Monday, July 20, 2015

மார்க் டுவெய்ன் - Mark Twain





மார்க் டுவேய்ன் 1869ம் ஆண்டு தன்னுடைய ”தி இன்னோசண்ட் அப்ராட்” என்ற பயண நூலை படைத்தார். 1867ல்  ஐரோப்பா மற்றும் புனித ஸ்தலங்களுக்கு மேற்கொண்ட  பயணங்களைக் குறித்து இந்நூலில் அற்புதமாகவும் லாவகமாகவும் வடித்துள்ளார். மார்க் டுவேன்ய் படைப்புகளில் இது படிக்கவேண்டிய நூலாகும்.

அவர் காலத்தில் வெளியிட்ட நூலின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அந்த புத்தகத்தை கையினால் தொட்டுப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் ஏற்படுகின்றது.

சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்; மார்க் டுவெய்ன் (Mark Twain) எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார்.

இவர் எழுதிய , டாம் சாயரின் சாகசங்கள்(The Adventures of Tom Sawyer) ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn), என்பன குறிப்பிடத்தக்க நூல்களாகும்.  அவற்றில், ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் அமெரிக்காவின் சிறந்த நாவலாகும்.

இவர் அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார். இவர் வளர்ந்த இடமான ஹன்னிபல், மிஸ்ஸௌரியே இவரின் கதை களத்திற்க்கு உருவம் கொடுத்தது, முதலில் இவர் ஒரு அச்சகத்தில் ஊதியம் இல்லா வேலையாளாக பணிபுரிந்தார். பின்னர், எழுத்து அமைப்பராக தன் மூத்த அண்ணன் ஒரியனின் பத்திரிக்கையில் பணிபுரிந்தார்.

அவருடைய அறிவும் நையாண்டியும், அவருக்கு நிறைய நண்பர்களை சம்பாதித்து கொடுத்தது. அவருடன் நாட்டின் அதிபர், கலைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஐரோப்பிய உயர் பதவி வகித்தவர்கள் என அனைவரும் நட்பு பாரட்டினர்.

தன் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வெவ்வேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார். அவர் ஹாலி வால் மீன் வானத்தில் தோன்றிய போது பிறந்தார், அவ்வால் மீன் மீண்டும் வரும் போது நான் மறித்து போவேன் என கணித்தார். அது போல ஹாலி வால் மீனின் அடுத்த தோன்றலில் அவர் இறந்தார்.



On this day in 1869 Mark Twain's The Innocents Abroad was first published.

This second book, the most popular one in his lifetime, was a distillation of the newspaper articles Twain had written during his trip to Europe and the Holy Land in 1867. Even with the distilling, Twain said he regarded the book as God regarded the world: "The fact is, there is a trifle too much water in both.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-07-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #MarkTwain

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...