Sunday, August 1, 2021

#மேலவை_குறிப்புகள்_2

.

#மேலவை_குறிப்புகள்_2 #TamilNadu_Legislative_council---------------------------



#TamilNadu_Legislative_council

இந்தியாவிலே மத்தியிலும் மாநிலங்களிலும் பூரண சுதந்திரம் மலர்ந்தது 1947 ஆகஸ்டுப் பதினைந்தில் ஆகும். ஆனால், இதற்கு முன்னோடியாக மாநிலங்களிலே அரைகுறையாகவேனும் சுயசியாட்சி மலர்ந்தது 1920 ஆகும்.

"மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டம்" என்னும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு வழங்கிய அரசியல் சீர்திருத்தத்தின் விளைவக அப்போதைய மெட்ராஸ்(சென்னை),பம்பாய்,கல்கத்தா(வங்காளம்) மாநிலங்களிலே சட்டமன்றத்தோடும் கூடிய சுயாட்சி மலர்ந்தது. உயர்நீதிமன்றங்கள் இந்த
மூன்று இடங்களில் அமைந்தது.இவை
மற்ற மாநில உயர்நீதி மன்றங்கள் விட
அதிகாரம் பெற்ற Charter High courts.
LPA அதிகாரம் இவைகளுக்கு உண்டு.
இதற்க்கு மேல் லண்டன் பிரிவு கவுன்சில்தான்.

அப்போது தமிழ் – தெலுங்கு – கன்னடம்- மலையாளம் ஆகிய நான்கு மொழிப் பிரதேச்ங்களைக் கொண்ட சென்னை ராஜ்யம் தனக்கென சட்டம்ன்றத்தையும் அமைச்சரவையும் பெற்றது. அந்த சட்ட மன்றம் “லெஜிஸ்லேடிவ் கவுன்சில்” என்னும் ஆங்கிலப்பெயரால்அழைக்கப்பட்டது.

அதன் பின்னர்,”1935 என்னும் பெயரிலே பிரிட்டிஷ் பார்லிமெண்டால் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் வாய்லாக சென்னை – பம்பாய் – வங்காளம் ஆகியபலமான நிலங்களிலே இரண்டு அவைகளை உருவாக்கும் சட்டமானது 1937ல் நடை முறைக்கு வந்தது.

பழைய லெஜிஸ் லேடிவ் கவுன்சிலானது, அந்தப் பெயராலேயே “மேலவை” யாக நீடித்தது.“லெஜிஸ் லேடிவ் அசெம்பிளி” என்னும் பெயரிலே “சட்ட மன்றம்-கீழ் அவை” ஒன்றும் புதிதாகப் பிறந்தது!

1937ல் தொடங்கி 1986 அக்டோபர் வரை நமது மாநிலத்தில் இரண்டு அவைகள் இயங்கிவந்தன. ஆனால், தமிழக சட்டப் பேரவை 15-05-86ல் நிறைவேற்றிய தீர் மானப்படி, நாடாளு மன்றத்திலே சட்டமியற்றப்பட்டு, 31-10-86ல் தமிழக மேலவை கலைக்கப்பட்டது.

1920 ஆம் ஆண்டு வரை அதாவது, தொடர்ந்து 66 ஆண்டுக் காலம் இயங்கி வந்த மேலவையின் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்கள்:

பி.இராசகோபாலாச்சாரி 1920—23

எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை1924-25

எம்.ரத்தினசாமி1925-26

சி.வி.எஸ்.நரசிம்மராசு1946-30

பி.ராமச்சந்திர ரெட்டி 1930-37

டாக்டர் யு.ராமராவ் 1937-46

ஆர்.பி.ராமகிருஷ்ணராசு1946-52

டாக்டர் பி.வி.செரியன் 1952-64

சிந்தனைச் சிற்பி சி பி சிற்றரசு 1970-76

ம.பொ.சிவஞானம் 1978-86

இவர்களில் அதிக ஆண்டுகள் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் டாக்டர் பி.வி.செரியன், டாக்டர் ம.பொ.சிவஞானம் ஆகிய இருவருமாவர்.
துணைத்தலைவராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்து அடுத்து சுமார் 9 ஆண்டு காலம் தலைமைபதவியிலிருந்தார்
ம.பொ.சி.19452 முதல் 1954 வரை மேலவையின் உறுப்பினராகவும் துணைக் கொரடாவாகவும் ம.பொ.சி. இருந்தார். ஆக, கலைக்கப்பட்ட மேலவையுடன் ம.பொ.சி.க்கிருந்த தொடர்பு 17 ஆண்டு காலமாகும்.

மேலவை கலைக்கப்பட்டது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில்
அடியேன் வழக்கு தொடுத்தேன்(வழக்கு எண்  WP no 4399/2000) உயர் 
நீதி மன்றம் மேலவைஅமையஆணையை வழங்கியது. ஆனால்ஆட்சியாளரால் பாழ் பட்டது 

#மாண்டேகசெம்ஸ்போர்டு 
#தமிழகமேலவை
#மேலவைவழக்கு

#KSRadhakrishnanpostings
#KSRpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1-08-2021.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...