Monday, August 9, 2021

#தின்டிவனம்_ராமமூர்த்தி —————————————-

 #தின்டிவனம்_ராமமூர்த்தி

—————————————-

ஆரம்ப காலத்தில் கம்பீரமன மீசை (1960-70)கதர் ஜிப்பா விட சந்தன கலர் சில்க் ஜிப்பாவை விரும்பி அணிவார் .தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தின்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மறைவு. ஆழ்ந்த இரங்கல்.காமராஜர் காலத்தில் இவருடன் பழக்கம். பா.ராமசந்திரன் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர். நெடுமாறன்,தின்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன், தண்டாயுதபாணி பொதுச் செயலார்கள் என இருந்தனர். பல ராமமூர்த்தி என பெயர்கள் காங்கிரஸில் இருந்தால்; ஊர்

பெயர் சேர்த்து தின்டிவனம் ராமமூர்த்தி,

வாழப்படி ராமமூர்த்தி, தஞ்சை ராமமூர்த்தி என காமராஜர் அழைத்தார்

தமிழக மேலவை, பேரவை உறுப்பினராக இருந்த தின்டிவனம் ராமமூர்த்தி, 1984 முதல் 90- மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பதவி வகித்தார். இதில் குடியரசு தலைவரின் நியமனமும

செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பல பொறுப்புகளை வகித்த அவர், 2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது தனிகட்சி தொடங்கினார். அனால் அதற்கடுத்த சில மாதங்களில் கட்சியை கலைத்து விட்ட இவர், சரத்பாவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இணைந்தார்.

அன்று காமராஜர் அடையாளம் காட்டிய இளம் தலைவர்கள் வரிசையில்: மாவீரன் நெடுமாறன்,இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகிய மூவர் முதன்மையானோர்.

1960 களிலும் 70 களிலும் கவர்ச்சி அரசியல் கலாச்சாரத்தை தமிழகம் வரவேற்கத் தயாரான போது, அதன் தாக்கத்தை எதிர் கொண்டு, காமராஜர் அணியில் அயராது உழைத்த கவியரசர் கண்ணதாசன்,சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்,தீபம் பார்த்தசாரதி, கவி. கா மு செரீப் ஆகிய அகிலம் வியக்கத்தக்க சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து, இயக்கி, தமிழக காங்கிரஸ் கட்சியில் நீக்கமற நிறைந்து நின்றவர் அண்ணன் திண்டிவனம் ராமமூர்த்தி.

#ksrpost

8-8-2021.

No comments:

Post a Comment

2023-2024