Tuesday, December 26, 2023

#*முதல்வருக்கு வினா-4* #*மின்கட்டணத்தை மாதம் ஒருமுறை என்று தேர்தலில் உறுதிமொழி படி மாற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்*?

#*முதல்வருக்கு வினா-4* 
#*மின்கட்டணத்தை மாதம் ஒருமுறை என்று தேர்தலில் உறுதிமொழி படி மாற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்*?
————————————
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கட்டும் திட்டத்தில் இருந்து மாதம் ஒரு முறைக்கட்டணம் என  அது மாற்றப்பட்டு  500 யூனிட் மின்சாரத்திற்கு மேல் அதிகம் பயன்படுத்துபவர்கள் இரண்டு மாதக் கட்டணத்தால் அதிக அளவு மின் கட்டணம் கட்ட வேண்டிய நிலைமை ஏற்படுவதைக் கணக்கில் கொண்டு   அதை மாதக்கட்டண முறையாக மாற்றி மின் நுகர்வாளர்களுக்கு ருபாய் 6000 வரை மிச்சம் செய்து தரப்படும் என்று திமுக தனது தேர்தல்கால வாக்குறுதியாக இன்றைய முதல்வர் ஸ்டாலின அறிவித்திருந்தார்.
அளித்த வாக்குறுதி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால்  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை  மின் கட்டணம் கட்டும் மக்கள் 1000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 3100 ருபாய் நஷ்டம் அடைகிறார்கள் .

வருடத்திற்கு மொத்த நஷ்டம் கணக்கிட்டால் 18 ஆயிரத்து 600 ரூபாய் வருகிறது. இப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 3 ஆயிரத்து நூறு ரூபாயை மக்களுக்கு நஷ்டமாக்கிவிட்டு அந்த பணத்தை தன் கஜானாவில் சேர்த்துக் கொள்ளும் அரசு…. மக்களை ஏமாளியாக்கி வருகிறது. அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்பது மெல்ல மறைந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு ஆளும் வர்க்கங்களின் சொந்த நலன்களாகி வருவது வேதனைக்குரியது.

மாதம் 500 யூனிட் இன்னொரு மாதம் 500 யூனிட் மொத்தம் ஆயிரம் யூனிட் என்பது பொதுவாக  இன்றைய குடும்பங்களின் நுகர்வாகி வருவது அதுவும் மின் சாதனங்கள் அதிகமாகி விட்ட காலத்தில் எதார்த்தம் தான்! என்றாலும் அதற்காக மக்களுக்கு இந்த மின்சாரத்தை எவ்வாறு சரியாக வழங்குவது என்ற திட்டம் இல்லாமல் இப்படியாகக் கூடுதல் கட்டணத்தை ஏமாற்றி பெறுவது எப்படிச் சரியாகும். தமிழக மின்சார வாரியம் எதற்கும் கட்டுப்படுவதாக இல்லை.
 அதை உகந்த வழியில் கட்டுபடுத்தி மக்களுக்கு உரிய நன்மைகளை நியாயமாக வழங்கச் செய்வதுதான் ஒரு அரசாங்கத்தின் தலையாய பணி . குறைந்தபட்ச வருமானத்தில் வாழும் மத்திய தர நடுத்தர மக்களுக்கு இந்த மின் கட்டணம் ஒரு மிகப்பெரிய சுமையைத் தந்து அழுத்துகிறது பலரும் பலவிதமாக மின் கட்டணம் குறித்து  அதன் தாறுமாறான போக்கு பற்றி முறையிடுகிறார்கள் அதிக மின் கட்டணம் என்று.
தீவிரமாக போய் கேட்கும் பட்சத்தில் வரும் ஒரே பதில் கோர்ட்டில் போய் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் மின்சாரத்தை துண்டித்து விடுவோம்  என்பது வழக்கமாக இருக்கிறது.

இதனால் பல சிறு தொழில் குறு விவசாயம் போன்றவையும் மின்சாரம் சார்ந்து இயங்கும் பல உற்பத்தி முறைகளும் காலாவதியாகி வருகின்றன. பலரும் வேறு சில மாநிலங்களுக்கு இந்த மின் கட்டணத்தைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்து விட்டார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பு வைத்து நல்ல முடிவாக மக்கள் மனம் மகிழும்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி

மின் கட்டணத்தை  மாதம் ஒரு முறை என்று  மாற்றுவாரா முதல்வர்.

❓கேள்விகள் தொடர்கின்றன……

#மின்கட்டணம் #திமுக #DMKFailsTN  
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
25-12-2023.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...