Wednesday, August 4, 2021

திருநெல்வேலி.

அண்ணன் நெல்லை கண்ணன் அவர்களை சந்தித்து பேசி ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. கி.ரா நினைவுத்தொகுப்புக்காக நெல்லை கண்ணன் அவர்கள், கட்டுரை ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவருடன் நீண்ட காலத்திற்கு பின் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

கிராவும் நாஞ்சில் நாடனும் நெல்லை கண்ணனுடைய, ‘’குறுக்குத்துறை ரகசியங்கள்” நூலை பற்றி கடந்த காலத்தில் பாராட்டி எழுதியதும், பேசிக் கொண்டோம். 

அப்போது, ‘’கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு, சி.மகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த, இருக்கும் நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், தி.மு.க வில் மறைந்த பெ.சீனிவாசன் மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என நீண்ட பட்டியலிடுவார் கி.ரா. இவர்கள் தாமிரபரணி, கரிசல்காடு, வைகைகரை, காவிரிதீரவாசத்திலிருந்து யமுனைக் கரையிலுள்ள நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியவில்லை. இவர்களுடைய கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் கேட்பதில்லை, என்பதெல்லாம் எனக்கு எப்போதும் வருத்தத்தை தருவதுண்டு’’! ‘என கி.ரா சொன்னதெல்லாம் அவரிடம் நினைவு  படுத்தி பேச முடிந்தது.

1969-லிருந்து பெருந்தலைவர் காமராஜர், ஆர்.கே, எஸ்.ஆர்.நாயுடு, திருமங்கலம் ராஜாராம் நாயுடு, தேனி என்.ஆர்.டி, கே.டி.கோசல்ராம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி வி.ஜெயலட்சுமி,ராஜபாளையம் ஸ்ரீரங்கராஜா, அன்னமராஜா, மத்திய முன்னாள் அமைச்சர் சிவகங்கை மாவட்டம் பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் மற்றும் நெல்லை சீமை அன்றைய காங்கிரஸ் தலைவர்கள்; கோமதி சங்கர தீட்சிதர், கே.டி. கோசல்ராம், ஏ.பி.சி. வீரபாகு, எஸ். செல்லப்பாண்டியன், லூர்தம்மாள் சைமன், ராஜாத்தி குஞ்சிதபாதம், சட்டநாதக் கரையாளர்,  முன்னால் அமைச்சர் கடையநல்லூர் மஜித், நாங்குநேரி சங்கர் ரெட்டியார்,கோவில் பட்டி தியாகி சுப்பாநாயக்கர், விளாத்திகுளம் எல்.வி.ராமகிருஷ்ணன், சங்குமுத்துத் தேவர், நாடளுமன்றம் முன்னால் உறுப்பினர் எஸ்.கே.டி.ராமச்சந்திரன், சங்கரன் கோவில் ஊர்காவலன், அம்பலவாணம் பிள்ளை, அமராவதி நாடார், ஆர்.எஸ். ஆறுமுகம், அம்மன்குளம் செல்லச்சாமி, உள்ளிட்ட பலரை பற்றியெல்லாம் பழைய சம்பவங்கள், திரு.நெல்லை கண்ணனுடன் பேசும் போது அதை அசைபோடும் நிலையில் இவை எனது நினைவுக்கு வந்தன.

#KSRpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
4-08-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...