Friday, December 16, 2022

#தமிழக_நீர்_நிலைகள் #Tamilnadu_waterstorages #ksrpost 15-12-2022

#தமிழக_நீர்_நிலைகள்
#Tamilnadu_waterstorages 

1947ல் பிரிட்டிஷ்காரன் சுதந்திரம் மட்டும் கொடுக்கவில்லை.39640 நீர் நிலைகள் 6லட்சம் கிணறுகள் நீராவிகள் தெப்பம் ஓடைகள் ஊருணிகள்.இவை அன்றைய பொதுப்பணித்துறையின் கணக்கு.
1.பொதுப்பணித்துறை
2.வருவாய்த்துறை.
3.வனத்துறை.
4.கனிமவளத்துறை
5.காவல்த்துறை.
இந்த ஐந்து துறைகள்தான் கண்மாய்களை நாசப்படித்தி விட்டன.


#ksrpost
15-12-2022

https://youtu.be/whi13cZfNKs

திருப்பாவை -1 (#மார்கழி) #ஆண்டாள் #ஶ்ரீவில்லிபுத்தூர் Tirupavai

#திருப்பாவை -1 (#மார்கழி)

#ஆண்டாள் 
#ஶ்ரீவில்லிபுத்தூர்  Tirupavai




பாடல் 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் 
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்

Maargazhi(th) thingal madhi niraindha nannaalaal
Neeraada(p) podhuveer podhuminon erizhaiyeer
Seer malgum aayppaadi(ch) chelva(ch) chirumeergaal
Koorvel kodundhozhilan nandhagopan kumaran
Eraarndha kannii yasodhai ilam singam
Kaar meni cengan kadhir madhiyam pol mugaththaan
naaraayanane namakke parai tharuvaan
paaror pugazha(p) padindhelor empaavaay

This first verse sets the time as the first day of the month of Margazhi (When Sri Andal sung this verse that was probably a full moon day ) thingal – month madi – moon). Andal invites the young girls of the prosperous Ayarpadi and everyone to symbolically bathe and join in the excellent and exemplary worship of Lord Narayana who will bless us and give us succor. Like in all the verses the Lord is referenced not just by name but by a number of lines of praise about His Form, lineage, beauty, valour, kindness and many virtues and also anecdotes from his victories and other illustrious events. In this verse the Lord is referenced as Krishna, the son of Nandagopan (who is ever vigilant with a sharp spear to protect the baby Krishna, the lion cub like son of the beautiful eyed Yashoda, the Lord who is dark, and whose face is radiant like the sun.

Thursday, December 15, 2022

#*ஆண்டாள் – திருப்பாவை – பாவை நோன்பு –மாதங்களில் மார்கழி*




நாளை மார்கழி முதல்நாள்.மாதங்களில் மார்கழி என்பார்கள். பாவை நோன்பு கன்னல் தமிழில் தித்திக்கும் கன்னித் தமிழில் திருப்பாவையை  கொடுத்த சூடிக் சுடர்க்கொடியின் மாதம் இது. பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராகத் திகழ்ந்த ஆண்டாளின் தமிழ் மாலை என்று  திருப்பாவையைக் கூறுவோம். திருப்பாவையும் ஓர் ஆற்றுப்படைதான்.  பின் நவீனத்துவத்தை அன்றே சிலாகித்தவர் ஆண்டாள். முன்பனிக் காலத்தில் விடியலில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, திருப்பாவை, திருவெம்பாவையைப் பாடிக் கொண்டு வீதிகளில் வலம் வரும்போது, ஓசோன் படலத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்ற ஆக்சிஜன் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மார்கழியைப் போற்றுவோம்! ஆண்டாளைப் போற்றுவோம்! ஆண்டாள் தமிழைப் போற்றுவோம்!

#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி_நாச்சியார்
#ஆண்டாள் 
#திருப்பாவை – 
#பாவை_நோன்பு 
#மாதங்களில்_மார்கழி

#ksrpost
15-12-2022.

பி. ராமமூர்த்தி CPM

பி. ராமமூர்த்தி வேப்பத்தூரைச் சேர்ந்தவர். வி.பஞ்சாபகேச சாஸ்திரியின் மகன். வயது 36/ 40, உயரம் 5 அடி 4 அங்குலம். பிரவுன் நிறம்.மெல்லிய உடல். கிராப்புத் தலை. வலது கால் ஊனம். இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் தேடப்பட்டு வரும் நபரின் அடையாளம் இது. இவரைக் கைது செய்வதற்கு உதவும் நம்பிக்கையான தகவல் தரும் எந்த ஒரு நபருக்கும் இரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சிஐடி இலாகாவும் 100 ரூபாய் அன்பளிப்பாக தரும். இவரை உபசரிப்பவர்கள் தண்டிக்கப்படுவர்.

   இந்த விளம்பரம் 1940 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் நாள் தமிழ்நாட்டில் அனைத்து நாளேடுகளிலும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. அன்றைய நூறு ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும் அந்த அளவிற்கு இவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

  யுத்த எதிர்ப்பு நடவடிக்கையில் இவர் தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை மையமாகக் கொண்டிருந்த வேப்பத்தூரில் வீட்டுக் காவலில் 24 மணி நேரம் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். போலீஸ் காவலை மீறி பி ராமமூர்த்தி தப்பி தலைமறைவாகி விட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் மேலே சுட்டிய விளம்பரத்தை வெளியிட்டது.

    பி.ராமமூர்த்தி பள்ளிக்கூடத்தால்/  படிப்பால் ஈர்க்கப்பட்டதைப் போன்று விடுதலைப் போரும் இவரை ஈர்த்தது. 1919 ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் ரவுலட் சட்டத்தை எதிர்த்து அவரவர் வீட்டில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற காந்தியின் அறைகூவலை ஏற்று சிறுவன் பி. ராமமூர்த்தி தன்னுடைய வீட்டில் உண்ணாவிரதம் இருந்து விடுதலைப் போரில் தனது முதல் முத்திரையைப் பதித்தார்.

   பின்  கதர் கட்டுவது இவரது லட்சியமாக மாறியது. கரன்சி ஆபீஸில் வேலை பார்த்து வந்த அவரது அண்ணன் தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்று கடுமையாக எதிர்த்த போதும் தனது பிடிவாதமான உண்ணா விரதத்தால் கதர் ஆடை வாங்கித்தர நிர்ப்பந்தித்தார் தனது குடும்பத்தாரை. அன்று தொடங்கிய கதர் ஆடை அணிதல் 1987 டிசம்பர் 15 அன்று அவர் இறுதி மூச்சு அடங்கும் வரை தொடர்ந்தது. 1920 ஆம் ஆண்டில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க மரத்தின் மீது ஏறி கீழே விழுந்து தன் காலை உடைத்துக் கொண்டார். வலது காலில் ஏற்பட்ட அந்த ஊனம் அவரது வாழ்வில் நிரந்தரமானது.

  அன்றைக்கு தேசபக்த மாணவர்களுக்கு புகலிடம் தந்த காசி பல்கலைக்கழகம் ராமமூர்த்திக்கும் இடம் தந்தது. நான்காண்டு காலம் அங்கு பயின்றார். அக்கால கட்டத்தில் தான் விடுதலைப் போரின் பல்வேறு போக்குகளை அவர் அறிந்து கொண்டார். சுயராஜ்ஜியம் பெற இந்தியர்களுக்கு அருகதை உண்டா? என விசாரணை செய்யும் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சைமன் குழு காசி வந்த போது மக்கள் எதிர்ப்புக்குப் பயந்து படகுகள் மூலம் கங்கை ஆற்றின் வழியாக ராம் நகர் செல்ல குழு திட்டமிட்டது. இதனை அறிந்த ராமமூர்த்தியும் அவரது மாணவ நண்பர்களும் படகுகளில் சென்று நடு ஆற்றில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்து சைமன் கமிஷனை அலற வைத்தனர். 1930ல் பி.எஸ்சி இறுதித் தேர்வு முடிந்த மறுநாளே அந்நியத் துணி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதால் பதேகர் சிறையில் ஆறு மாத காலம் அடைக்கப்பட்டார்.இதுதான் அவரது முதல் சிறைவாசம். 1932 ல் திருவல்லிக்கேணியில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று ஆறு மாத காலம்  தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சத்தியாகிரகக் காலத்தில் தான் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமீர் ஹைதர் கான் போன்றவர்களோடு தொடர்பு கிடைத்தது.

   பி. ராமமூர்த்தி காங்கிரஸ் கமிட்டியும் காந்தியும் அழைத்த விடுப்பை ஏற்று ஹரிஜன சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திவ்ய பிரபந்தம் சொல்லிக் கொடுத்து மார்கழி மாதம் பனிக்காலைப் பொழுதில் கோயிலை சுற்றி பாடி வரச் செய்தார். கோவில் வாசல் வரை இந்த பஜனை கோஷ்டி வந்து பின் கலைந்து விடும். ஆயினும் வைதீக பிராமணர்கள் மத்தியில் இது கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த நொண்டி ராமமூர்த்தியின் இன்னொரு காலையும் ஒடித்து விடுவேன் என்று சம்பகேச ஐயங்கார் சபதம் எடுத்தார்.

   இந்தச் சமயத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது; கோயிலுக்குப் பக்கத்தில் கூட போகக்கூடாது என்றிருந்த பார்த்தசாரதி கோயில் தர்மகர்த்தா தேர்தல் வந்தது. இக்கோயில் சட்ட விதி 18 வயது நிரம்பிய தென்கலை வைஷ்ணவர்கள்  வாக்களிக்கலாம்; வருடத்திற்கு நான்கு அணா சந்தா செலுத்தி இருக்க வேண்டும். கோவில் அருகே குடியிருப்பவராக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.

   இதனை முறியடிக்கும் விதத்தில் ராமமூர்த்தி ஓர் உத்தியைக் கையாண்டார். திருவல்லிக்கேணி சார் ஜெண்ட் குடியிருப்பு அருகில் உள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளிகளை அணுகினார். அவர்கள் எப்போதும் ராமனையும் கிருஷ்ணனையும் வணங்குபவர்கள். அவர்களில் 200 ஆண்களைத் தெரிவு செய்து அவர்களது தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளம் போடுவதை செய்து அதற்கு ஏற்ப சில சின்ன மந்திர வாக்கியங்களையும் கற்றுக் கொடுத்தார். இதற்கு ஷமா ஷயம் என்று பெயர். அவர்களை அழைத்து போய் வாக்காளர்களாக பதியும்படி கூறினார். கோவில் நிர்வாகிகள் மறுக்கவே சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

   வழக்கு விசாரணையின் போது நீதிபதி செருப்பு தைக்கும் தொழிலாளிகளை பார்த்து உங்களது குரு யார்? என்று வினவ அதற்கு அவர்கள் அனைவரும் ஒரே குரலில் என் குரு சாத்தாணி ஐயங்கார் என்று கூறி சங்கு சக்கர அடையாளத்தையும் காட்டினார்கள். இவ்வழக்கில் 200 பேர் சார்பாக வாதாடிய டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிக்கு பி. ராமமூர்த்தி உதவினார். எவ்விதத்தில்? பாஞ்சராத்ரம் ஆகமத்தில் இருந்த எந்தவொரு வைணவனும் இன்னொரு வைணவனைப் பார்த்து நீ என்ன சாதி என்று கேட்டால், அவன் தன் தாயுடன் உடலுறவு கொண்ட பாவத்தைச் செய்தவனாவான் என்ற மேற்கோளை எடுத்துக் கூறி உதவினார்.இந்த மேற்கோள் நீதிமன்றத்தை உலுக்கியது. இறுதியில் 200 பேருக்கும் வாக்குரிமை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வைதீகர்கள் உயர் நீதிமன்றம் சென்றனர். அங்கும் அவர்களுக்கு தோல்வியே  ஏற்பட்டது.

  வேறு வழியின்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை வைதீகர்கள் ஏற்றுக் கொண்டாலும் சொத்து இல்லாதவர்கள் தர்மகர்த்தாவாக ஆக முடியாது என்ற விதியைக் காட்டி தர்மகர்த்தாவாக மாறுவதை தடுத்தனர்.இருப்பினும் இத்தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் முதன்முதலாக வாக்களித்தது பெரும் வெற்றியே. நாடெங்கும் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடந்து வந்த சூழலில் இந்த முயற்சி அதற்கு உறுதுணையானது. 1935 ஜனவரி 18 ஆம் நாள் மகாத்மா காந்தி தமது ஹரிஜன் என்ற ஏட்டில் இத்தீர்ப்பு குறித்து, வழக்கு குறித்து விரிவாக எழுதி இத் தீர்ப்பை வரவேற்றார்.




   இவ்வாறாக அனைத்து விதமான மக்களுக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் மக்களின் நலனையே / தரத்தையே உயர்த்தி பிடிப்பார்கள் என்பதற்கு இலக்கணமாக,  எடுத்துக்காட்டாக விளங்கிய தோழர்களால் அன்போடு தோழமையோடு பி.ஆர் என்று அழைக்கப்படும் தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு தினம் இன்று.

தென் பெண்ணையாறு சிக்கல் – தமிழகம் - கர்நாடகம் நதிநீர்ச் சிக்கல்

தென் பெண்ணையாறு சிக்கல் – தமிழகம் - கர்நாடகம் நதிநீர்ச் சிக்கல் 

தமிழகத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் சிக்கலைக் குறித்து விசாரிக்க நதிநீர் நடுவண் மன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் 3 மாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி. கர்நாடகம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி தமிழகத்துக்கு வருகிற நீர்வரத்தைத் தடுக்க நினைக்கிறது என்று தமிழகம் பலமுறை எடுத்துரைத்தும் மேல் நடவடிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தென்பெண்ணை ஆற்றின் சிக்கலைத் தீர்க்க நதிநீர் நடுவண் மன்றத்தை 3 மாத காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்திருப்பது தமிழகத்திற்கு மிகவும் ஆறுதலான செய்தி.

#தென்_பெண்ணையாறு_சிக்கல் 

#ksrpost
15-12-2022.


#*அண்ணாவுக்கு தெரிந்த, திமுக நிறுவிய கால உறுப்பினர்,91வயதைக் கடந்த இலட்சியவாதி*! #*புதுக்கோட்டை புலவர் துரைமதிவாணன்*



—————————————
91 வயதைக் கடந்த அண்ணன் புதுக்கோட்டை புலவர் துரை.மதிவாணன் அவர்களின் 90 ஆம் அகவை மலரைப் பார்க்கும்போது பழைய அரசியல் நிகழ்வுகள் கண்முன்னே நிற்கின்றன.
 9 ஆம் வகுப்பு படிக்கும்போதே திராவிட இயக்கக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட அண்ணன் மதிவாணன், அதன் பிறகு, தீவிர அரசியல் செயற்பாட்டாளராக மாறிவிடுகிறார். 1953 இல் நடந்த மும்முனைப் போராட்டத்தின் ஒருபகுதியான ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, திருச்சி சிறையில் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கிறார். 
 திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான அண்ணா,  ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, இரா.நெடுஞ்செழியன்,கலைஞர்,
மதியழகன், என்.வி.நடராசன் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த புலவர் மதிவாணன்,  திமுக திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை கைவிட்டதால் 1963 – இல் திமுகவை விட்டு வெளியேறுகிறார். தமிழ் தேசிய உணர்வுடன் செயல்பட  விரும்பிய அவருக்கு அண்ணன் பழ.நெடுமாறன் தொடர்பு கிடைக்கிறது. 
 புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியின் திமுகவின் முதல் உறுப்பினரான  (1981) அண்ணன் மதிவாணன், என்மேல் அளவிடற்கரிய அன்பு உடையவர். எந்த பொருள் குறித்த ஐயம் என்றாலும் அவர் என்னிடம் கேட்பதும், நான் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் எங்களுக்குள் உறவுப் பாலத்தை உறுதியாக அமைத்திருக்கிறது. அண்ணன் மதிவாணன் நீண்ட நாட்கள் வாழ்க என வாழ்த்தவே இந்தப் பதிவு.

#ksrpost
15-12-2022.

#இந்திய_அரசியலில் நான் நீண்ட காலமாக கவனித்த பல விடயங்களுக்கு பதில் தெரியவில்லை. அவற்றில் சில: 1. நேதாஜி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தும் அவர் செயல்படாமல் போனதற்குக் காரணம் என்ன? 2. நேதாஜி மீது பிரிட்டிஷார் களங்கம் கற்பித்ததை திரும்பப் பெற இந்திய அரசு முயற்சிகள் எடுக்கவில்லையே... ஏன்? 3. பகத்சிங்கை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்ற நாம் ஏன் முயலவில்லை? 4. நாடு விடுதலை பெற்ற பின் இதுவரை ஏறத்தாழ 105 திருத்தங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 250 ஆண்டுகளாகியும் அமெரிக்க அரசியல் சாசனத்தில் 17 - 18 திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. அதன் பக்கங்கள், பிரிவுகளும் குறைவே.அம்மாதிரியான அரசியல் சாசனம் நமக்கு ஏன் அமையவில்லை? 5. ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி 70 ஆண்டுகளுக்கு முன கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ள பண்டித நேருவுக்கு ஏன் தயக்கம் ஏற்பட்டது? 6. ஆனால், பாதுகாப்பு கவுன்சில் சீனா இடம் பெற, நேரு காலத்தில் அதை ஆதரித்ததும் ஏன்? 7. கடந்த 1962 - இல் சீனப் போரில் இந்தியா இழந்த இடங்கள் அதிகம். அது எப்படி என்று பின்பு ஆராயப்பட்டதா? அந்தப் போரின் காரணமாக வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து விலகச் சொன்னது போல, நாம் இழந்த இடங்களைக் குறித்து ஏன், எப்படி என்று விவாதித்தோமா?. 8. இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து ராஜீவ் காந்தி பிரதமராகும் வரை சோனியா காந்தி இந்தியாவின் பிரஜா உரிமை பெறவில்லை இத்தாலி பிரஜை என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் வினா எழுப்பினார். பிரதமர் வீட்டுப் பெண்ணாக இருந்து கொண்டு பிற நாட்டு பிரஜையாக சோனியா காந்தி நீண்டகாலமாக வாழ்ந்தாரே… அது ஏன்? 9. இந்திய - சீனா உறவுகள் பதற்றமாக இருந்த நிலையிலும், காங்கிரஸ் கட்சி டிரஸ்டுக்கு சீன தூதரகம் 1.35 கோடி ரூபாய் ஏன் நன்கொடை கொடுத்தது? அதை காங்கிரஸ் கட்சி பெறலாமா? இந்திய அரசியல் களத்தில் இம்மாதிரி பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. பதில்கள்தாம் பிடிபடவில்லை.இன்னும் இப்படி பல வினாக்கள் உண்டு. #ksrpost 15-12-2022.

#இந்திய_அரசியலில் நான் நீண்ட காலமாக கவனித்த பல விடயங்களுக்கு பதில் தெரியவில்லை. அவற்றில் சில:







1. நேதாஜி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தும் அவர் செயல்படாமல் போனதற்குக் காரணம் என்ன? 

2. நேதாஜி மீது பிரிட்டிஷார் களங்கம் கற்பித்ததை திரும்பப் பெற இந்திய அரசு முயற்சிகள் எடுக்கவில்லையே... ஏன்? 

3. பகத்சிங்கை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்ற நாம் ஏன் முயலவில்லை?

4. நாடு விடுதலை பெற்ற பின் இதுவரை ஏறத்தாழ 105 திருத்தங்கள் இந்திய அரசியல் சாசனத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் 250 ஆண்டுகளாகியும் அமெரிக்க அரசியல் சாசனத்தில் 17 - 18  திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. அதன் பக்கங்கள், பிரிவுகளும் குறைவே.அம்மாதிரியான அரசியல் சாசனம் நமக்கு ஏன் அமையவில்லை?

5. ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி 70 ஆண்டுகளுக்கு முன கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ள பண்டித நேருவுக்கு ஏன் தயக்கம் ஏற்பட்டது?  

6. ஆனால், பாதுகாப்பு கவுன்சில் சீனா இடம் பெற, நேரு காலத்தில் அதை ஆதரித்ததும் ஏன்?

7. கடந்த 1962 - இல் சீனப் போரில் இந்தியா இழந்த இடங்கள் அதிகம். அது எப்படி என்று பின்பு ஆராயப்பட்டதா? அந்தப் போரின் காரணமாக வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து விலகச் சொன்னது போல, நாம் இழந்த இடங்களைக் குறித்து ஏன், எப்படி என்று விவாதித்தோமா?.

8. இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து ராஜீவ் காந்தி  பிரதமராகும் வரை சோனியா காந்தி இந்தியாவின் பிரஜா உரிமை பெறவில்லை இத்தாலி  பிரஜை என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் வினா எழுப்பினார். பிரதமர் வீட்டுப் பெண்ணாக இருந்து கொண்டு பிற நாட்டு பிரஜையாக  சோனியா காந்தி நீண்டகாலமாக வாழ்ந்தாரே… அது ஏன்?

9. இந்திய - சீனா உறவுகள் பதற்றமாக இருந்த நிலையிலும், காங்கிரஸ் கட்சி டிரஸ்டுக்கு சீன தூதரகம் 1.35 கோடி ரூபாய் ஏன் நன்கொடை கொடுத்தது? அதை காங்கிரஸ் கட்சி பெறலாமா?  

இந்திய அரசியல் களத்தில் இம்மாதிரி பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. பதில்கள்தாம்  பிடிபடவில்லை.இன்னும் இப்படி பல வினாக்கள் உண்டு.

#ksrpost
15-12-2022.

SEP 12