராஜக அரசு கைது செய்து இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. முதுபெரும் தமிழினத் தலைவரை கைது செய்யப்பட்டதை அறிந்த உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கைது சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்த ஒளிநாடாவை அந்த நேரத்தில் காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி அறிவாலயத்துக்கு கொண்டுவந்த நிகழ்வை பத்திரிக்கையாளர் சுரேஷ் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார். அது குறித்தான பத்தி..







நள்ளிரவில் கலைஞர் கைது - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம் - கே.கே. சுரேஷ்குமாரின் பதிவு

சமீபத்தில் சன் டி.வி. செய்தியாளர் கே.கே. சுரேஷ்குமார் எழுதிய "நள்ளிரவில் கலைஞர் கைது" - ஒரு நிருபரின் நேரடி சாட்சியம் என்ற நூல் வெளியிடப்பட்டது.  அதில் குறிப்பிட்ட சில செய்திகளும், பதிவுகளும் 20 ஆண்டுகளுக்கு பின் இன்றைக்கு நினைத்து பார்க்கும்பொழுது மனித உரிமைகள் ஜெயலலிதா ஆண்ட காட்டாட்சியில் எவ்வாறு மீறப்பட்டன என்பதெல்லாம் சாட்சியங்களாக உள்ளன.

நள்ளிரவில் உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில் தலைவர் கலைஞர் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் கடுமையான கண்டனக் குரலை தெரிவித்தனர். பாரதியின் வாக்கின்படி பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது அன்றைக்கு நிரூபணமானது.

அந்நூலில் திரு. கே.கே. சுரேஷ்குமார், தலைவர் கலைஞர் கைது குறித்த சி.டி.யை எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அன்றைக்கு அண்ணா அறிவாலயத்தில் இருந்த சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் காவல்துறையினரின் கண்ணில் சிக்காமல் ஓடி ஒளிந்து சேர்த்தக் காட்சியை அந்த நூலில் 65வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

கலைஞர் கைது கேசட் அலுவலகம் சேர்ந்த கதை

கேசட்டை எடுத்து ஓடிவந்த கே.எஸ். ராதாகிருஷ்ணனின் "சாகசம்"

கலைஞர் கைதை வெளி உலகிற்கு காட்ட உயிர் நாடியாக இருந்த அந்த விலைமதிப்பற்ற வீடியோ கேசட்டை, கேமராவில் இருந்து எடுத்து, எங்கள் எம்.டி. கலாநிதி மாறனிடம் கொடுத்தோம் என்றேன் அல்லவா! அப்போது அதை கவனித்த காவல்துறை துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன், கேசட்டை பறிக்க வேண்டும் என்று பரபரப்படைந்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி, அந்த கேசட்டை எங்கள் எம்.டி. அருகில் இருந்த தி.மு.க. வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனுக்கு கண்ணை காட்டி, கேசட்டை அவர் கையில் சொருகினார். 

இதையடுத்து, கேசட்டை தனது இடுப்பில் சொருகிக்கொண்ட இராதாகிருஷ்ணன், போலீசார் சந்தேகப்படாத வகையில் அங்கிருந்து மெல்ல நகர்கின்றார். போலீசார் கண்கள் கலாநிதி மாறன் அவர்களையே வட்டமடித்தபடி இருக்க இதை இராதாகிருஷ்ணன் பயன்படுத்திக் கொண்டார். வெளிச்சமான பகுதியை விடுத்து, இருட்டான பகுதிக்குள் அவர் ஓடி மறைகிறார்.

அண்ணா அறிவாலயத்திற்கு நேர் வழியில் செல்லாமல், வீடுகள் சூழ்ந்த குறுக்கு சாலைகளின் வழியே இராதாகிருஷ்ணன் முன்னேறிச் செல்கிறார். இதற்கிடையே, எங்கள் எம்.டி. கலாநிதிமாறன் கையில் கேசட் இல்லாதது கண்டு, வெகுண்டெழுந்த கிறிஸ்டோபர் நெல்சன், அந்தப் பகுதியில் இருந்து சென்ற, அனைவரையும் பிடித்து சோதனையிடுமாறு போலீசாரை விரட்டுகிறார். இரண்டு போலீசார் இராதாகிருஷ்ணன் சென்ற பாதையில் பின்தொடர்கின்றனர். 

ஆனால் ஒரு கையால் இடுப்பில் இருந்த கேசட்டை பதற்றத்துடன் பற்றியபடியே, ஓட்டமும் நடையுமாக அவர் அண்ணா அறிவாலயத்தின் பின்பக்க கேட்டை அடைகிறார். (இந்த தகவலை என்னிடம் கூறிய இராதாகிருஷ்ணன், நெல்லையில் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் படித்தபோது விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டபோது கூட முதலில் வரவேண்டும் என்று இப்படி மூச்சு வாங்க ஓடியதில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.)

கேட்டுக்கு உள்ளே இருந்த கூர்க்காவை அவர் மெல்லிய குரலில் அழைக்க, கூர்க்காவோ, "ஆகேவாலே கேட் சே ஜாவோ" (முன்வாசலுக்கு போ) என இந்தியில் சத்தமாக கூற, கடுப்படைந்த இராதாகிருஷ்ணன், நேரம் காலம் புரியாமல் கடமை உணர்ச்சியை காட்டுகிறானே என நொந்துபோய், தனது முகத்தை நல்ல வெளிச்சத்தில் கூர்க்காவிடம் காட்டுகிறார். பதற்றமடைந்த கூர்க்கா அதன் பிறகே கேட்டை திறந்துள்ளார். உள்ளே தலைதெறிக்க ஓடிய இராதாகிருஷ்ணன், அண்ணா அறிவாலயத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் சன் டி.வி.யை அடைந்து அந்த கேசட்டை சன் தொலைக்காட்சி செய்திப்பிரிவில் அப்போது பணியில் இருந்த ஏழுமலை வெங்கடேசனிடம் ஒப்படைத்த பிறகே, தான் பெரும் நிம்மதி அடைந்தேன் என்று கேசட்டை எடுத்து வந்து மயிர்க்கூச்செரியும் நிகழ்வை என்னிடம் விவரித்தார்.

அதே நேரம், கலாநிதி மாறன் அவர்களிடம் இருந்து கேசட் அனுப்பிவைக்கப்பட்டது குறித்த தகவல் வர, செய்தி தயாரிக்கும் பணி மின்னல் வேகத்தில் தொடங்கியது. கலைஞர் கைது தகவல் கிடைத்து அதிகாலை 4 மணிக்கே செய்தி ஆசிரியர் ராஜா, அலுவலகம் வந்து சேர, சூரியன் உதிக்கும் முன்பே சன் செய்தியாளர்கள் கருப்பசாமி, பால்முருகன், சிவராமன், வேலாயுதம், ரமேஷ், இந்துஜா, காயத்ரி மற்றும் கேமராமேன்கள் மணி, மாரி, மோகன், வெங்கட், லோகநாதன், பாபு, இந்திரசேனா, சேகர் உள்ளிட்ட அனைவரும் அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர். செய்தியாளர்களும், கேமராமேன்களும் துரிதமாக களப்பணியில் இறங்குகின்றனர். காலை 5 மணிக்கெல்லாம், சன் தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பு தொடங்கியது.

கலைஞர் கைது செய்தி அறிந்து சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு மூத்த துணை ஆசிரியர்கள் துரைக்கண்ணு, மாடக்கண்ணு, ரசூல், ஜார்ஜ், சிவகங்கை மணிமாறன், விஜயரங்கம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் (இவர்களுக்கு பிற்பகலில்தான் பணி) சன் டி.வி. அலுவலகத்திற்கு காலை ஆறரை மணிக்கே பதற்றத்துடன் விரைந்து வந்தனர். பின்னர் இவர்கள் கைவண்ணத்தில் செய்தியை மேலும் மெருகேற்றும் பணி தொடங்கியது. சொக்கலிங்க ரவி, ஞானேஸ்வரி, ஈவெரா ஆகியோரின் கணீர் "டப்பிங்" குரலுடன் செய்தி தயாரிப்பாளர்கள் பாலகுமார், முரளி, ஜெகஜீவன் ராம் ஆகியோரின் "காட்சி எண்ணத்தில்" கலைஞர் கைது நிகழ்வு பின்னர் விரிவாக ஒளிபரப்பாக தொடங்கியது. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் கலைஞர் கைது செய்திகள் விடியற்காலை முதலே ஒளிபரப்பாக தொடங்கியது.

மேலும் பக்கம் 92ல், பெர்னாண்டஸ் அண்ணா அறிவாலயம் நோக்கி பயணப்பட்டனர். அந்த நிகழ்வை 'லைவ்' வாக தருகிறார் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

ஜார்ஜ் பெர்ணான்டஸ் இப்போது பேசுகிறார்;

"மிஸ்டர் இராதாகிருஷ்ணன்.... எமர்ஜென்சி காலத்தில் நான் அனுபவித்த அவஸ்தைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது 1975 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் போலீசார், உளவுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் - என்னை கைது செய்ய வேட்டையை தொடங்கி இருந்தனர். வட மாநிலங்களில் - மாறுவேடம் பூண்டு நான் தலைமறைவாக திரிந்தேன். எனது இருப்பிடங்கள் தெரிந்து என்னை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வந்து கொண்டே இருந்தனர். இங்கிருந்தால் என்னை எப்படியும்  பிடித்துக்கொள்வார்கள் என்பதால் தமிழகத்துக்கு தப்பி வந்தேன்.

அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. கலைஞர் அரசு எனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், அப்படியே சென்னை வந்து சேர்ந்தேன்.

நம்பிக்கை பொய்க்கவில்லை. சென்னையில் சாந்தோம் பகுதியில் கலைஞர் அரவணைப்பில் பாதுகாப்பாக இருந்தேன். சென்னையில் தங்கியிருந்த நாட்களில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் தனது நேரடி கண்காணிப்பில் பார்த்துக்கொண்டார் கலைஞர். பின்னர் ஒரு ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டேன். மாறு வேடத்தில் ரயிலில் நான் செல்லும் தகவலை மத்திய உளவுப்பிரிவின் தலைவர் எம்.கே. நாராயணன் எப்படியோ மோப்பம் பிடித்திருந்தார். அவர் கொடுத்த தகவலின்படி நான் ஆந்திர மாநிலத்தில் ரயில் செல்லும்போது கைது செய்யப்பட்டேன்.

இது ஜார்ஜ் பெர்ணான்டஸின் மலரும் நினைவுகள். எமர்ஜென்சி கொடுமையின் சில பக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது"

இவ்வாறு கே.எஸ். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நூலில் 145 வது பக்கத்தில், நள்ளிரவில் கலைஞர் அவர்களை கொடுமையாக கைது செய்யப்பட்டது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு உரிய புகார் மனுவை நான் தயார் செய்து ராயப்பேட்டையில் இருந்த மாநில மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து செல்லும்போது உடன் ஆலடி அருணாவும், ஆ. ராசாவும் வந்தனர். தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பேக்ஸ் மூலமாக டெல்லிக்கு அனுப்பியும் வைத்தேன். அது குறித்தும் சுரேஷ்குமார் எழுதியுள்ளார்;

மாநில மனித உரிமை ஆணைய விசாரணை

கலைஞர் முரசொலி மாறன், டி.ஆர். பாலு மற்றும் தி.மு.க. தொண்டர்கள் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தி.மு.க. புகார் கொடுத்தது. பேராசிரியர் க. அன்பழகன் தயார் செய்த புகார் மனுவை, ராயப்பேட்டையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் ராஜா, தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சாமித்துரையிடம் நேரடியாக கொடுத்தனர்.

இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சாமித்துரை, ஞானசம்பந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் ஜூலை 3ம் தேதி சென்னை மத்திய சிறை சென்ற நீதிபதிகள் கலைஞரிடம் 29ம் தேதி நள்ளிரவு நடந்தவை குறித்து விசாரணை நடத்தினர்.

மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு வேலூருக்கும், மற்றொரு குழு கடலூருக்கும் சென்றன. வேலூர் சென்ற குழு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.ஆர். பாலுவிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்களிடமும் மாநில மனித உரிமைகள் குழு விசாரணை நடத்தியது. கடலூர் சிறைக்கு சென்ற மற்றொரு குழு அங்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. வினரிடம் விசாரணை நடத்தியது. உண்மை நிலவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அனைரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நள்ளிரவில் கலைஞர் கைது என்ற நூலில் ஜூன் 29 நள்ளிரவு, ஜூன் 30, 2001ம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை விரிவாகவும், உரிய தரவுகளோடும் பத்திரிகையாளர் திரு. கே.கே. சுரேஷ்குமார் பதிவு செய்துள்ளார்.

விழுப்புரம் உணவுப்பொருள் கிடங்கில் பொன்முடி அவர்கள் சோதனை செய்து, காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஆலிவர் சாலையில் காவல்துறையினர் அத்துமீறி நள்ளிரவில் வீட்டை சின்னாபின்னம் செய்து தலைவர் கலைஞரை கைது செய்ததும், சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டு சென்றதும், கலைஞரின் முதுகுத் தண்டை பதம் பார்த்ததும், அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களை பந்தாடியதும், நீதிபதி அசோக்குமார் இதை கண்டித்ததும், மத்திய சிறையில் கட்டாந்தரையில் தலைவர் கலைஞர் அமர்ந்திருந்ததும், கலைஞரின் கைதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் உட்பட உலகமே கண்டனக் குரலை எழுப்பியது.  இது தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் களம், நீதித் துறை, மக்கள் என சகலரும் இந்த கொடுமையை சகிக்காமல் முகம் சுளித்தனர். இந்த அற்புதமான பதிவை கே.கே. சுரேஷ்குமார் சிரமம் எடுத்து முறையாக பதிவு செய்தததை பாராட்ட வேண்டும்.

அரசியல் களத்தில் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூலாகும்.

அன்றைக்கு ஆலிவர் சாலை, அண்ணா அறிவாலயம், சிபிசிஐடி அலுவலகம், மத்திய சிறைச்சாலை என இரவெல்லாம் அலைந்துவிட்டு அன்றைய மத்திய அமைச்சர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்தார். ஒரு சில பணிகளை ஒப்படைத்து செய்யுங்கள் என்று சொன்னதும், பேராசிரியர் அவர்களும் காலை 7 மணிக்கெல்லாம் அறிவாலயம் வந்து விட்டார்கள். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வமும், நானும் இது குறித்து மனுவை தயார் செய்து பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தமிழகத்தில் அசாதாரண நிலைமை உள்ளது. எனவே 356ஐ பிரயோகப்படுத்தவேண்டும் என்ற மனுவை தயார் செய்துகொண்டிருக்கும்போது, அன்றைய சென்னை மாநகர் காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் சன் டி.வி. யில் கலைஞர் கைது காட்சிகளை நிறுத்தவேண்டும் என்று அறிவாலயம் வந்தபோது, அவரை எதிர்கொண்டு வாக்குவாதம் செய்து தகராறு செய்தததெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன. சைலேந்திரபாபு தலைமையில் வந்த காவல்துறையினர் தொண்டர்படையை அடித்து அறிவாலயத்தில் முன்னாள் இருந்த கழிப்பறைகளையெல்லாம் உடைத்தார்கள். அப்போது சைலேந்திர பாபுவுடன் தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  

பிரதமர் வாஜ்பாயும் - .அத்வானியும், முதல்வர் ஜெ.வை விடாமல் மிரட்டி அழுத்தம் கொடுத்தனர்.

அப்போது"கலைஞர் ஒரு தேர்ந்த நடிகன்" என்று கண்டன அறிக்கை விட்ட திரவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 'போலீஸ் கைது செய்ய வந்திருக்கின்றோம். ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டபோது, அதை ஏற்று ஒத்துழைத்து உடன் வருவதுதானே தலைவருக்கு அழகு. ஏன் அடம் பிடித்து பெரிய நாடகமாட வேண்டும்' என அறிக்கை விட்ட நாள் இன்று . (அன்றைய விடுதலை) வைகோவும் எந்த கடும் கன்டனம் சொல்லவில்லை. மறுநாள் அமெரிக்கா சென்று விட்டார்.

தலைவர் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் ஆகஸ்ட் 12ம் தேதி பேரணியில் நடந்த சம்பவங்களிலும் முன்னிருந்து எதிர்கொண்டதும், தலைவர் கலைஞரோடு இது குறித்து புகார் மனு கொடுக்க ராஜ் பவன் சென்றதெல்லாம் விரிவான பதிவுகள் செய்யவேண்டும் என்று நினைத்துள்ளேன்.  தலைவர் கலைஞருடைய கைது தமிழக அரசியலில் ஒரு கரும்புள்ளி ஆகும்.

இந்த சம்பவங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சிக்கலான நேரங்களில் ஆற்றியப் பணிகள் எல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளன. 1992ல் தலைவர் கலைஞர் அவர்கள் திரு. என். கணபதியிடமும், என்.வி.என். சோமுவிடமும் ஒரு பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் தீர்வு காண சொல்லும்போது தாமதமாகிவிட்டது. அந்த வழக்கை முறையாக நடத்தி வழக்கு மன்றத்தில் 28 ஜூன் 1992 அன்று தீர்ப்பை பெற்றதும் இன்றைக்கு ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை (Tr Pet (Crim) No. 77-78. 2003) பெங்களூருக்கு மாற்றியதில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தீர்ப்பைப் பெற்றதும் அடியேன்தான் என்று பலருக்கு தெரியாது. இதற்கு சாட்சியாக இருந்த அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனோ, டெல்லி சம்பத்தோ இல்லை. ஆனால் ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது அவரது நேர்முக செயலாளர் அகிலன் ராமநாதன் இன்றைக்கும் இருக்கின்றார். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த காவல்துறையினரின் அத்துமீறலையும், அவரது கைது குறித்து அவரது துணைவியார் தொடுத்த வழக்கிலும் (SHRC No. 3132/2001) அடியேன் ஆஜராகி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இதையெல்லாம் முறையாக, கவனமாக செய்ததற்குத்தான் முரசொலி மாறன் அவர்கள் பொதுக்குழுவிலேயே என்னை பாராட்டி பேசியது தினமலர் இதழில் வெளிவந்தது.

அதன்பின் 2012ல் ஈழப் பிரச்சினையில் டெஸோ திரும்ப அமைத்து தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை லண்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த ஈழத் தமிழர் மாநாட்டில் அழைத்து பேச வைத்ததும், அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தா. பாண்டியன், டி. ராஜா, திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி என அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ள அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தளபதி மு.க. ஸ்டாலின் நிறைவுரை ஆற்றியதெல்லாம் அடியேனது முயற்சிகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  பதவியில் முன்னாளோ, இந்நாளோ, இல்லாமல் களப்பணியினால் இந்த அளவு நினைவுகூறப்படுகிறோம் என்கிற அங்கீகாரம் மட்டும் போதும்.

தகுதியே தடை என்ற நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் பணி செய்துகொண்டிருப்பது கடமை. பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம் நடத்திய மாநாட்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.க. மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சரியான பதிலைச் சொன்னேன். அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் லண்டனில் கலந்துகொண்டார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் அத்தனைப் பேருக்கு முன்னால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரத்த குரலில் பதில் சொன்னது இன்றைக்கும் நினைவில் உள்ளது. இது நடந்தது 2012ல்.

#கலைஞர்நள்ளிரவுகைது 
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-06-2021.

Tuesday, June 29, 2021

India_And_The_Silk_Roads:

#India_And_The_Silk_Roads: The History of a Trading World
Jagjeet Lally

India’s caravan trade with central Asia was at the heart of the complex web of routes making up the Silk Roads. But what was the fate of these overland connections in the ages of sail and steam? Jagjeet Lally sets out to answer this question by bringing the world of caravan trade to life.

India and the Silk Roads is a global history of a continental interior, the first to comprehensively examine the textual and material traces of caravan trade in the ‘age of empires’. By showing how no single ruler could control the nebulous yet durable networks of this trading world, which had its own internal dynamics even as it evolved in step with global transformations, Lally forces us to rethink the history of globalisation and re-evaluate our fixation with empires and states as the building blocks of historical analysis. It is a narrative resonating with our own times, as China’s Belt and Road Initiative brings terrestrial forms of connectivity back to the fore-transforming life across Eurasia once again.

@harpercollinsin


ஈழப் போராட்டம்

இலங்கை  தமிழர் பிரச்சனை- ஈழப் போராட்டம்; உத்தமர் காந்தி இலங்கை சென்ற  காலத்திலிருந்து, இலங்கை விடுதலை, மற்றும்  செல்வா-அமிர்தலிங்கம், வேலுப்பிள்ளை பிரபாகரன் காலம் வரை தலையும் வாலும்  புரியாமல் விவாதிக்கும்  இன்றைய சமூக ஊடக தலைமுறை இருக்கிறது. என்ன
சொல்ல….?

#KSRPost
29-6-2021.

#பொருநை_நதி_கரையில்….

சங்கம் காணாதது தமிழுமல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என்வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளிநிலா…..

#பொருநை_நதி_கரையில்….
சேரன்மகாதேவி.
#ksrpost
29-6-2021.


“#மகாசாசனம் - #மேக்னகார்ட்டா -#MagnaCarta



________________________________
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக அழைக்கப்படும் பிரிட்டன் எப்படித் தன்னுடைய ஜனநாயக நெறிகளை படிப்படியாக வகுத்துக் கொண்டது என்பதற்கு முதல் சாசனம் இந்த மகாசாசனம் ஆகும். இது உலகிற்கே வழிகாட்டுகின்ற, ஆதிகாலத்தில் தோலில் எழுதப்பட்ட முதல் உலகசாசனம் ஆகும்.

நகர அரசுகள் கிரேக்கத்தின் ஏதேன்சில் ஜனநாயகம் (Democracy)உலகில் பிறந்தது, குடியரசு(Republic)
இத்தாலி ரோமில்  ஏற்பட்டாலும் எழுத்தால் எழுதப்பட்ட முதல் சாசனம் இதுதான். இந்தியாப்போன்ற பல நாடுகளைப் போல பிரிட்டனிலும், இஸ்ரேலிலும் எழுதப்பட்ட அரசியல்சாசனம் கிடையாது. மரபுகளும் காலங்காலமாக உள்ள நடைமுறைகளையே அங்கு அரசியல் சாசனக்கூறுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

****

மகாசாசனம் (மேக்ன கர்ட்டா ) 

  சரியாக 806 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின்  பொதுமக்கள், நிலபிரபுக்கள், தனவந்தர்கள் ஒன்றிணைந்து செய்த கிளர்ச்சிகளின் விளைவாக, 1215-ம் வருடம் ஜூன் 15-ம் தேதி அந்நாட்டின் விண்ட்சர் அருகே ரனிமேட்டில் (Runnymede) ஜான் மன்னர் முன்னிலையில் மக்களைக் காக்கும் உரிமைசாசனமான மகாசாசனம் என்னும் மேக்னகர்ட்டா (MagnaCarta) எழுதப்பட்டது. 

ஒரு முழுமையான முடியாட்சியின் காலம் முடிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகார பரவலாக்கம் அப்போதிருந்து படிப்படியாகத் தொடங்கியது. வரும்

 மகாசாசனத்தின் மூலம் பிரிட்டன் அரசரும் அந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டவராகிறார். இதன்படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தின் ஆட்சி, எந்தவித விசாரணையுமில்லாமல் எவரையும் தண்டிக்கக் கூடாது, குற்றவாளிக்கும் தன்னுடைய விளக்கத்தை அளிக்க உரிமைகள் வழங்கவேண்டும், தேவாலயங்கள் அனைத்தும் சுதந்திரமாக செயல்படும். நாட்டின் மன்னர் தன் குடிமக்களோடு கலந்து ஆலோசிக்காமல் எந்த புதிய வரியையும் விதித்து விட முடியாது. 

எந்த காரணத்தைக் கொண்டும் நீதி விற்கப்பட மாட்டாது. குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் எந்த ஒரு தனிமனிதருக்கும் பொதுவில் வாதாட உரிமை உண்டு என மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, ஜனநாயக தத்துவத்தின் அடிப்படையில் படைத்ததுதான் இந்த மகாசாசனம். தற்போதுள்ள எந்த அரசியல் உரிமை சாசனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும் மேக்ன கர்ட்டா பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மகாசாசனம் பற்றிய பல தரவுகள் பிரிட்டனில் காலம்காலமாக கதைகள், நாட்டுப் பாடல்கள் மூலம் வரலாற்றில் பதியப் பட்டு வந்துள்ளது. 

யூதர்களுக்கு மோசே, இந்தியாவில் மனு, மெசபடோமியாவில் ஹமுராபி, சீனாவில் கன்பூசியஸ் மற்றும் ரோமில் ஜஸ்டினியன் ஆகிய சட்டங்கள் மேக்ன கர்ட்டாவுக்கு முன்பே இருந்திருந்தாலும் மேக்னகர்ட்டா அவற்றிலிருந்து வேறுபட்டு, மக்களுக்கான உரிமைகளை தெளிவு படுத்துகின்ற சாசனமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் மேக்ன கர்ட்டா உரிமையாக அளிக்கப்பட்டதல்ல, அரசரிடமே கேட்டுப் பெறப்பட்டது. 

கிரேக்கத்தில் அமைக்கப்பட்ட நகர அரசுகளும், ரோம் அரசுகளும் ஆதியில் ஜனநாயகத்தின் தொட்டிலாகக் கருதப்பட்டது. உலகில் பிரிட்டனிலும், இஸ்ரேலிலும் அரசியல் அமைப்புச்சட்டம் எழுதப்படவில்லை. ஆனால் மரபுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்களைக் கொண்டு அங்கு அரசாங்கம் இயங்குகின்றது. இதற்கு அடிப்படைக் காரணியாக இந்த மகாசாசனம் பிரிட்டனில் இருந்தது. 

ஆதியில் பிரிட்டனில் வழக்கு விசாரணைகள் சரியாக நடத்தாமல், கடுமையான தண்டனைகளான, கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் மனித உயிர்களைத் தள்ளுவது போன்ற மட்டமான நடைமுறைகள் இருந்தன.  பெரும் போராட்டத்தின் பிறகு ஜான்மன்னர் கையொப்பமிட்டு மகாசாசனம் பிரகடனம் செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் எல்லைப் பகுதிகளை பிரான்ஸ்சிடம் இழந்த ஜான் மன்னருக்கு, மேக்ன கர்ட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன்மூலம் முதன்முதலாக குடியாட்சிக்கான விதை அங்கு விதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அரசியல்  புரட்சிகளினால் இந்தியா உட்பட ஜனநாயக நாடுகள் ஒவ்வொன்றின் தலையெழுத்தையும் மேக்னகர்ட்டா தீர்மானித்தது. 
மேக்ன கர்ட்டா, ஒரு மன்னர் தன்னையும் சட்டத்துக்குள் ஆட்படுத்தி இயற்றிய மிகப் பழமையான முதல் அரசப் பிரகடனம். ஒருவர் எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும் சட்டம் அவரை விட உயர்வானது என்ற கருத்து இதன்மூலம் வலுவாக்கப்பட்டது. 

இந்த மகாசாசனம் தான் அரசியலமைப்பு பிரகடனங்களில் மிகச் சிறந்தது என்கிறார் ஆங்கிலேய நீதிபதி லார்ட் டென்னிங். இதுவே தன்னிச்சையான ஒரு கொடுங்கோலனின் அதிகார துஷ்ப்ரயோகத்திலிருந்து ஒரு தனிமனினை காக்கும் அடித்தளம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். 

ஜானுக்கு முன்பும், மேக்ன கர்ட்டாவுக்கு முன்பும் அதாவது 597-ம் ஆண்டிலேயே இங்கிலாந்தில் சட்டங்கள் இருந்தன. அவற்றை சாக்ஸ்சன் சட்டம் (saxon law) என்று குறிப்பிடுகின்றனர். 

1066-ம் ஆண்டு வில்லியம் தலைமையில் பிரான்சின் நார்மான்கள் இங்கிலாந்தை கைப்பற்றினர். 1100-ம் ஆண்டு முதலாம் ஹென்றி நார்மான்களின் சட்டங்களோடு சாக்ஸன் சட்டத்தையும் இணைத்து ஒரு புதிய சட்டத்தை அங்கு உருவாக்குகிறார். 

இங்கிலாந்தில் உரிமைவேட்கையின் முதல் மோதல் இரண்டாம் ஹென்றிக்கும் கேன்ட்டர்பெரி பேராயர் தாமஸ் பெக்கட்டினுக்கும் இடையில் துவங்கியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிந்த நான்காவது நாள் ஜெபத்திலிருந்த பேராயர் தாமஸ் பெக்கடின் கொலை செய்யப்பட, அவரது மரணம் பிரிட்டன் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியது. அதன்பிறகு இங்கிலாந்தை பதினெட்டு வருடங்கள் இரண்டாம் ஹென்றி ஆட்சி புரிந்தார் .

நிர்வாகம், ஆட்சிமுறை, சட்டம் ஆகியவற்றை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டாம் ஹென்றி, வழக்குகளை விசாரிக்க பொதுவான ஜூரிகளை அமர்த்தினார். நிலப்பிரபுக்கள் மூலம் தன்னிச்சையான விதிகள் இருந்த இடத்தில் ஆண், பெண்களுக்கும் சமமான ஒரு பொதுவிதியை இந்த ஜூரிகள் மூலம் நிர்ணயித்தார். இந்த புதிய விதி எதிர்கால இங்கிலாந்தின் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது என்றால் மிகையானதல்ல. 

இரண்டாம் ஹென்றிக்கு பின் ஆட்சிக்கு வந்த அவர் மூத்த மகன் முதலாம் ரிச்சர்ட் பாலஸ்தீனத்தில் போர் முனையிலிருந்து திரும்பியபோது எதிரிகளால் கைது செய்யப்பட்டார். இடைப்பட்ட காலங்களில் இங்கிலாந்தை ஆட்சி செய்த ஜான் நாட்டினை சின்னாபின்னமாகினார். முதலாம் ரிச்சர்ட் திரும்பி வந்து ஆட்சியை கைப்பற்றினாலும் ஒரு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைய மீண்டும் இங்கிலாந்து ஜானின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வந்தது.  

ஏற்கனவே அதிக வரி செலுத்திவந்த நிலப்பிரபுக்கள் மேல் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. ஜான் கேண்டர்பர்ரியின் பேராயரோடும் மோதினார்.  இந்தகட்டத்தில் பிரிட்டனில் குழப்பங்கள் விளைந்து, அரசநிர்வாகம் மக்கள் விரோதமாக மாறி மக்கள் தேவையில்லாமல் தண்டிக்கப் பட்டனர். சர்வாதிகாரம் தலைதூக்கி நர்த்தனமாடியது.  

இதற்கிடையில் ஐரோப்பாவில் ஜெர்மனுடன் இணைந்து பிரான்சுக்கு எதிராக போரிட்ட ஜானின் படைகள் தோல்வியடைந்தன. நகரங்களில் கலகங்கள் ஏற்பட, பிரிட்டன் மக்கள் ஜான் மன்னருக்கு எதிராக உரிமைகள் கேட்டுப் போராடத் துவங்கினர். அதன் விளைவே மேக்னகர்ட்டா என்னும் மகாசாசனத்தின் உதயம். 
பல சுற்றுகளுக்குப் பிறகு, 1215ம் வருடம் மகாசாசனம் அரசு முத்திரை பதிக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. This Little Britain நூலாசிரியர் ஹாரி பிங்கமின் வார்த்தைகளில் சொல்வதானால், பிரிட்டன் இந்த உலகுக்கு கொடுத்த ஆகச் சிறந்த அருட்கொடை  ‘மேக்னா கார்ட்டா’. மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர். சட்டத்தை மீறினால், அவரது நிலங்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்கிறது மாகாசாசனம். அரசர் தான் எல்லாமும் என்று இருந்து வந்த காலத்தில் இது புரட்சிகரமான ஓர் அம்சம் என்று திகைக்கிறார் ஹாரி பிங்கம்.

பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. இவ்விருதரப்பு மட்டுமே மேக்னகார்ட்டாவின் மகத்துவத்தை அறிந்திருந்தது. ஆகவே பிரகடனப்படுத்தப்பட்ட மகாசாசனம் பெயருக்குத்தான் இருந்ததே ஒழிய நடைமுறைப்படுத்தப் படவில்லை. சாசனம் உருவான பிறகும் ஜான் அடக்குமுறையை ஏவுவதும், படுகொலைகள் நிகழ்வதும், மக்கள் தொடர்ந்து போராடுவதும் நடந்து கொண்டுதான் இருந்தது. 

இந்நிலையில் 1216ம் ஆண்டு, பிரெஞ்சு ராணுவம் மீண்டும் பிரிட்டனில் கால் பதித்தது. இம்முறை இவர்களைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஜான், தன் படைகளை விட்டுவிட்டு ஓடிப்போனார். பிரான்ஸ் பிரிட்டனை வெற்றிக்கொண்ட அந்தத் தருணத்தில் இறந்து போனார். 

ஜான் மன்னரின் இடத்தில் ஆட்சிக்கு வந்த மூன்றாம் ஹென்றி, முதல் காரியமாக மேக்னா கார்ட்டாவைத் தூசிதட்டினார். அதன் ராஜாங்க உபயோகம் அவருக்குத் தெரிந்திருந்தது. பிரிட்டனிலிருந்து பிரான்ஸைத் துரத்தியடிக்க வேண்டுமானால் படைகள் மட்டும் போதாது, மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். மேக்ன கர்ட்டா  அதற்கு கைகொடுத்தது. 

1217-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த போது, மேக்ன கார்ட்டா சிறிய மாற்றங்களோடு சமாதான ஒப்பந்தமாக அறிவிக்கப்பட்டது. 1225-ல் மீண்டும் அந்த அதிகாரபத்திரம் மறுவெளியீடு செய்யப்பட்டு 1297-ம் ஆண்டு இங்கிலாந்து சட்டத்தில் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

பிற்காலத்தில் பிரிட்டண் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த புதியசட்டத் திருத்தங்களால் மேக்னகர்ட்டா தன் நடைமுறை முக்கியத்துவத்தை சிலசமயங்களில் இழக்கவும் நேர்ந்தது. 

ஆரம்பகாலத்தில் மேக்ன கர்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமாகவே இருந்தது. அவையும் அலங்காரச் சட்டங்களாகவே சேர்க்கப்பட்டவை. சாசனப் பிரிவு 39 மற்றும் 40,“எந்தவித சுதந்தர மனிதனும் அநீதியாக கைது செய்யப்படவோ, சட்டத்துக்கு விரோதமாக சிறையில் அடைக்கவோ, நாடுகடத்தவோ முடியாது. எந்த சுதந்தர மனிதனின் உரிமையும் பறிக்க முடியாது என்கிறது. 
 
ஆனால் இந்த அலங்கார மொழிகளுக்கு உள்ளேயும் ஒரு திருகல் வேலை இருந்தது. அரசர் அளிக்கும் உரிமைகள் சுதந்தர மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். யார் சுதந்திர மனிதன் என்பதை அரசர் தான் தீர்மானிப்பார். தங்களுக்குப் பிடிக்காத புரட்சியாளர்களை, நிச்சயம் சுதந்தர மனிதர்கள் என்று ஒருபோதும் அழைக்கப் போவதில்லை. அவர்களுக்கு உரிமைகள் வழங்கப் போவதும் இல்லை.

பதினாறாம் நூற்றாண்டின் முடிவில் மேக்ன கர்ட்டா ஒரு புதிய எழுச்சியை கண்டது. வழக்கறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் ஆங்கிலோ-சாக்ஸன் நாட்கள் திரும்ப வந்ததாக கருத ஆரம்பித்தனர். 1066-ல் நார்மன் படையெடுப்புக்கு பின்பு காணாமல் போய் விட்ட இந்த உரிமைகளை மேக்ன கார்ட்டாவை  பயன்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்றும், ஆட்கொணர்வு உரிமையினை (habeas corpus) மீண்டும் பாராளுமன்ற  தீர்மானங்களில் சேர்க்க முடியும் என்றும் வாதிட்டனர். 

நீதித்துறை மேக்ன கர்ட்டாவை அரசர்களின் தெய்வீக உரிமைகளுக்கு எதிராக வாதிட பயன்படுத்திக் கொண்டன. 1640ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முதலாம் 
சார்லசுக்கு மரண தண்டனை விதிக்கும் வரையிலும் மேக்ன கர்ட்டாவை பற்றிய விவாதங்கள் அடங்கியிருந்தது.

1688-ல் மேக்ன கர்ட்டா ஒரு ஒளிமயமான புரட்சிக்கு பிறகு ஒவ்வொரு தனிமனிதரின் உரிமைகளை பாதுகாக்கும் மூன்று முக்கிய ஆவணங்களில் ஒன்றாக முடியாட்சியின் கீழ் சேர்க்கப்பட்டது. இந்த அதிகாரப் பத்திரம் 1789ம் ஆண்டு அமெரிக்க காலனிகள் உருவாவதற்கும், அமெரிக்காவின்  அரசியலமைப்புச் சாசனம் உருவாவதற்கும் உதவியாக இருந்தது. இன்றைக்கும் மேக்னகர்ட்டா சுதந்திரத்தின் சின்னம் என அரசியலாளர்களாலும், உலகநாடுகளின் தலைவர்களாலும் மேற்கோள் காட்டப்படுகிறது. 

1215ம் ஆண்டு, மேக்ன கர்ட்டாவின் 1215 மூல சாசனங்கள் பதப்படுத்தப்பட்ட கன்றின் தோல்மீது குயில் இறகினைக் கொண்டு, இலத்தீன் மொழியில் எழுதப்பட்டு, மெழுகு மற்றும் பிசினால் முத்திரை இடப்பட்டது. 

தற்போது மேக்ன கர்ட்டாவின் 1215 மூலசாசனங்களில் நான்கு மட்டும் பிரிட்டிஷ் நூலகத்திலும், லிங்கன் நூலகத்திலும் மற்றும் சாலிஸ்பரி தேவாலயங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மற்றும் தனியார் உடமையாக சில மூலசாசனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ளன. 

1759-ல் அறுபத்தி மூன்று பாகங்களாக வில்லியம் ப்ளாக்ஸ்டோனினால் பிரிக்கப்பட்டாலும்  அசல் மேக்ன கர்ட்டா ஒற்றையான, உடையாத, நீண்ட உரையினால் உருவாக்கப்பட்டது. இந்த நான்கு அசல் மேக்ன கர்ட்டா சாசனமும், அது உருவான 800 வது ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த,
பிப்ரவரி 3, 2015 நாளன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில்  பொதுமக்கள் பார்வைக்குக் வைக்கப்பட்டது . 

மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள். அடிப்படை உரிமைகள் என்ற கூறுகளுக்கு அடிப்படையே இந்த மேக்ன கர்ட்டா தான். இவ்வாறான மகாசாசனம் உலக வரலாற்றில் முதல் மக்களின் சாசனமாகும். அரசியல் அரங்கத்தில் இந்த அருட்கொடை கிடைத்ததை பிரிட்டன் மட்டுமல்லாமல் பன்னாட்டளவில் கொண்டாடவேண்டும். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-06-2021.

Images of a rare copy of Magna Carta at St John's College are being made available to coincide with the document's 800th anniversary.

Even if historians had seen a record of the St John’s copy in the past, they would probably not have recognised its significance as they would have been unaware that it was in this form

A rare 14th Century copy of Magna Carta that appears to have been unnoticed for generations, until it was uncovered during research marking the document’s 800th anniversary, can be viewed online from today (Friday, 12 June).
The copy, which is owned by St John’s College, University of Cambridge, dates back to the reign of Edward I, and is one of just a handful of surviving statute rolls that recite clauses from the famous charter. Edward I was one of the monarchs who reissued a version of the Magna Carta, which was originally produced in 1215, during the reign of King John.

Although it had been preserved in the College archives, the manuscript appears to have been overlooked – and may indeed have been completely unknown to historians – until now. Its significance was only realised when Professor Nicholas Vincent, from the University of East Anglia and head of the national Magna Carta Project, contacted the College to enquire about documents that be believed contained clauses from the charter.

Professor Vincent realised that the item is, in fact, an early-to-mid 14th Century example of a type of statute roll that would have been used to circulate parts of Magna Carta throughout medieval England. While these were once commonplace, only about a dozen are known to exist today.

Ahead of the anniversary of Magna Carta, on June 15th, the College is releasing images of the copy online along with a short accompanying film. Members of the public can also view the charter by making an appointment to visit the College archives.

The document’s importance is thought to have gone undetected because no systematic attempt to collect the surviving copies of Magna Carta had been undertaken until the 800th anniversary project was launched. Even if historians had seen a record of the St John’s copy in the past, they would probably not have recognised its significance as they would have been unaware that it was in roll form.

In fact, for statute rolls of Magna Carta to survive is very rare. Earlier generations considered the parchment of which they were made very useful for secondary purposes, including lighting fires, and even as animal feed! As a result, most such rolls were lost. Judging by the valuation of similar items at auction, the St John’s copy is thought to be worth several tens of thousands of pounds.

Although it was famously agreed to by King John at Runnymeade, near Windsor, on 15 June 1215, much of Magna Carta had been repealed or rewritten within 10 years of its issue. Modified versions were reissued under both Henry III and Edward I, with some of the more radical clauses in particular removed.

Edward agreed to a renewal of Magna Carta in 1297, and then reissued it on 28 March 1300. The roll at St John’s College recites this 1300 reissue and may have been preserved by the Hospital of St John that once stood on part of what is now the College.

In common with various other copies of Magna Carta that have surfaced in the past, the manuscript is part of a larger document. In this case it was stitched together with a lawyer’s copy of the assize of bread and ale, a law which regulated the price, weight and quality of the bread and beer manufactured and sold in England, and was the first in British history to regulate the production and sale of food. The roll also recites clauses from the Forest Charter, which was issued as a companion document to Magna Carta in 1217 and dealt with rights of access to the royal forest.

The Magna Carta Project, which is led by Professor Vincent, is a collaborative initiative between several universities that aims to track down lost originals of Magna Carta and create an online database featuring commentary, translations, and research findings about the charter. The team are sifting through hundreds of archives as part of their research.

The St John’s copy is being made available to view as part of the nationwide Explore Your Archive Magna Carta campaign, in which archives around the country that have a copy of Magna Carta are being encouraged to make it available to the wider public.

Tracy Deakin, Archivist at St John’s College, said that it was not uncommon for long-forgotten historical documents to resurface from archives, many of which are being made available publically in a manner that was not possible a few decades ago. 

“This sort of discovery is a lot more typical than people might think,” she said. 
“A couple of generations back, archivists did a very different type of job and would not have been able to command the same kind of accessible detail about everything in their archive in the way that we can now.” (courtesy - Cambridge Univerity )
•••••
June 15, 1215 the Magna Carta was signed by King John. The spirit is clearly present in the Declaration of Independence, which used the Magna Carta as a model for free men petitioning a despotic government for their God-given rights to “life, liberty and the pursuit of happiness”.  But the Magna Carta’s legacy is reflected most clearly in the Bill of Rights.  There were 25 Barons of the Magna Carta that were entrusted by the terms of clause 61 to ensure the Kings compliance. I am proud to say that I am a direct descendant of 13  of those Barons. 

Hugh le Bigod - 3rd Earl of Norfolk
Richard de Clare - 3rd Earl of Hertford 
Alan of Galloway -4th Lord of Galloway
William de Mowbray-1st Lord of Mowbray 
Roger le Bigod-2nd Earl of Norfolk
William d’Albini- 3rd Lord of Belvoir
William Huntingfield- Sheriff of Norfolk
Robert de Vere- 3rd Earl of Oxford
Henry de Bohun-1st Earl of Hereford
William VI d’Aubigny-3rd Earl of Arundel
John de Lacy- 1st Earl of Lincoln
Saher IV de Quincy- 1st Earl of Winchester
William de Warenne-5th Earl of Surrey
Gilbert de Clare-4th Earl of Hertford 
Robert Fitz Walter- Lord of Dunmow Castle
William Marshal- Knight Templar- 1st Earl of Pembroke
Robert I de Roos- Knight Templar
And John I Plantagenet- King of England

#MagnaCarta
#GreatChatter 

#KSR_Posts
#KsRadhakrishnan
29-6-2021.

#கச்சத்தீவு_விவகாரம் #kachchativu

#கச்சத்தீவு_விவகாரம்
#kachchativu
————————————
கடந்த 1974 ஜூன் 28 ஆம் நாள் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்காக முதல் ஒப்பந்தம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது.

கச்சத்தீவை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாதென அனைத்துக் கட்சி கூட்டத்தை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் நடத்தினார்.  தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தைப் பொருட்படுத்தாது அன்றைய இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது பல எதிர்ப்பலைகளை எழுப்பியது.

முதல் ஒப்பந்த்தில்,இந்திய பிரதமரோ இந்திராகாந்தி 26-6-1974இல் டில்லியில் கையெப்மிட்டார்,இலங்கை பிரதமரோ ஶ்ரீமவோ ஆர்.டி. பண்டாரநாயக்க அதில் 28-6-1974இல் கொழும்பில் வைத்து கையெழுத்திட்னர்.ஆனால் இறுதி இராண்டாம் ஒப்பந்தம் அதிகாரிகள் மட்டத்தில், இந்திய வெளிவிவகார செயலாளர் கேவல் சிங்,இலங்கை வெளிவிவகார செயலாளர் டப்ளியூ.டி  ஜெயசிங்கே கடிதங்கள், ஆவணங்கள் மாற்றுவழி 23-3-1976இல் இறுதி இவர்களின் கையெப்பமிட்டு,ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டு பிரதமர்கள் கையெப்பம்இடவில்லை.ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் பெறவில்லை.
  
இதேபோல் கச்சத்தீவு வழங்கும் இரண்டாவது ஒப்பந்தம் இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்போதும் இரு நாட்டு பிரதமர்கள் அதில் கையெழுத்து செய்யவில்லை.
தமிழகத்தில் ஜனசங்க முக்கிய தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணாமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.  இவையெல்லாம் 2007 இல் வெளியான எனது நூலான 'கனவாய் போன கச்சத் தீவு' என்ற  நூலில் மிக விரிவாக எழுதியுள்ளேன். இது குறித்தான பல முறை பதிவு சமூக வலைத்தளத்தில் உள்ளது.

இதே போலவே, தமிழக சட்டசபையின் ஒப்புதல் இன்றி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி - அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையேயான கடிதங்கள் மூலமாகவே தமிழக மேலவை கலைக்கப்பட்டது. இவை வரலாற்று சான்றுகள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.

01 ராமேஸ்வரம்

02 குந்துகால்

03 புனவாசல்

alt04 முயல் தீவு

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.

வாஜ்பாய் அவர்கள் மட்டுமல்ல தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு இரா.செழியன் மற்றும் திரு மூக்கையா தேவர்  என பலர் எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து 
வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை நிலவரைப்படத்தில் படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.

 இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

 1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. altஇராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. 

இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்ததஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” – என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.

#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2021.


Monday, June 28, 2021

#*கச்சத்தீவு விவகாரம்* #*kachchativu*



————————————
இதே நாள்,1974 ஜூன் 28 ஆம் நாள் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்காக முதல் ஒப்பந்தம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது.



கச்சத்தீவை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாதென அனைத்துக் கட்சி கூட்டத்தை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் நடத்தினார்.  தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தைப் பொருட்படுத்தாது அன்றைய இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது பல எதிர்ப்பலைகளை எழுப்பியது.







முதல் ஒப்பந்த்தில்,இந்திய பிரதமரோ இந்திராகாந்தி 26-6-1974இல் டில்லியில் கையெப்மிட்டார்,இலங்கை பிரதமரோ ஶ்ரீமவோ ஆர்.டி. பண்டாரநாயக்க அதில் 28-6-1974இல் கொழும்பில் வைத்து கையெழுத்திட்னர்.ஆனால் இறுதி இராண்டாம் ஒப்பந்தம் அதிகாரிகள் மட்டத்தில், இந்திய வெளிவிவகார செயலாளர் கேவல் சிங்,இலங்கை வெளிவிவகார செயலாளர் டப்ளியூ.டி  ஜெயசிங்கே கடிதங்கள், ஆவணங்கள் மாற்றுவழி 23-3-1976இல் இறுதி இவர்களின் கையெப்பமிட்டு,ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டு பிரதமர்கள் கையெப்பம்இடவில்லை.ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் பெறவில்லை.
  
இதேபோல் கச்சத்தீவு வழங்கும் இரண்டாவது ஒப்பந்தம் இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்போதும் இரு நாட்டு பிரதமர்கள் அதில் கையெழுத்து செய்யவில்லை.
தமிழகத்தில் ஜனசங்க முக்கிய தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணாமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.  இவையெல்லாம் 2007 இல் வெளியான எனது நூலான 'கனவாய் போன கச்சத் தீவு' என்ற  நூலில் மிக விரிவாக எழுதியுள்ளேன். இது குறித்தான பல முறை பதிவு சமூக வலைத்தளத்தில் உள்ளது.

இதே போலவே, தமிழக சட்டசபையின் ஒப்புதல் இன்றி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி - அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையேயான கடிதங்கள் மூலமாகவே தமிழக மேலவை கலைக்கப்பட்டது. இவை வரலாற்று சான்றுகள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2021.

https://www.facebook.com/146567318846976/posts/1566047296898964/?d=n

PV Narasimha Rao #பி_வி_நரசிம்மராவின்_நூற்றாண்டு_விழா

#பி_வி_நரசிம்மராவின்_நூற்றாண்டு_விழா
——————————————————-
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராகவும் இந்தியாவின் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பணிபுரிந்தவர். 

Tributes to former PM Shri PV Narasimha Rao Ji on his 100th birth anniversary.
He ushered in the era of  Economic Reforms. The first Prime Minister from South India, he was an accomplished ‘polyglot ‘ as he knew 17 languages.

ராஜீவ் காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் மசோதா, நகர்பாலிகா மசோதா இறுதியாக இவர் காலத்தில் 73-வது அரசியலமைப்புச் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. அதன் பயனாக இன்றைக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் பெண்கள், பட்டியலின மக்கள், பூர்வ குடிகளும் பொறுப்பேற்று நிர்வாகத்தில் இருக்கின்ற வாய்ப்பு கிட்டியுள்ளது.

நாடளுமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டு இவர் 
காலத்தில் அறிவிக்க பட்டது.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து, தனக்கு வழிநடத்த டாக்டர் மன்மோகன் சிங்கை இந்தியாவின் நிதியமைச்சராக நியமித்தார் நரசிம்மராவ்.
அந்தக் கட்டத்தில் பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக வேண்டியது. புதிய பொருளாதாரக் கொள்கையைப் படித்த, புரிதலுள்ள, அதை ஆய்வு நடத்திய பேராசிரியர் அளவில் இருப்பவர்கள் தேவைப்பட்டதால் நரசிம்ம ராவ் மன்மோகன்சிங்கை நிதி அமைச்சராக்கினார். பிற்காலத்தில் மன்மோகன் சிங் பிரதமரானார்.  

கிட்டத்தட்ட 17 மொழிகளுக்கு மேல் அறிந்தவர். தன்னுடைய வரலாற்றை தி இன்சைடர் (The insider) என்ற புதினமாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 

ஆந்திர அரசியலில்  ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். இவர் காலத்தில் தென்னட்டி விஸ்வநாதன், சென்னா ரெட்டி, சஞ்சீவி ரெட்டி, வெங்கல் ராவ் எனப் பல தலைவர்கள் இருந்தாலும், ஆந்திரத்தில் சிறப்பாக ஆட்சியை நடத்தியவர். 

இவர் காலத்தில்தான் ஆந்திரத்தில் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை துளிர்விட ஆரம்பித்தன. பிறகு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் ஜி பர்சியோடு இலங்கைக்குச் சென்று பணியாற்றி, இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளெல்லாம் கவனித்தது உண்டு.
1992-ல் இவர் பிரதமராக இருந்தபோது அவரைச் சந்தித்தேன். என்னுடைய உச்ச நீதி மன்ற வழக்கு கங்கை, காவிரி, வைகை, தாமிரபரணி, நெய்யாரோடு இணைக்கப்பட வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது அதை அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
நல்ல திட்டம் தான், நிறைவேற்ற வேண்டிய திட்டம் தான், நானும் ஆந்திரத்துக்காரன் தான் தமிழ்நாட்டைப் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், இன்றைக்கு பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றது. புதிய பொருளாதாரக் கொள்கைகளை நிலைநிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, பிற்காலத்தில் பார்க்கலாம் என்று அன்பாகவும் பாசமாகவும் அவர் குறிப்பிட்டதெல்லாம் உண்டு.

ராஜீவ் படுகொலைக்குப் பின் பல்வேறு சிக்கல்கள், பல்வேறு பிரச்சினைகள் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்தாலும், மிகவும் பொறுமையாக, அமைதியாக எடுத்துச் சென்றவர். ஒரு நல்ல பிரதமராக விளங்கியவர். அவர் மீது எதிர்வினைகளும் விமர்சனங்களும் இருந்தது.

1979, 80 என்று நினைவு. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முடிவுகளை இந்திரா அவர்கள் எடுத்த போது, அந்த முடிவு உகந்ததல்ல என்று பழ. நெடுமாறன் டெல்லியில் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் துளசி அய்யா வாண்டையார், அன்றைய எம்.எல்.சி தம்பி தோட்டம் சுந்தரேச தேவர் போன்றவர்கள்ளோடு
இந்திராவைச் சந்தித்து கூறிவிட்டு தொடர்ந்து அதற்காக குரலெழுப்பிக் கொண்டிருந்த போது, நெடுமாறனை சமாதானம் செய்ய நரசிம்மராவை சென்னைக்கு அனுப்பினார். அப்போது நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த நரசிம்மராவைச் சந்திக்க பழ. நெடுமாறனோடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகுவுடன் சென்றபோது பழ. நெடுமாறனின் கருத்துக்களை அமைதியாக நரசிம்மராவ் கேட்டு பல விளக்கங்களை அளித்து, காங்கிரசில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரிபாதி வேட்பாளர்களை நெடுமாறனே முடிவு செய்யலாம் என்ற வாக்குறுதியை அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரசில் நெடுமாறன், மூப்பனார் என்ற  பிரச்சனைகளும் இருந்தன. ஆனால், நெடுமாறன் நரசிம்மராவிடம் எனக்கு 50% வேட்பாளர்களை தேர்வு செய்யும் உரிமையை கொடுத்தது நன்றிதான். ஆனால், எனக்கு அது முக்கியமல்ல. எதிர்கால சில அரசியல் நலன்களை மனதில் கொண்டு நான் சொல்லும் விசயத்தை பரிசீலனை செய்யுங்கள் என்று தொடர்ந்து வாதிட்டார். இதை கண் முன்னால் இருந்து பார்த்தவன் என்ற நிலையில் இங்கு பதிவு செய்கின்றேன். 

அதன்பின்னர், 1984இல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவமனைக்கு ஒரு மாலைப் பொழுதில் 7 மணியளவில் வந்தார். அப்போது, நெடுமாறன், பாரமலை அடியேன் போன்றவர்கள் எல்லாம் இருந்தோம். ஜெயலலிதா, சத்தியவாணி முத்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்றைய அமைச்சர்கள் கே.ஏ. கிருஷ்ணசாமி, எச். வி. ஹன்டே போன்றோர்களெல்லாம் இருந்தோம். சோர்வாக எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு வெளியே வந்து நெடுமாறனைப் பார்த்து அருகே வந்து, "How are you Mr. Nedumaran? After a long time." என்று கேட்டுவிட்டு தனக்கே உரித்தான இயல்பான சிரிப்போடு சென்றார். 

தனது புத்தகமான *The Insider* இல் ஆந்திர அரசியலைப் பற்றியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களான பிரகாசம், நீலம் சஞ்சீவரெட்டி, பிரம்மானந்த ரெட்டி, லட்சுமிகாந்தம்மாள், சென்னா ரெட்டி, வெங்கல் ராவ், தென்னட்டி விஸ்வநாதன் போன்ற பல தலைவர்களுடைய பாத்திரங்களை வைத்து ஒரு புதினமாக ஆங்கிலத்தில் படைத்து 1998இல் வெளியிட்டுள்ளதை படிக்க சுவாரசியமாக இருக்கும்.

Remembering Shri PV Narasimha Rao Ji on his 100th birth anniversary. He is the man who remade India and laid the foundations of economic reforms in our country. He led the country during crisis.

Centenary of Sri P V Narasimha Rao. The prime minister who unshackled the Indian economy. Narasimha Rao was one of the 'old guard' of the Congress party, close to the Gandhi family. He was unique in being a Congress leader who was comfortable with  computers at a time when the socialist minded Indian leaders considered computers to be an evil that will drain way the labour of India. Once Rao became prime minister he began a long and arduous process of freeing the Indian economy from its socialist shackles and the Congress party from its self-imposed shackles that connected it to the Nehru-Gandhi family. Rao was successful in the first. His failure to liberate the Congress cost him a place in history. He had to face the ignominy of being ignored by his own party at his death. In the years that followed, the Congress tried to wipe out his very memories. Pic. shows Narasimha Rao with the person he chose to execute his designs for liberating the Indian economy from socialism.

#PVNarasimhaRao

...

#பி_வி_நரசிம்மராவ்
#ஆந்திர_அரசியல்
#ஆந்திர_பிரதேசம்
#தெலுங்கானா
#பிரதம_மந்திரி
#தகுதியே_தடை
#p_v_narasimha_rao
#Andhra_Politics
#Andhra_Pradesh
#Telengana
#Prime_Minister
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2021.


மேதகு…

#தம்பி_பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கை படத்திற்கே பல சிரமங்களை தாண்டி படம் வெளியானது 

இனி வரும் தொகுதியில் தற்போது உயிருள்ள பலரும், இறந்த பல தமிழகதலைவர்களின் சந்திப்புகளை காட்சிப்படுத்துவது சற்று சிக்கலான  விடயம்…
பாராட்டுக்கள்….
வாழ்த்துக்கள்.. 

#மேதகு

#ksrpost
28-6-2021.


இந்தியாவின்15வதுநிதிக்குழு, தன் 2021-26ம் ஆண்டுக்கான அறிக்கையில்,

#இந்தியாவின்15வதுநிதிக்குழு, தன் 2021-26ம் ஆண்டுக்கான அறிக்கையில், 2021-22 முதல், 2024 – 25ம் ஆண்டு வரையிலான, முதல் நான்கு ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு - மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில், 0.05 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான வழிவகைகளை பரிந்துரைத்துள்ளது.

நிதிக்குழுவானது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டிற்கு, நிகர கடன் பெறுதலுக்கான வரம்பினை, 2021 - 22-ம் ஆண்டு நான்கு சதவீதம்; 2022 -23க்கு 3.5 சதவீதம்; 2023 - 24 முதல் 2025-26 வரை 3 சதவீதம் என பரிந்துரைத்துள்ளது

#ksrpost
28-6-2021.

#தி_ஜானகிராமனின்_நூற்றாண்டு_விழாஇன்று(28-6-2021)

#தி_ஜானகிராமனின்_நூற்றாண்டு_விழாஇன்று(28-6-2021)
———————————————————-
கல்லூரியில்1970-களில் படிக்கும்போது மதுரை மீனாட்சி பதிப்பகம் திரு செல்லப்பன்  வெளியிட்ட தி.ஜாவின் அக்பர் சாஸ்திரி சிறுகதை தொகுப்பு பாட நாலாக இருந்தது. அதைப்படிக்கும் பொழுதுதான் தி.ஜா மீது ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது. 

அப்போது, ஒரு சமயம் மதுரை சென்றபோது மேலக்கோபுர வாசல் தெருவிலிருந்த சென்ட்ரல் டாக்கீஸ் அருகிலிருந்த மீனாட்சி பதிப்பகத்தில் அக்பர் சாஸ்திரி 20 பிரதிகளை வாங்கி நண்பர்களுக்கு பரிசாக அளித்த நினைவுகளெல்லாம் இருக்கின்றன. அப்படி ஒரு ஈர்ப்பு அவர் எழுத்தின் மீது இருந்தது.  தஞ்சாவூரில்  நடந்த திருமணத்தில் ஒரு முறை 1976 இல்  இவரை பார்ததுண்டு.



 
ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு.

தி. ஜா பிறந்த ஊர் தேவங்குடிதான்.
அம்மாவின் சொந்த ஊரில்தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அதுதான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர் தஞ்சை ஜில்லா
அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன்செட்டில்ஆகியிருக்கிறார்.
அதனால் தி. ஜா வின் பால்யமெல்லாம் தஞ்சையில்தான் பள்ளிப்படிப்பு காலம்.
கல்லூரிப் படிப்பு கும்பகோணத்தில்.
தஞ்சையில் தி. ஜா வின் தகப்பனார் பிரவச்சனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட் வால்மீகிராமாயணத்தைசமஸ்கிருதத்திலிருந்து வரி, வரியாக விளக்கி தமிழில் ஹரி கதா செய்வதுதான் பிரவச்சனம்.
ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார். 

தி.ஜானகிராமன் அண்ணன் பெயர் ராமச்சந்திரன். அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட்.வேத பாடசாலையில் சமஸ்கிருதமும் படித்தவர். இந்த தமிழ் பண்டிட்.ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன்தான்.
'கமலம்' குறுநாவல் தொகுப்பை, "இந்த குறுநாவல்களில்  ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம்” என்று குறிப்பிட்டிருந்தார். மீனாட்சி பதிப்பகம் வெளியிட்டபோது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது.

இந்த ராமச்சந்திரன் நிலபுலன்களுடன் வாழ்ந்த ஊர்தான் 'கீழவிடயல் சுருப்பூர்'. அன்றைய  தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர் முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில்தான் செட்டில் ஆனார்கள்.

ஜானகிராமன் டெல்லியில் இருந்த காலத்தில்   இந்த கீழ விடயல் கருப்பூருக்குத்தான் பெற்றோரைக் காண்பதற்கு வர வேண்டியிருந்தது.
ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர்தான்.

ஜானகிராமன் டெல்லி போகுமுன் சென்னை மயிலாபபூர் ராக்கியப்ப முதலி தெருவில் குடியிருந்தார். 

சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.
தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்
போன்றவற்றை எழுதியவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.பின்னர் தமிழின்முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாதஇதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்…..

இறக்கும்போது சென்னை திருவான்மியூர் வீட்டு வசதி வாரியம் வீட்டில் குடியிருந்தார்.தி.ஜானகிராமன் இறந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டுதான் இறக்க வேண்டிய வயதா? ஆனால் ஜானகிராமன், "வயசானா இருக்கக் கூடாது. அறுபது வயதுக்கு மேல் இருக்கக்கூடாது" என்று அடிக்கடி சொல்வாராம்.

#அக்பர்_சாஸ்திரி
—————————————
மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில்
மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே
நகர்த்தி என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
வெறுமனே சாப்பிடவில்லை. உருளைக் கிழங்கு ஒட்டிக் கொண்டிருந்த விரல்களை
ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது குரல்! தொண்டைக்குள் வெண்கலப்
பட்டம் தைத்த குரல், அதிகாரமும் வயசான பெருமையும் எக்களித்துக் கொண்டிருக்கிற
குரல்.
”எக்ஸைஸ் இலாக்கான்னா என்ன டெஸிக்னேஷன்?’ என்று எக்களிப்பும்
அழுத்தமுமாக இந்தக் குரல் போட்ட கேள்விக்கு, அடக்கமும் புன்சிரிப்புமாக என்னமோ
மேலதிகாரிக்குப் பதில் சொல்லுகிறார்போல் ”சூப்ரிண்டு” என்றார் மேலண்டைக்
கோடியில் இருந்தவர்.
சீர்காழி ஸ்டேஷனில் ஏறி உட்கார்ந்திருந்த என்னை லட்சியமே செய்யாமல் ரயில்வே
கைடுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த இந்த ஆசாமிக்குப் புது ஆசாமியைக்
கண்டு என்ன மரியாதை! என்ன வினயம்!
எதிரே ‘சூப்ரிண்டு’ மனைவி காலை நீட்டிப் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்தவள்
கண்ணைத் திறந்து ஒரு தடவை பார்த்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டாள்.
காலடியில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் இரண்டும் உருளைக்கிழங்கு
சாப்பிடுகிறவரையும் அவருக்குப் பதில் சொல்லுகிற அப்பாவையும் மாறி மாறிப்
பார்த்துக் கொண்டிருந்தன.
”எங்கிருந்து வறீர்?”
”மெட்ராஸிலேருந்து!”
”பகல் வண்டியிலே மெட்ராஸிலேயிருந்து யாராவது வருவாளோ?”
”இல்லை, நேத்து ராத்திரிப் புறப்பட்டேன். கடலூரிலே இறங்கி, என் மருமாளுக்கு
உடம்பு சரியில்லேன்னா, பாத்துட்டு இன்னிக்கு மத்தியானம் கிளம்பினோம்.”
”எதுவரையில் பயணம்?”
”தஞ்சாவூருக்கு. தாயாருக்கு உடம்பு சரிப்படலே. பார்க்கப் போறோம்.”
”அப்படியா? ம்!” என்று எழுந்து இலையை ஜன்னல் வழியாக வீசி எறிந்தார் வந்தவர்.
காற்று வாக்கில் இலை என் மேல் பறந்து விடப் போகிறது என்ற கதவோராமாக இருந்த
நான் சற்று உள்ளே நகர்ந்து கொண்டேன். வண்டி அப்போது ஸ்டேஷனை விட்டுக்
கிளம்பி லெவல்-கிராஸிங்கைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.
அவர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே கையலம்பப் போனார்.
நடுவே நகர்த்தப்பட்டிருந்த தோல் பையையும் துணிப் பையையும் நகர்த்திக் கொண்டு
காலியான என் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். கையலம்பி விட்டு வாயைத்
துடைத்துக் கொண்டவர் இடத்தை மீட்டுக்கொண்ட என்னை அலட்சியமாகப் பார்த்து
விட்டு நடுவில் உட்கார்ந்து கொண்டார்.
ஆள் ஆறடி உயரத்துக்குக் குறைவில்லை. இரட்டை நாடியில்லை. ஆனால்
ஒல்லியுமில்லை – சாட்டை மாதிரி முறுக்கு ஏறிய உடம்பு. நேரான உடம்பு.
உட்கார்ந்திருந்த போது கூட வளையா நேர் முதுகு. கறுப்பில்லை. மாநிறமுமில்லை.
அப்படி ஒரு கறுப்பு. சந்திர வளைய வழுக்கையில் ஓரம் கட்டியிருந்த தலைமயிர்
முழுவதும் நரைத்திருந்தது. நீள மூக்கு, நீளக் கை, கால். குரலில் தெறித்த அதிகாரத்துக்
கேற்ற உடம்புதான்.
உட்கார்ந்து கொண்டவர் ”நீ போடா கிறுக்கு, சின்னப் பையா!” என்ற சொல்லாமல்
இலேசாக எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து விட்டார்.
”ம்… தாயாரைப் பார்க்கப் போறீராக்கும்? என்ன விசேஷம்?”
”போன மாசம் உடம்பாகக் கிடந்தா. அப்பப் போய்ப் பார்க்க முடியலே, எனக்கும்
இப்பத்தான் லீவு கிடைச்சுது. நீங்க…?” – அதே அடக்கம், புன்னகை.
”நானா? எனக்கு மதுரை. கோவிந்த சாஸ்திரின்னு பேரு. அட்வகேட்டாயிருக்கேன்.
ஒரு கேஸ் விஷயமா பட்டணம் போயிட்டுவரேன். மாயவரத்தில் எங்க சகோதிரியைக்
கொடுத்திருக்கு. இறங்கிப் பார்த்துட்டு வரேன். முதல் கிளாஸ்லே டிக்கட் கிடைக்கல்லே.
‘சகிண்ட்’ கிளாஸ்தான் இருக்குன்னான். வாங்கிண்டுவந்து ஏறிட்டேன். ராத்திரி
சாப்பிடறதில்லே. பலகாரம் பண்றேனே அண்ணான்னா தங்கை. அடி போடி
பைத்தியம்னு வந்துட்டேன். பூரி இரண்டு வாங்கினேன். சாப்பிட்டேன். ஒண்டி ஆளுக்காக
பலகாரம் பண்ணச் சொல்லவாவதுய்ய! இப்ப என்ன செத்தா போயிட்டேன்!” என்று
சொல்லிக் கொண்டே கோவிந்த சாஸ்திரி வண்டியைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டார்.
குழந்தைகளைப் பார்த்தார்.
”உம்ம குழந்தைகளா?”
”ஆமாம்?”
”என்ன வயசாகிறது?”
”அவன்தான் பெரியவன். பத்து ஆகிறது. இவ சின்னவ இப்ப ஏழு நடக்கிறது.”
”மலேரியா அடிச்சுக் கிடந்தாப்ல இருக்க ரண்டும். எலே இங்கே வா… வாடா…
பரவால்லே, வா… ஒண்ணும் பண்ணலே.”
பையன் வந்து நின்றான். குச்சி குச்சியாக இருந்த கையைப் பிடித்தார் கோவிந்த
சாஸ்திரி. கை முழுவதையும் ஒருமுறை தடவினார்.
”நாக்கை நீட்டு, கண்ணைக் காட்டு.”
”அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பிடவே மாட்டான். சாப்பிட உட்கார்ந்தான்னா,
பருப்பு நன்னாலே, நெய் நாத்தம் அடிக்கிறது – இப்படி ஏதாவது சொல்லி எழுந்திண்டு
போயிடுவான்” என்றார் கோடி ஆசாமி.
”சட்டையைத் தூக்கு.”
பையன் சட்டையைத் தூக்கி வயிற்றைக் காண்பித்தான். அதை ஒரு அழுத்து
அழுத்தி ”ம்” என்ற வண்ணம் அவனைப் பார்த்தார்.
”ஏண்டா! முழங்கால், முழங்கையெல்லாம் இப்படி எலும்பு முட்றது? கண்ணு
சுண்ணாம்பா இருக்கு. நித்தம் ஒரு முட்டை கொடுமையா.”
”எல்லாம் பார்த்தாச்சு. எதையும் தொட மாட்டேங்கறான் சார்.”
”காட்லிவர் ஆயில்.”
”அதுவும் கொடுத்துப் பார்த்தாச்சு.”
”காட்லிவர் ஆயிலை ‘மால்டா’க் கொடுக்கிறது, தித்திப்பாயிருக்கும்.”
பார்க்கணும்.”
கோவிந்த சாஸ்திரி இன்னும் கையை விடவில்லை பார்வையையும் எடுக்கவில்லை.
”இல்லாட்டா ஒண்ணு செய்யறீரா இவனுக்கு?”
”என்ன?”
”கொள்ளு தெரியுமா கொள்ளு”
”…..?”
”குதிரைக்கு வைப்பாளேய்யா அது.”
”ம் ம்.”
”அதைத் தினமும் இவ்வளவு எடுத்துத் தண்ணியை விட்டுக் கொதிக்க வைச்சு,
அந்தத் தண்ணியைச் சாப்பிடச் சொல்லும். அப்புறம் அந்தச் சுண்டலையும் கொஞ்சம்
உப்பைப் போட்டுச் சாப்பிடச் சொல்லும். பையன் அரபிக் குதிரை மாதிரி ஆறானா
இல்லையா, பாரும். இப்ப நான் எங்க வீட்டுக்கு அழைச்சிண்டு போய் மூணு மாசம்
கொடுத்தேன்னா, அப்புறம் உம்ம பையன் தான் இவன்னு நான் சத்தியம்
பண்ணினாலொழிய உம்மாலே நம்ப முடியாது. என்ன! செய்யறீரா?”
அதட்டுபவர் போலக் கேட்டார் சாஸ்திரி.
”செய்யறேன்.”
”இதோ பாரும், நான் டாக்டர் இல்லே. அதுக்குப் படிச்சுக் கிடிச்சு பாஸ் பண்ணலே.
ஆனா எங்க வீட்டிலேருந்து போற மருந்துகளும் அங்க வரவாளும் கணக்கு வழக்கு
இல்லே. எல்லாம் கடசீலே பாட்டியம்மா வைத்தியம். கருவேப்பிலைக் குழம்பு வச்சுப்
பத்து நாள் வட்டம் சாப்பிடுவேன். ஏழுநாள் வட்டம் வேப்பம் பூவைச் சாதத்து மேலே
வச்சு ஆமணக்கெண்ணெயைக் காய்ச்சி அது மேலே ஊத்தச் சொல்லிப் பிசைஞ்சு
சாப்பிடுவேன். நீர் நம்பமாட்டீர். இதுவரை டாக்டருக்குன்னு ஒரு தம்பிடி? பேசப்படாது.
பெரியவா புண்ணியத்திலே பத்துக் காணி நிலம் இருக்கு. ஆனால் அதிலேருந்துஒரு
நெல்லு வித்த காசு டாக்டருக்குப் போனதில்லை.”
”நல்ல புண்ணியம் பண்ணினவா நீங்க. ஹி ஹி ஹி.”
”புண்ணியமாவது, புடலங்காயாவது. எல்லாம் நம்ப மனோபலத்தைப்
பொருத்திருக்குதய்யா.”
”என்னமோ சார்! நான் தலையெடுத்த நாளையிலேருந்து பாருங்கோ. டாக்டர் வராத
நாள் கிடையாது. இதைப் பாருங்களேன். நீங்கள் தான் பார்க்கறேளே, எதிர்த்தாப்பல
கிழிச்ச நார் மாதிரி படுத்துண்டு கிடக்கா, கடலூர்லே வண்டி ஏறினோம், படுத்துண்டா.
இன்னும் ஏந்திருக்கலே. புருஷா முன்னாடி நிக்கமாட்டா அந்த நாள்ளே. அவளேதான்
இப்படி ஆயிட்டா. என்னத்தைப் பண்றது?” என்று மனைவியைப் பார்த்தார்.
‘சூப்ரிண்டு’.
சூப்ரிண்டு மனைவி இலேசாகப் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.
”என்ன உடம்பு?”
அந்தக் காலத்திலே பம்பரமாக சுத்தி வந்து காரியம் பண்ணின்டிருந்தவ. திடீர்னு ஒரு
நாளைக்கு வயத்தை வலிக்கிறதுன்னா. டாக்டர் வயத்திலே கட்டி, ஆபரேஷன்
கேஸுன்னார். செஞ்சுது. அது தேவலையாச்சு. அப்புறம் பிரமை புடிச்சாப்பல எது
கேட்டாலும் பதில் சொல்றதில்லே. அப்படி நாலு வருஷம் உட்கார்ந்திருந்தா. அதுக்கு
வேற ஊசி, மாத்திரை கொஞ்சமில்லை. அது தேவதையாப் போயிடுத்து. இப்ப பத்து
வருஷமா தினம் போது விடிஞ்சா தலைவலி, கால் துணியாப் போயிடறது. எழுந்து
நடமாட முடியலே. காப்பி சமையல் முதல்கொண்டுகூட, நான் நிக்க வேண்டிருக்கு.”
சூப்ரிண்டு மனைவி கண்ணை மூடாமல் இதைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
”வாரா வாரம் எண்ணெய் தேச்சுக்கணும்” என்றார் கோவிந்த சாஸ்திரி.
”எண்ணெயா! ஒரு முட்டைத் தலையிலே வச்சாப் போரும், ”ஐயா கடப்பாறை
போட்டு இடிக்கிறதே இடிக்கிறதே’ன்னு அலற ஆரம்பிச்சுடுவா. எண்ணெய்தான் சத்ரு
அவளுக்கு.”
”என்னய்யா ஆச்சரியம்! எண்ணெய் ஒத்துக்காத ஒரு மனஷா உண்டோ?
நல்லெண்ணெய் தலைவலிக்குப் பரம சஞ்சீவி ஆச்சேய்யா.”
”எண்ணெயைத் தவிர மீதி எது வேணும்னாலும் சொல்லுங்கோ. போடாத ஊசியில்லை.
குடிக்காத மருந்து இல்லே. இந்தத் தலைவலி நின்னாப் போரும்” என்று படுத்தவாறே
வாயைத் திறந்தாள் சூப்ரிண்டின் மனைவி.
பேச ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது வயதுக்கு மீறிய மூப்பு. முகத்தில் சோகை,
வாயில் குழறல். அழகாக இருந்த அம்மாள் இப்போது விகாரமாக மாறிவிட்டிருந்தாள்.
”தலைவலியைத்தானே நிறுத்தணும்?” என்று கேட்டு விட்டு வெளியே பார்த்தார்
கோவிந்த சாஸ்திரி.
வண்டி குத்தாலத்தில் நின்றது. ஒரு அணாவுக்கு வேர்க்கடலையை வாங்கி மென்றவாறு
யோசனையில் ஆழ்ந்திருந்தார் அவர். வண்டி புறப்பட்டதும் தம் பேச்சை ஆரம்பித்தார்.
”சொல்லட்டுமா?” என்று அவர் ஆரம்பித்ததும், அவசரம் அவசரமாக புஷ்கோட்
பையிலிருந்த ஒரு டயரியையும் பென்சிலையும் எடுத்து வைத்துக்கொண்டார்.
‘சூப்ரிண்டு’.
”எழுதிக்கிறீமா? சரி வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கசகசா, சுக்கு…”
இன்னும் நாலைந்து சொன்னார் அவர். எனக்கு அது மறந்துவிட்டது.
”இதையெல்லாம் பால்லே போட்டு ஊறவச்சு நசுக்கி அம்மியிலே ஒட்டி உருண்டை
உருண்டையாகப் பண்ணிக் காய வச்சுக்கிறது. அப்புறம் நித்தியம் காலமே ஒரு
உருண்டையைப் பால்லே கலந்து தலையிலே தேச்சு ஸ்நானம் பண்ணச்சொல்லும், ஒரு
மாசத்துக்கப்புறம் எனக்கு எழுதும்.”
அமிருதம் கிடைத்த மாதிரி சூப்ரிண்டு எழுதிக்கொண்டு நாலு தடவைகள்
சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து, டயரியைத் திருப்பித் திருப்பி வாசித்துப் பையில்
போட்டுக் கொண்டார்.
”இதுதான் கல்கம். எல்லாக் ‘கம்ப்ளெய்ண்டு’க்கும் சேத்திருக்கேன் அம்மா! உங்க
தலைவலி இன்னியோட தீந்தது” என்றார் சாஸ்திரி.
அந்த அம்மாள் எழுந்து உட்கார்ந்து, ”அதை இன்னொரு தடவை நன்னாக் கேட்டு
வச்சக்குங்கோ” என்றாள் தன் புருஷனைப் பார்த்து.
சாஸ்திரி இன்னும் பல ரகசியங்களையெல்லாம் சொன்னார். சொறி சிரங்கு, சீதபேதி,
ஆஸ்துமா, பாலுண்ணி – இப்படிப் பல வியாதிகளுக்கு அவரிடம் சஞ்சீவிகள் இருந்தன.
சூப்ரிண்டின் கண்கள் மேலே அகல இடமில்லை. அப்படி ஒரு வியப்பு. தன்வந்திரி,
சித்தர்கள் – எல்லாரும் அவர்மேல் கருணைகொண்டு இரண்டாம் வகுப்பில் சக
பிரயாணியாக வந்து காட்சி கொடுத்து வினை தீர்த்த பரவத்தை அவருடைய
மரியாதையிலும் அடக்கத்திலும் காண முடிந்தது.
”இத்தனைக்கும் நான் டாக்டர் இல்லே” என்றார் சாஸ்திரி மீண்டும். ”
எனக்கு வயசு எத்தனை இருக்கும்? எங்கே? சொல்லும், பார்ப்போம்.”
வியப்பில் ஆழ்ந்து கிடந்த ‘சூப்ரிண்டு’ தயங்கிப் புன் சிரிப்புச் சிரித்தார்.
”சும்மாச் சொல்லும்?”
”ஐம்பது இருக்கும்.”
”ஐம்பதா? எனக்கு அறுபதாம் கலியாணம் ஆகியே எட்டு வருஷங்கள் ஆச்சய்யா.”
”அறுபத்தெட்டா? உங்களுக்கா!”
முதுகைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் நம்பத் தான் முடியவில்லை.
”பின்னே என் பெரிய பொண்ணுக்கே இப்ப வயசு நாப்பத்தஞ்சு. அவ பிள்ளை
‘அக்கெளண்ட்ஸ்’ ஆபீசரா முந்தா நாள்தான் வேலை ஒத்துண்டிருக்கான்.
என் பெரிய பையனுக்கு வயசு நாற்பது முடிங்சுடுத்து… நீர் மாத்திரம் இல்லை,
பார்க்கறவா ஒவ்வொருத்தருமே இப்படித்தான் ஆச்சரியப் பட்டுண்டிருக்கான்னேன்.”
”ஏ, அப்பா!” என்று அவரையே ஒரு நிமிஷம் பார்த்து ‘சூப்ரிண்டு’ புன்சிரிப்புப்
பூத்துக்கொண்டிருந்தார். ”நீங்கள்ளாம் அந்தக் காலத்து மனுஷா.”
”யாரு? நன்னாச் சொன்னீரே, எந்தக் காலத்திலேயும் முடியும் யா!” திடீரென்று
கோவிந்த சாஸ்திரி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். குரலும் தணிந்தது. ”ரகசியம்
என்ன தெரியுமா? எட்டாவது குழந்தை பிறந்தது. என் சம்சாரத்தைப் பார்த்தேன். என்ன
சரிதானேன்னேன். சரின்னூட்டா. அதிலேருந்து ஒதுங்கிப்பிட்டோம். அப்ப எனக்கு
முப்பத்தெட்டு வயசுதான்.”
”அப்படியா!”
‘அப்படியேதான். எங்க அப்பா அம்மா செஞ்ச தப்பையும் உணர்ந்துனுட்டேன்.
எனக்குப் பதினேழு வயசிலே கலியாணம் பண்ணி வச்சாளே… அதெச் சொல்றேன்.
என் பிள்ளைகளுக்கெல்லாம் முப்பது வயசிலேதான் கலியாணம் பண்றது. பெண்களுக்கு
இருபத்திரண்டு வயசுக்கு அப்பறம்தான் கல்யாணம் பண்றதுன்னு தீர்மானம்
பண்ணிண்டேன். அப்படியே நடத்திண்டும் வரேன். நீர் பார்க்கிறது எனக்குப் புரியறது.
என்னடாது ஒரு பக்கம் சுக்குக் கஷாயம், கருவேப்பிலைக் குழம்புன்னு ரொம்பப்
பாட்டியா இருக்கான், இன்னொரு பக்கம் பார்த்தா ரொம்ப ”அல்ட்ரா” வா
இருக்கானேன்னு நினைக்கிறீர். உண்டா, இல்லியா?”
”ஆமாம் ஆமாம். ஹி ஹி ஹி.”
”அதனாலேதானே என் சம்பந்தி என்னை அக்பர் சாஸ்திரி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்…
ஏன்னேன். அக்பர் சக்கரவர்த்தி எப்படியிருந்தான்? உலகத்திலே இருக்கிற
நல்லதெல்லாம் சேர்த்துக் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திண்டான். அந்த
மாதிரி நீங்களும் இருக்கேள்ன்னார் அவர்.
பெண்களுக்குக் கலியாணம் பண்ணினேன். புள்ளைகளுக்கும் பண்ணினேன். முதல்
காரியமா ஊர்வலத்தை நிறுத்தினேன்.
அந்தக் காலத்திலே பத்து வயசிலே கலியாணம் பண்ணினா, திருஷ்டி பட்டுடப்
போறதேன்னு குழந்தைகளை வைச்சு ஊர்கோலம் எடுக்கறது. இப்பப் புள்ளைக்கு
முப்பது வயசு, பெண்ணுக்கு இருபத்தஞ்சு. ஊர்வலமாவதுய்யா? இரண்டாம்
பெண்ணுக்குக் கலியாணம் பண்றபோது ஒரு கிழவி வந்தா.
‘என்னாங்காணும் ஊர்வலம் இல்லேன்னுட்டீராமே’ன்னா.
‘ஊர்வலமா, உன்னை வாணா வச்சு நாலு தெருவிலேயும் சுத்தச் சொல்றேன்’னேன்.
அப்புறம் ஏன் பேசறா?…ஆ! நம்ம தாத்தாவும் அப்பாவும் பண்ணினாங்கறதுக்காக
எல்லாத்தையும் செஞ்சுற முடியுமோ?
காலே காலே நம்ம புத்தியை உபயோகிக்சு மாத்தாட்டா நாம் என்ன மனுஷாளா?
மிருகங்களா? ஒரு உதாரணம் சொல்றேன். புருஷா சாப்பிட்ட அப்புறம்தான் பெண்டுகள்
சாப்பிடறதுன்னு வச்சிண்டிருக்கோமே? அது எதிலேய்யா எழுதிருக்கு? உனக்குச்
சமைச்சும் கொட்டிப்பிட்டு, மீதியிருக்கிற அடி வாண்டலெல்லாம் அவ தனியா
சாப்பிடணுமோ? என்ன நியாயம்யா?
”எங்க வீட்டிலே என்ன பழக்கம் தெரியுமோ? நானும் சம்சாரமும் சேர்ந்துதான்
சாப்பிடுவோம். வீட்டுக்கு யார் வந்தாலும் சரி… குழந்தை குஞ்சு பெண்டுகள்
எல்லாரையும் சேர்த்து உட்கார்த்தி வைச்சித்தான் சாப்பிடுவேன். அவாளோட என்
சம்சாரத்தையும் உட்கார வைச்சுப்பிடுவேன்.
கும்பகோணத்திலே மூணாவது சம்பந்தியிருக்கார். ஜவுளிக் கடை வச்சிருக்கார்.
சக்ரபாணி அய்யர்னு. அவர் நான் இப்படியேல்லாம் இருக்கறதைப் பார்த்துப்பிட்டு ஏதோ
பரிகாசமா பேசினாராம்.
நான் சொல்லிப்பிட்டேன், ‘சார்! இத பாருங்ககோ, நான் உங்க வீட்டுக்கு வந்தா
இந்த மாதிரி சேத்து வச்சுத்தான் போடணும்; இல்லாட்டா வரவேயில்லேன்’னேன்.
அப்புறம் வழிக்கு வந்தார்.
இத்தனை வயசுக்கு மேலே இந்தக் கிழவனுக்குச் சபலத்தைப் பாரும்னு யாராவது
சொல்லிண்டிருப்பன். சொல்லட்டுமே, இதுக்கெல்லாமோ பயந்து முடியும்? முப்பத்தெட்டு
வயசிலேருந்து நான் எப்படியிருக்கேன்னு எனக்குன்னாய்யா தெரியும்!
எல்லாரோடும் உட்கார்ந்து சேர்ந்து சாப்பிட்டு, ஒரு மணி நேரம் எல்லாரையும்
பக்கத்திலே வச்சிண்டு கலகலன்னு பேசி சந்தோஷமா இருக்க முடியலேன்னா
அவன் என்ன ஆள்? ஐயா! யார் என்ன சொன்னாலும் சரி, நான் அப்படித் தான்
இருப்பேன். இருந்துண்டு வரேன். அதனாலேதான் அறுபத்தெட்டு வயசுன்னவுடனே நீர்
பிரமிக்கிறீர்.
நான் மாத்திரம் இல்லே. என் சம்சாரம் குழந்தகளெல்லா இப்படித்தான் இருப்பா.
டாக்டருக்குன்னு காலணா கொடுத்ததில்லையா! சத்தியம் வேணும்னாலும் பண்ணத்
தயார். போதுமா?” என்றார் சாஸ்திரி.
சத்தியமே பண்ண வேண்டாம். உங்களைப் பார்த்தாலே போதும் என்று
நினைத்துக்கொண்டேன். என்னை இவர் லட்சியம் பண்ணாவிட்டால் என்ன?
பேசாவிட்டால் என்ன? அக்கறையில்லை. இந்த வயசில் இவ்வளவு நேர் முதுகு –
கணார் கணார் என்று இந்தக் குரல். டாக்டருக்கு ஒரு நெல்கூடக் கொடுக்காத
பத்துக்காணி – ஏ அப்பா.
எதிரே சூம்பின கையும் காலுமாக இரண்டு குழந்தைகள். துணியாகக் கிடந்த
‘சூப்பிரண்டு’ மனைவியின் சோகை பாய்ந்த உடல், ‘சூப்பிரண்டி’ன் முகத்தில்
நிரந்தரமாகக் கோடிட்டுவிட்ட குடும்பக் கவலை.
இத்தனைக்கும் நடுவில் அக்பர் சாஸ்திரி சித்த புருஷர்கள் அரைக்கைச் சட்டையும்
வேஷ்டியும் அணிந்து வந்ததுபோல் உட்கார்ந்திருந்தார்.
அவருக்குப் பின்னால் வயிற்றுவலி – அதாவது நான். என்னை மூன்று வருஷங்களாக
எனக்கும் அவளுக்கும் ராத்தூக்கம் வராமல் கண்
பனிக்கப்பனிக்க இருமுகிற வாதையையும் சொல்லு சொல்லு என்றது.
சொல்லுகிறேன் சொல்லுகிறேன் என்று அவற்றைச் சமாதானப்படுத்திக்
கொண்டிருந்தேன்.
திடீர் என்று எப்படிச் சொல்கிறது? முன்னால் இரண்டு வார்த்தையாவது
அவருடன் பேச வேண்டும். அதற்குச் சமயம் கிடைக்காமலா போகும்?…
”மதுரைக்கு எப்பவாவது வந்தீர்னா, வீட்டுக்கு வாரும். சந்தோஷமா எப்படியிருக்கிறது,
திடகாத்திரமா எப்படி இருக்கிறதுன்னு புரியும். டாக்டரை எப்படி அண்ட விடாமல்
வாழறதுன்னு தானே புரிஞ்சுக்குவிர். பயந்திண்டு வராம இருந்துடாதீர். அதுக்காக
வந்தவர்களுக்குக் குளிக்க வெந்நீர் போடாமல் இருந்துட மாட்டோம். என்னோடத்தான்
நீரும் எழந்திருக்கணும்னா காலமே நாலு மணிக்கே எழுப்பிட மாட்டேன்.
கவலைப்படாதீர் என்ன, வறீமா?”
”கட்டாயம் வரேன்.”
”உம்ம சம்சாரத்தையும் அழச்சிண்டு வரணும். என்ன வறீமா?”
எனக்கும் அக்பர் சாஸ்திரி வீட்டுக்குப் போகவேண்டும் போல் தானிருந்தது.
கூப்பிட்டால்தானே? மனுஷன் தற்செயலாகக்கூடத் திரும்பமாட்டார் போலிருக்கிறது.
ஓர இடத்தைக் கொடுக்கவில்லை என்று மனுஷனுக்கு வருத்தமோ?
திருவிடைமருதூர் ஸ்டேஷன் வந்தது. ”மகிழமாலை விற்குமே இங்கே?” என்று
எழுந்தார் அக்பர் சாஸ்திரி. எதிர் ஜன்னலண்டை எழுந்துபோனார்.
”மகிழ…மகிழ…மகிழ” என்று பாதி பாதியாகக் கூப்பிட்டார்.
பேசின பேச்சில் தொண்டை சோர்ந்துவிட்டது.
குழந்தைகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
”சார்’ என்று சொல்லாமல் என்னை ஜாடை காட்டி அழைத்தார். அவர் விழியைப்
பார்த்து அருகே ஓடினேன். மார்பைத் தடவு என்று சைகை காட்டினார்.
சடசடவென்று புத்தானைக் கழற்றி மார்பைத் தடவினேன்.
”கும்பகோணத்திலே…” அவரால் மேலே பேச முடியவில்லை.
”கும்பகோணத்தில் என்ன?”
”சக்ர…சக்ர…சக்ர…”
பேச முடியாமல் அப்படியே சாய்ந்துகொண்டார். பையனின் கை அவர்
முதுகுக்கும் ஜன்னலுக்கும் இடையே அகப்பட்டுக்கொண்டது, இழுத்தக் கொண்டான்.
”என்ன சார், என்ன சார்” என்று ‘சூப்ரிண்டு’ எழுந்து வந்தார்.
”சார், சார், கோவிந்த சாஸ்திரிகள்” என்று உரக்கக் கூப்பிட்டார்.
அவர் மனைவி எழுந்து, ”என்ன?” என்று கண்ணைத் திறந்து நிலைமையைப்
புரிந்துகொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ”இந்தாண்டை வாடா கிச்சு, கெளரி!” என்று
குழந்தைகளைக் கூப்பிட்டாள்.
நான் மார்பைத் தடவிக் கொண்டிருந்தேன். ”என்ன சார், என்ன சார்?”
என்று பதறினார் ‘சூப்ரிண்டு’.
மூக்கில் கை வைத்துப் பார்த்தேன்.
”என்ன சார்?”
”கும்பகோணத்திலே அவர் சம்பந்தி பேர் என்ன என்று சொன்னார்.”
”சக்ரபாணி அய்யர், ஜவுளிக்கடை வைச்சிருக்காராம்.”
”நீங்க இறங்கிப் போய் ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டச் சொல்லி அவரைக் கும்பகோணம்
ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி மெஸ்ஸேஜ்’ கொடுக்கச் சொல்லணும்.”
”ஏன்! என்ன?”
”ஒன்றுமில்லை.”
”அப்படின்னா?”
அவர் மனைவி அருகில் வந்தாள். ”அட, ராமா!” என்று சாஸ்திரியைப் பார்த்தாள்.
”என்ன?” என்றார் ‘சூப்ரிண்டு’ மறுபடியும்.
டாக்டர் உதவியில்லாமலே அக்பர் சாஸ்திரி மனிதனின் செய்கிற கடைசி
காரியத்தையும் செய்துவிட்டார் என்று அவருக்குப் புரிந்தபாடில்லை.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2021.

rkkurunji@gmail.com


Sunday, June 27, 2021

Rare picture…

Rare picture….

From Left: 'Bharat Kokila' Sarojini Naidu, 'Sardar' Vallabhbhai Patel, 'Netaji' Subhash Chandra Bose and 'Pandit' Jawaharlal Nehru at Sevagram, Maharashtra, 1938.

#KSRPost
27-6-2021.


#தி_ஜானகிராமன்_நூற்றாண்டு_நாளை_நிறைவு. #மலர்_மஞ்சம்

#தி_ஜானகிராமன்_நூற்றாண்டு_நாளை_நிறைவு.
#மலர்_மஞ்சம்
———————————————————
சில நேரங்களில்,நமது அமைதியைக் கெடுப்பது யாராக இருந்தாலும் அவரிடமிருந்து நாம் விலகியிருக்க வேண்டும். அதாவது சில நேரங்களில் நம்மிலிருந்தே நாம் சற்று விலகியிருப்பது நல்லது.
வாழ்வில் எதிர்கொண்ட சங்கடம் அளிக்கும் தருணங்களை மீளாய்வு செய்யவும், அளித்திருக்க வேண்டிய எதிர்வினைகள் குறித்தும் காலதாமதமாகவாவது அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த புவியின் பின்னால் நம் வாழ்வை நம்மை நகர செய்யும். சில நேரங்களில் நாம் தான் இந்த வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.




இக்கட்டான காலங்களில், இயலாமை அவ்விடம்விட்டு அகன்றுவிடவே மனது துடிக்கிறது. இடப்பெயர்வு ஏற்படினும் மனம் முந்தைய இடத்திலேயே நிலைத்து விடுவதை மறுக்க முடியவில்லை.

 'உலகத்தில் அறிவு பிறந்த அன்றே நிம்மதியும், அமைதியும் போய்விட்டன',

'நன்றி கேட்டவர்களுக்கு மேலே மேலே நல்லது செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?'

'இவ்வளவு முழுமையுடன் அழிப்பதற்கு மனிதனால் தான் முடியும்'.

அன்பு என்னும் பாச கயிற்றினால் பிணைக்கப்பட்டுவிட்ட மனித நேயக்கதை. அரிய மனிதர்கள்…..

அறியாமையில் பெறக்கூடிய குறைந்தபட்ச பாதுகாப்பு, இன்பம், எதிர்பார்த்தலின் பின்விளைவான பெரும் ஏமாற்றம், கட்டற்ற மனிதனின் வன்செயல்கள் மேற்கண்ட வரிகளில் தி.ஜாவின் எழுத்துக்கள் மட்டுமே அளிக்கக்கூடிய உன்னத தரிசனங்கள் இவை.

திஜாவின் படைப்புகளில் பெண்கள் ஆண்களின் பார்த்து வெளிப்படையாக மகிழ்ந்து வியக்கிறார்கள்.

நேர்மையாளனாக அல்லது நடுநிலையாளனாக  இருப்பதில்உள்ள சிரமம், இரு தரப்பையும் பகைத்துக்கொள்ள வேண்டிய கஷ்டமான நிலை.

'கைக்கு எட்டாத உயரத்தில் ஒன்னு இருந்தா அதை பத்தி தூத்தறதுதான் வழக்கம்'

 'தியாகம் எவ்வளவு ஆழ்ந்த போதை! பிறருக்காக உழைக்க ஆரம்பித்துவிட்டால், தன்உடல், தன்மனம், தன்நினைவு எல்லாம் எப்படி செத்து விடுகின்றன?'

எவ்விதத் தொடர்பும் இன்றி பிறரை தூற்றுபவர்கள், சுயநலம் இன்றி அனைத்து  தளங்களிலும் உழைப்பவர்களுக்கு மேல் குறிப்பிட்ட வரிகள் பொருந்திவிடுகிறது. என்ன செய்ய… அது சமூக நிலை….

போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் இந்த சூழ்னிலையை பொறுப்பென்று நினைப்பதை விடவும் ஊழ் எனபுரிந்திட வேண்டும். அந்த பக்குவம் தான் இந்த கொடிய வாழ்வை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

ஒரு சில மாதங்களே வாழ்ந்து பேறுகால மரணமடைந்த மனைவி அகிலாண்டத்தின் இறுதி வார்த்தைகளை விடாப்பிடியாக நிறைவேற்றத் துடிக்கும் ராமையா, மகளின் உணர்வுகளையும் மதித்தல், பாலியின் வாக்குறுதியை காக்கும் பொருட்டு பிதுரார்ஜித சொத்துகளை இழந்து விடவும் துடித்தல், வையண்ணா தரும் சங்கடங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லவே முயற்சித்தல், மகள் குறித்த முடிவுகளை நாகேஸ்வர ஐயர் மேற்கொள்வதை அனுமதித்தல் என நுண்ணுணர்வு மிகுந்த நபராக இருக்கிறார்.

அறிவார்ந்த குழந்தையாக வளரும் பாலி, பால்யகாலத்தில் நிச்சயக்கப்பட்டவனை அறியும்போதும், பருவ வயதில் ஈர்க்கப்படுபவனிடமும் அணுகல்-விலகல் மனப்போராட்டத்தில் அவதியுறுகிறாள். நாயக்கர் மகனின் கடனுக்காக கச்சேரிகளுக்கும்  உறுதியான சம்மதம் தெரிவிக்கிறாள்.

 பாலியின் மீதான காதலை மறக்க முடியாமலும், அவளது விருப்பத்தை மீறி செயல்பட முடியாமலும் தவிக்கும் தங்கராஜ், வையண்ணாவை கொல்லவும் தயங்கவில்லை.

 கிடைக்கும் நல்ல வேலையை புறக்கணித்து பாலியின் காதலுக்காக சென்னைக்கு படிக்கச் செல்லும் ராஜா, ஐயரின் எதிர்ப்புகளை ஏற்று கண்ணீருடன் விடை பெறுகிறான்.

 ராமையாவுக்கு பல வழிகளிலும் ஆதரவு தரும் நாயக்கர் இறுதிவரை அக்குடும்பத்துடன் வாஞ்சையுடன் பழகுகிறார்.

தன்னலமின்றி காலம் முழுதும் தம்பியின் குடும்பத்திற்காக உழைக்கும் வடிவு, நாவலின் மற்றுமொரு வியப்பு.

கைம்பெண் ஆனபோதும், புதியதொரு காதலும் மறுக்கப்பட்ட நிலையிலும், உற்சாகத்திற்கு குறைவின்றி அணுக்கமான தோழியாக இருக்கிறாள் செல்லம்.

ஒருவர் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளுதல், பெண் குழந்தை பிறந்தால்
சிக்கலை  ஏற்படித்தி புறக்கனிப்புகள் என….தி.ஜானகிராமன் அன்பு சார்ந்த வட்டங்கள், உறவுகள் கொன்ட'மலர்மஞ்சம்'…

இலக்கிய சிந்தனை

#இலக்கிய_சிந்தனை
——————————————————
ப.சிதம்பரமும் அவருடைய அண்ணன் ப.லட்சுமணனும் ‘இலக்கிய சிந்தனை’வட்டம்என்ற அமைப்பை 1970-களில் துவங்கினர். மாதம் ஒரு முறை  இதழ்களில் வெளி வந்த சிறுகதைகளைத் வாசிக்க பட்டு தேர்ந்தெடுத்து மாதாமாதம் வெளியிட்டனர். வருடத்திற்கு ஒரு முறை தேர்ந்தெடுத்த சிறுகதைகளுக்கு ‘இலக்கிய சிந்தனை’ சார்பில் பரிசும் வழங்கப்பட்டது. 

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் வருடம் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து தற்போது வானதி பதிப்பகம் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளிட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகள் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் வருவது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். நண்பர்கள் மணா, திலீப்குமார், தோப்பில் மீரான்,பாவண்ணன், பிரபஞ்சன்,சோ. தர்மன்,மேலாண்மை பொன்னுச்சாமி,சூடாமணி, திருப்பூர் கிருஷ்ணன், வண்ணதாசன் என பலருடைய கதைகள் தற்போதும் பேசப்படுகின்றது.

இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு.
ப.லட்சுமணன் அவர்களின் முயற்சியில் மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய அரங்கில், கடைசி சனிக்கிழமை அன்று கூடும் இலக்கிய விரும்பிகள் கூட்டம். துவக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தராத இலக்கிய புள்ளிகள் இல்லை எனலாம். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன், அசோகமித்திரன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, கிரா என பலர். இதற்க்கு அமைப்பாளராக பாரதி இருந்தார்.வழி நடத்தும்அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கிய சிந்தனை அமைப்பின் கீழ், அனைத்து பருவ இதழ்களும் வாங்கப்பட்டு, ஒருவரால் வாசிக்கப்பட்டு, அதில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது.

பரிசுஅளிப்புவிழாக்கள்ஏ.வி.எம்.ராஜேஸ்வரியின்  மண்டபத்தில் ஒவ்வொரு வருடம் சிறப்பாக ப.லட்சுமணன் நடத்துவர்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2021.

rkkurunji@gmail.com


#கேரள_பம்பை_அச்சன்கோவில்_தமிழக_வைப்பாறுடன்_இணைப்பு

வானம் பார்த்த பூமியாக உள்ளது திருநெல்வேலி வடக்குப் பகுதி (தென்காசி). இந்த திட்டத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் முதலிய பல தென் மாவட்டங்கள் பயன்படக்கூடிய ஒரு திட்டத்தினை மத்திய அரசு பாராமுகம் காட்டி வருகிறது



#கேரள_பம்பை_அச்சன்கோவில்_தமிழக_வைப்பாறுடன்_இணைப்பு
___________________________
 

​மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு, “உச்சநீதிமன்றம் கடந்த 2012ல் எனது வழக்கில், நதிநீர் இணைப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் மீது என்ன செயல்பாடுகள் நடந்துள்ளது?” என்று அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சமீபத்தில் சென்றிருந்தேன். 
​இந்த அமைச்சகத்தின் செயலாளர் சந்திக்கச் சென்ற போது அவருடைய அறையில் அவர் இல்லை. எனவே அவருக்கு அடுத்துள்ள அதிகாரிகளான, துணை மற்றும் இணைச் செயலாளர்களைச் சந்திக்கக்கூடிய சூழல்தான் அப்போது அமைந்தது. 
அந்த அதிகாரிகளிடம் உச்சநீதிமன்றத்தின் தீர்பின் மீது அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று கேட்டேன். குழு அமைத்ததுடன், உரிய ஆலோசனைகள் நடத்தி நவலவாலா தலைமையில் “நதிநீர் இணைப்புக் குழு” இதுகுறித்து ஆய்வு செய்கின்றது என்று தெரிவித்தனர். அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்திக்க நினைத்தபோது அவரும் டெல்லியில் இல்லை.
தமிழகத்தின் மத்திய அரசால் கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கிடப்பில் போட்ட திட்டம் தான் அச்சன்கோவில் – பம்பை – தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டமாகும். என்னுடைய நதிகளை தேசியமயமாக்கி, கங்கையை குமரி மாவட்ட நெய்யாறோடு இணைத்திட வேண்டும். அச்சன்கோவில் – பம்பை மற்றும் கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளை தமிழகம் நோக்கி திருப்பவேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தில் 30 ஆண்டுகாலம் வழக்கு நடத்தி 27/02/2012ல் இதற்கான தீர்ப்பு கிடைத்தது. கிடைத்தும் செயல்பாடானது ஆமை வேகத்தில் உள்ளன.
 
ஆனால், 06-03-2011 அன்று கேரள சட்டமன்றக் கூட்டத்தில் கேரள ஆளுனர் உரையில், பம்பை அச்சன்கோவில் – வைப்பார் - இணைப்பு செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.  அந்த உரையில் கேரளா கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதர்காக வாமானபுரம், அச்சன்கோவில், மீனச்சில், சாலியாறு நதிகளின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய அணையைக் கட்டுவதால், அச்சன் கோவில் ஆற்றின் தண்ணீர்வரத்து வரும் பகுதியில் தான் இந்த புதிய அணை கட்டப்படும். 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால் கேள்விக்குறி ஆகிவிட்டது.
 
அந்த திட்டம் என்ன என்ற் பார்த்தோமானால், கேரளாவில் உள்ள பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 43 வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது.
 
கேரளாவின் ஒத்துழைப்பில்லாமல் இத்திட்டம் கிடப்பில் கிடக்கின்றது. 1983ல் அடியேன், நதிகள் தேசியமயமாக்கப்பட்டு கங்கை – மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி – வைகை – தாமிரபரணி குமரிமாவட்ட நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்றும், அத்தோடு கேரளாவில் மேற்கு நோக்கிப்பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதோடு, அங்குள்ள அச்சன்கோவில் - பம்பை நதிகள்  தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைக்கவேண்டுமென்ற எனது பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம்,  “பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் காண  மத்தியஅரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு முறையாக அமர்ந்து நாடு எதிர்பார்க்கும் இந்த முக்கியப்பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டுமென்றும்” மிகத் தெளிவாக அறிவுறுத்தியது.
 
மத்திய அரசு, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் நேரடித் தலையீட்டில், 1972ல் அமைத்த நீர்பாசன குழுவின் அறிக்கை தொகுதி II பக்.384ல், கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளிலிருந்து தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது.  இதை தமிழகத்திற்குத் திருப்பலாம் என்று அப்போதே பரிந்துரை செய்தது. 4134.கி.யூ.மீ தண்ணீர் கடலில் கலப்பதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த காலகட்டத்திலிருந்து இந்தப்பிரச்சனை இதுவரை 20சுற்றுகளுக்கு மேல் பேசப்பட்டும் மத்திய அரசின் முன்னிலையில் கேரள-தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.
 
அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பால், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் வசதியும் கிடைக்கும். இங்கு 500மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் ஏற்படுத்தி மின்சார உற்பத்தியையும் பெற முடியும். 1992-93 திட்டத்தின் படி இதன் மதிப்பீடு 1397.91 கோடிகள். எட்டுவருடங்களில் இந்தப்பணியை முடிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு முன், வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, சுரேஷ் பிரபு தலைமையில் இயங்கிய நதிநீர் இணைப்புக் குழு, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு பற்றி ஆய்வு செய்தது. பம்பா ஆற்றின் புன்னமேடு என்கிற இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்குள் குகைப்பாதை அமைத்து பம்பாவை அச்சன்கோயில் ஆற்றுடன் இணைப்பது, பின்னர் அச்சன்கோயிலில் இருந்து 9 கிலோமீட்டர் தூரம் குகைப்பாதை அமைத்து மேற்குத்தொடர்ச்சி மலையைக் கடந்து தமிழகத்தில்  செங்கோட்டை அருகே வடகரை கிராமத்தில் மலைக்குள் அமைந்திருக்கும் அடவிநயினார் அணைப் பக்கம் தண்ணீரைக் கொண்டு வந்து, பின்னர் அங்கிருந்து மலை அடிவாரத்திலேயே  50.68 கிலோமீட்டர் தூரத்திற்கு 14 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட கால்வாயை வெட்ட வேண்டும்.
 
பம்பை-கல்லாறு புன்னமேடு என்ற இடத்தில், 160மீட்டர் உயரத்தில் அணைகட்டுவதும், அதுபோல, அச்சன்கோவில் கல்லாறு நதியில் சித்தார்மூழி என்ற இடத்தில் 160மீட்டர் உயர அணைகட்டி, அந்த நதிநீர்களைத் தேக்கி, அச்சன்கோவில் அருகே 35மீட்டர் உயரத்திற்கு கிராவிட்டி அணைகட்டி,  புன்னமேடு சித்தார்மூழி இரண்டு அணைகளையும் இணைத்து 5மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8கி.மீ தூரம் சுரங்கம் வழியாக தமிழக எல்லைக்குவந்து மொத்தம் 550.68கி.மீ தொலைவில் வைப்பாற்றோடு அந்த தண்ணீரை இணைகலாம்.
 
 
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம், வெம்பக்கோட்டை, அதன்வழியாக சாத்தூர் அருகாமையில் உள்ள வைப்பாற்றில் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வழியாக கடலில் சேரும். இதுதான் அச்சன்கோவில் –பம்பை –வைப்பாறு இணைப்புத்திட்டம். இத்திட்டத்தின் வாயிலாக, சிவகாசி வடபுரத்திலும், தெற்கே கோவில்பட்டி வரை நீர்பாசனபரப்புக்கும் , குடிநீருக்கும் பயன்பெறும் வகையில் கிளைக்கால்வாய்களும் இடம்பெறும்.
இந்த கால்வாய்களில் வரும் நீர்வரத்தை கிளைக்கால்வாய்களாக சிவகிரி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வரைக்கொண்டு செல்லமுடியும். ஏற்கனவே திருவில்லிபுத்தூர் அருகே அழகர் அணைத்திட்டமும் பரிசீலனையில் இருக்கும்பொழுது, வைப்பாறு கிளைக்கால்வாய் சேர்ந்தால் நீர்வரத்து அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணைக்கும், திட்டத்தில் உள்ள உள்ளாறு, செண்பகத்தோப்பு அணைகளுக்கும் நீர்வரத்து பெருகும்.
 
நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் – சங்கரன்கோவில் தெற்குநோக்கி கால்வாய் வெட்டினால், மேலநீலிதநல்லூர், மானூர் பகுதி வழியாகச் சென்று தாமிரபரணியில் இணைக்கலாம். மேலும் இந்தக்கால்வாய் தெற்கே நான்குநேரிவரை கொண்டு சென்று தற்போது பணி நடக்கின்ற தாமிரபரணி- கருமேனி ஆற்றோடும் சேர்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே தெற்கு நோக்கி கால்வாய் வெட்டினால், எட்டையபுரம், ஒட்டபிடாரம் வரை சென்று தூத்துக்குடி நகருக்கே குடிநீர் வழங்கலாம். இத்திட்டத்தால் இவ்வளவு பயன்பாடுகள் உள்ளன.
 
வீணாகக் கடலுக்கு செல்லும் நீரைப் பெறுவதற்குத்தான் அண்டை மாநிலம்,  ஹரியின் தேசமான கேரளாவிடம் மண்டியிடுகின்றோம். ஆனால், அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து ஒரு சொட்டுத் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்ற தயாள மனதில்லாமல் அங்கு வரும் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.  
 
அச்சன்கோவில் –பம்பை- வைப்பாறோடு இணைப்பது தமிழக மக்களிடமே இன்னும் விழிப்புணர்வு வராதது வேதனையைத் தருகின்றது. குமரி நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என அனைத்து பிரச்சனைகளிலும் தாராளமாகத் தண்ணீர் வழங்கலாம். வழங்க மனம் தான் கேரளாவுக்கு இல்லை.
இதுகுறித்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கேரள சட்டமன்றத்தில் பேசும்போது, “பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளைத் தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்க முடியாது என்றும், முல்லைப்பெரியாறுக்குச் சொன்ன கற்பனை காரணமான பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் குட்டநாடு பகுதி பாலைவனமாகிவிடும் என்றும், உபரி நீரை தமிழகத்திற்குத் திருப்பினால் கேரளத்தில் மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கும் என்ற விநோதமான காரணத்தையும் சொல்கிறார். கேரளா நினைத்தால் தான்  இந்தப்பிரச்சனையில் எதுவும் செய்யமுடியுமென்று சொல்லியுள்ளது வேதனையைத் தருகின்றது. அங்கு பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே பதில்தான். தமிழகமோ 20சதவீத உபரிநீரைத்தான் வைப்பாறு இணைப்புக்குக் கேட்கின்றது.
 
ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லோவியா கேரள மாநிலத்தைப் போன்று மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமானியாவுக்கு யூகோஸ்லோவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரை கொடுத்து உதவும்போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்திற்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது. இதைப் போன்று சோவியத் நாட்டிலுள்ள துருக்மேனியா மாநிலத்திலுள்ள கேரிகம் கால்வாய் அண்டை மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்கிறது. சோவியத் நாட்டிலுள்ள வட பகுதிகளில் பாயும் நதி நீர் தென் பகுதிகளுக்குத் திருப்பப் பட்டுள்ளது.
 
கேரளப் படுகையில் உள்ள பாண்டியாறு, புள்ளம்புழா, மோயாறு, சோலாத்திப் புழா, பன்சிகல்லா ஆகிய நதி நீர் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 2.80 இலட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மற்ற நதிப்படுகையிலிருந்து கிழக்குமுகமாக தமிழகத்திற்குத் திருப்பினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வளம்பெறும்.
 
நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், பழநி, திருச்சி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் குடிநீர்வசதி பெறும்.
பம்பை – அச்சன் கோவில் -  வைப்பாறு இணைப்பு திட்டத்தை மத்தியஅரசின் தேசிய நீர்மேம்பாட்டு ஆணையம் வரையறை செய்தது. இத் திட்டத்தால் தென்தமிழகப் பகுதிகள் பாசனவசதி பெறும் என்பதால் ஆர்வத்துடம் தமிழகஅரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், உபரிநீரை வழங்கவேண்டிய கேரளஅரசு இன்றுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது. 
 
கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்தவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின்  நீர்வளம் 1,300 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல சுமார் 11 மடங்கு ஆகும்.) கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு 800 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை..
 
கேரளத்தில் 85 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் உள்ளன. 1,96,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கிறது. கேரளத்தில் உள்ள நெய்யாறு நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர.கி.மீட்டர் ஆகும். பாம்பாறு (230 டி.எம்.சி), அச்சன்கோவில் (77 டி.எம்.சி), பெரியாறு படுகை(380 டி.எம்.சி), , கல்லட ஆறு(180 டி.எம்.சி) நீர்படுகைகளில், உபரி நீர் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் கடலுக்கு செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
 
மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்புவது பற்றி மத்திய அரசு 1978ஆம்  ஆண்டு ஒரு குழு அமைத்து, இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து, இந்த நதிநீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகளை அறிந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.
 
கேரள மக்களுக்கு, அரிசி, காய்கறிகள், பால், மீன், இறைச்சி, மணல், சிமெண்ட், மின்சாரம் போன்ற அத்யாவசியப் பண்டங்களை தமிழகம் வழங்குகின்றது. அதற்காவது தண்ணீர் கொடுத்தால் தானே விளைச்சல் செய்து அரிசி, பருப்பு, பால் என்று அவர்களுக்கு வழங்கமுடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

#பம்பைஅச்சன்கோவில்வைப்பாறுடன் #நதிகள்இணைப்பு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-06-2021.

rkkurunji@gmail.com

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...